திருநாவுக்கரசர் - தனித்திருக்குறுந்தொகை
தனித் திருக்குறுந்தொகை - திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர் குறிப்பு எழுதுக.
Ø
திருநாவுக்கரசர்
63 நாயன்மார்களில்
ஒருவர்.
Ø
தேவாரம்
பாடிய மூவரில் இரண்டாமவர் ஆவார்.
Ø
இவர்
சோழநாட்டின் திருமுனைப்பாடியில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் பிறந்தார்.
Ø
தந்தை
– புகழனார்
Ø
தாய்
– மாதினியார்
Ø
தமக்கை – திலகவதி
Ø
காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு
Ø
இவருடைய இயற்பெயர் மருள்நீக்கியார்.
Ø
இளமையில்
சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தைத் தழுவினார். மீண்டும் தமக்கை திலகவதியால் சைவ
சமயத்தவரானார்.
Ø
திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார்.
Ø
"கூற்றாயினவாறு
விலக்கலீர்" எனத் தொடங்கும் முதல் பாடலைப் பாடியுள்ளார்
Ø
இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4,
5, 6 ஆகிய திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன.
Ø இவர்
இறைவனை தாச மார்க்கத்தில் (தொண்டு வழியில், அடிமை நெறியில்) வழிபட்டார்.
Ø
81ஆவது வயதில் திருப்புகலூரில் இறைவனடி
சேர்ந்தார்.
திருநாவுக்கரசரின் வேறு
பெயர்கள்
v
தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது பெற்ற பெயர்
v
நாவுக்கரசர், திருநாவுக்கரசர் – நாவின் வன்மையால் அதாவது தேவாரப்
பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர்
v
அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்
v
உழவாரத் தொண்டர் - சிவாலயங்களைத் தூய்மை செய்தமையால் பெற்ற பெயர்.
v
தாண்டக வேந்தர் – தாண்டகம் என்னும்
விருத்த யாப்பினைப் பாடியமையால் கிடைத்த பெயர்
திருநாவுக்கரசர் நிகழ்த்திய
அற்புதங்கள்
v
சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும்
வேகாது உயிர் பிழைத்தார்.
v
சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்.
v
சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது.
v
சமணர்கள் கல்லிற் சேர்த்துக் கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக்
கரையேறினார்.
v
சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றார்.
v
வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடினார்.
v
காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கித் திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக்
கரையேறினார்.
v
விடத்தினால் இறந்த மூத்த திருநாவுக்கரசரை உயிர்ப்பித்தார்.
பாடல் எண்:
1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
பாடல் எண்: 2
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
பாடல் எண்: 3
ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
தோளாத சுரையோ தொழும்பர்செவி
வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே.
பாடல் எண்: 4
நடலை வாழ்வுகொண்டு என்செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிர மாணமே
கடலின் நஞ்சு அமுதுண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந்து ஊர்முனி பண்டமே.
பாடல் எண்: 5
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை யாகிக் கழிவரே.
பாடல் எண்:
6
குறிகளும் அடையாளமும்
கோயிலும்
நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும்
பொறி இலீர்மனம் என்கொல் புகாததே.
பாடல் எண்: 7
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா வினையேன்நெடுங் காலமே.
பாடல் எண்
: 8
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான்
தொழுது போற்றிநின் றேனையும் சூழ்ந்துகொண்டு
உழுத சால்வழியே உழுவான்பொருட்டு
இழுதை நெஞ்சம் என்படு கின்றதே.
பாடல் எண்:
9
நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்
பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு
நக்கு நிற்பர் அவர்தம்மை நாணியே.
பாடல் எண்: 10
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
சிவனின் திருவருளால் நம் வினைகளைக் களைய முடியும் என
திருநாவுக்கரசர் குறிப்பிடும் பதிகக் கருத்துகளை விளக்கி எழுதுக.
இறைவனின்
திருவடி நிழலின் தன்மை
இறைவனாகிய எந்தையின்
திருவடி நிழல் குற்றமற்ற வீணையின் நாதம் போன்றது
மாலையில் தோன்றும்
நிலவின் தண்மை அல்லது குளிர்ச்சி போன்றது
மூக்குக்குப் புத்துணர்ச்சி
ஊட்டும் தென்றல் காற்று போன்றது
உடலுக்கு மிதமான
வெப்பம் தரும் செறிந்த இளவேனில் காலத்தின் மாட்சி போன்றது
ஒலிக்கும் வண்டுகள்
மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சி போன்றது
அவனின் திருவடி நிழல்
இன்பம் தரும் தன்மை கொண்டதாகும்.
இறைவனின்
திருமந்திரத்தின் (நமச்சிவாய மந்திரம்) தன்மை (பெருமை)
நமச்சிவாய மந்திரம்
கல்வியை வழங்கும்
கல்வியின் மூலம்
ஞானத்தை உருவாக்கும்
நமச்சிவாய மந்திரம்
தான் வித்தைகளை அறிய வைக்கும்
எனது நா இடைவிடாது
சொல்லும் மந்திரமும் நமச்சிவாய மந்திரமே ஆகும்.
இந்த நமச்சிவாய மந்திரம்
நன்னெறியைக் காட்டும். அதாவது வீடுபேற்றைத் தரும் என நாவுக்கரசர் நமச்சிவாய மந்திரத்தின்
பெருமையை எடுத்தியம்பியுள்ளார்.
சிவபெருமானின்
அடியவர் ஆகாதவர்களின் நிலைமை
சிவபிரானின் அடியவராக
மாறாதவர்கள் இறைவனுக்கு உரியவர் ஆகா மாட்டார்கள்.
சிவபிரானின் அடியார்களை
அணுகி அவர்களிடமிருந்து உய்யும் வழியினை அறியவும் மாட்டார்கள்.
அந்த வழியில் செல்லவும்
மாட்டார்கள்;
சிவபிரானுக்கு அடிமையாக
இருந்து மெய்ப்பொருளை உணரவும் மாட்டார்கள்.
அவர்கள் தங்கள் காதுகளால்
சிவபிரானின் நாமத்தைக் கேட்கவும் மாட்டார்கள்.
அதனால் அவர்களின்
வாழ்க்கை எந்த பயனையும் அடையாமல் வீணாக இறந்து மண்ணாகி ஒழிவர்.
பிறவி
ஒழிந்து பேரின்பம் அடைய செய்ய வேண்டுவன
துன்பம் மிக்க இந்த
வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் செய்வதுதான் என்ன, நாணம் இல்லாதவர்களே சொல்வீர்களாக.
இறுதியில் நீங்கள்
இறந்து சுடுகாடு செல்வது உறுதி.
மரணம் என்பது தவிர்க்க
முடியாதது என்பதற்கு ஆன்றோரின் சொற்களே சான்று.
திருபாற்கடலில் பொங்கி
எழுந்த ஆலகாலவிடத்தை உண்டு உலகினைப் பாதுகாத்த சிவபிரான் கைவிட்டால், நமது உடல் ஊரார்
அனைவரும் பழிக்கத் தக்க பொருளாக, இழிந்த பொருளாக மாறிவிடும்.
உயிரற்ற உடல் அனைவராலும்
வெறுக்கத் தக்கது
எனவே சிவனின் அருளால்
இனி வரும் பிறவியையும் அதனால் நிகழப்போகும் இறப்பையும் தடுத்து பேரின்பம் அடைய நாம்
முயற்சி செய்யவேண்டும்.
சிவனை
வழிபாடு அல்லது வணங்காதவர்களின் நிலைமை
சிவபிரானின் பொன்
போன்ற திருவடிகளைத் தங்களது கைகளால் பூக்கள் தூவி வழிபாடு செய்யாதவர்கள்,
தங்களது நாவினால்
சிவபிரானது திருமாமத்தைச் சொல்லாதவர்கள்,
தங்களது வாழ்க்கையை
தங்களது உடலினை வளர்ப்பதற்காக உணவினைத் தேடி அலைந்து வீணாக நாட்களைக் கழித்தவர்கள்,
இவர்கள் அனைவரும்
இறுதியில் தங்களது உடலினைக் காக்கைக்கு உணவாகி ஒழிந்து விடுவர்.
இதைத் தவிர வெறு
எந்தப் பயனான காரியம் எதுவும் அவர்களால் நடைபெறுவதில்லை என்று திருநாவுக்கரசர் குறிப்பிட்டுள்ளார்.
மனம் இறைவனை உணராமல் இருப்பதற்கான
காரணம்
சிவபிரானின் திருவுருவங்கள்,
அவனை அடையாளம் காட்டும்
சின்னங்கள் (நந்தி வாகனம், நந்திக்கொடி, திருநீறு, உருத்திராக்கம் ஆகியவை),
அவனை வணங்குவதற்கு
உரிய வழிபாட்டு இடம் (கோயில்)
அவனை வணங்கும் சைவ
நெறி,
அவனது நேர்மைப் பண்பு
இவற்றை எல்லாம் நாம்
தெரிந்து கொள்ளுமாறு வேதங்கள் ஆயிரம் முறைகள் கூறியிருக்கின்றன.
ஆயினும் உங்களது
மனத்தில் அந்த உண்மைகள் ஏன் புகுவதில்லை. நீங்கள் அவற்றினை உணரக்கூடிய பொறிகள் ஏதும்
இல்லாமல் போய்விட்டனவோ? என்று திருநாவுக்கரசர் இறைத்தனைமையை உணராதவர்கள் குறித்து வினவுகிறார்.
திருநாவுக்கரசரின் மனத்தின்
தன்மை
இறைவனை வாழ்த்த வாய்,
தன்னை நினைக்க அறிவற்ற நெஞ்சு,
தன்னை வணங்கத் தலை,
ஐம்பொறிகளையும் அளித்த தலைவனாகிய சிவபெருமானை
வண்டுகள் சூழ்ந்த மலர்களைத் தூவித் துதிக்காமல், வீணாக எனது வாழ்நாளில் பெரும்பகுதியைக்
கழித்து விட்டேனே? என்று வருத்தமுற்ற தன் மனத்தின் நிலையைத் திருநாவுக்கரசர் எடுத்துரைத்துள்ளார்.
எழுதிய பாவைச் சித்திரம்
போன்று அழகு உள்ள பெண்களின் தொடர்பினை நீக்கி விட்டு நான் இறைவனைத் தொழுது போற்றி வணங்குகின்றேன்.
ஆனால் எனது இழிந்த
மனது மறுபடியும் மறுபடியும் உழுத சால் வழியே மீண்டும் மீண்டும் உழுவதைப் போன்று உலகச்
சிற்றின்பங்கன் மீது என் மனம் செல்கின்றதே, நான் என் செய்வேன்? என்று தன் மனத்தின்
நிலையில்லாத் தன்மையினை எடுத்துரைத்துள்ளார் திருநாவுக்கரசர்.
இறைவனின் பண்பு நலன்கள்
உள்ளம் நெகிழ்ந்து
நெகிழ்ந்து வழிபடுபவர் மனதினில் புகுந்து உறைவான்.
பொன் போன்ற சடையினை
உடையவன்
பொய்ம்மையாளர் செய்யும்
வழிபாட்டினை உணர்ந்து அவர்களின் அறியாமையை நினைத்து அவர்களை நோக்கி ஏளன நகையுடன் சிரித்து
நிற்பான்.
விறகில் தீ போன்றவன்
பாலில் பொருந்திய
நெய் போன்றவன்
சாணை பிடிக்கப்படாத
மாணிக்கக் கல்லில் ஒளி போன்றவன்
நமது கண்களுக்கு
புலப்படாமல் நிற்கின்றவன்.
ஆனால் நமக்கும் அவனுக்கும்
இடையே இருக்கும் ஆண்டவன் பக்தன் என்னும் உறவாகிய மத்தினைக் கயிற்றினால் இறுகக் கட்டி
கடைந்தால் இறைவன் நமது முன்னே வந்து தோன்றும் இயல்பினை உடையவன் என்று திருநாவுக்கரசர்
இறைவனின் இயல்புகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக