இலக்கணம் - முதலெழுத்து, சார்பெழுத்து
முதலெழுத்து
உயிரெழுத்து 12
மெய்யெழுத்து 18 என 30 எழுத்துகளும் முதலெழுத்து எனப்படும்.
சார்பெழுத்து
சார்பெழுத்து 10 வகைப்படும். அவை 1. உயிர்மெய், 2. ஆய்தம், 3. உயிரளபெடை, 4. ஒற்றளபெடை, 5. குற்றியலுகரம், 6. குற்றியலிகரம், 7. ஐகாரக்குறுக்கம், 8. ஔகாரக்குறுக்கம், 9. மகரக்குறுக்கம், 10. ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.
குற்றியலுகரம்
குறுமை+ இயல்+உகரம் எனப் பிரித்து குறுகிய ஓசையில் ஒலிக்கும் உகரச்சொற்கள் குற்றியலுகரம் எனலாம்
சொல்லின் இறுதியில் வரும் கு, சு, டு, து, பு, று என்ற ஆறு வல்லின உகரங்களும் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரையாக ஒலிக்கும். இது குற்றியலுகரம் எனப்படும்
(எ.கா) எஃகு, காசு, பாட்டு, பத்து, சால்பு, பயறு
குற்றியலுகரம் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். குற்றியலுகரச் சொற்கள் தனக்கு முன் பெற்று வரும் எழுத்தைக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளன.
அவை 1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
1. நெடில்தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடில் எழுத்தைத் தொடர்ந்து உகரச் சொற்கள் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக வரும்.
( எ.கா) மாடு, ஆடு, பாடு, காடு, காசு, பாகு, ஆறு, காது, மாசு
2. ஆய்தத் தொடர்க்குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் ஆய்தத் தொடர் குற்றியலுகரச் சொற்கள் எனப்படும்
( எ.கா.) அஃது, எஃகு, கஃசு
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் உகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். தனிநொடில் அல்லாத உயிர்மெய் எழுத்துகளைப் பெற்று வரும்
(எ.கா.)கயிறு, அரசு, பயறு,அழகு
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய் (க், ச், ட், த், ப், ற்) எழுத்துகளைத் தொடர்ந்து வரும் உகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
( எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, உப்பு, பற்று
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் உகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா.) பங்கு, மஞ்சு, பஞ்சு, பண்பு, அம்பு, கம்பு, கன்று
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய்யெழுத்துகளைத் தொடர்ந்து வரும் உகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
( எ.கா.) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
கருத்துகள்
கருத்துரையிடுக