இலக்கண வரலாறு

     

இலக்கண வரலாறு

முன்னுரை

          எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப் பெறுவதைப் போல இலக்கியங்களிலிருந்து எடுக்கப் பெறுவது இலக்கணம் ஆகும். இது மொழியின் அமைப்பையும், பயன்படுத்தும் முறையையும் வரையறை செய்யும் விதிகளை எடுத்தியம்பும். இலக்கு + அண் + அம் எனப் பிரித்துப் பொருள் கொள்வர்.  இலக்கு – குறிக்கோள், அண் – நெருக்குதல், அம் – பெயராக்க விகுதி எனப் பொருள் கூறுவர். இலக்கணம் சிறந்த நடைக்கு எடுத்துக்காட்டாக அல்லது கற்றோர் பின்பற்றும் இலக்காகக் கூறப்பெறும் மொழி அமைதி ஆகும். மொழிக்கு இலக்காக, விளக்கமாக அமைவது இலக்கணம் எனக் கூறலாம்

இலக்கண வகை

தமிழ்மொழி இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை 1. எழுத்து இலக்கணம், 2. சொல் இலக்கணம், 3. பொருள் இலக்கணம், 4. யாப்பு இலக்கணம், 5. அணி இலக்கணம்

இவ்வைந்து வகை இலக்கணங்களை எடுத்துக்கூறும் இலக்கண நூல்கள் சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரை நிறைய நூற்கள் தோன்றியுள்ளன. அவ் இலக்கண வரலாறு குறித்து இக்கட்டுரை குறிக்கிறது.  

அகத்தியம்

Ø  தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல்

Ø  முற்சங்க வரலாற்றில் இடம்பெற்ற நூல்

Ø  இந்நூலின் ஆசிரியர் அகத்தியர்

Ø  அகத்தியம் 12000 நூற்பாக்களைக் கொண்டிருந்தது.

Ø  எழுத்து, சொல், பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், சோதிடவியல் முதலான இயல்களை அகத்தியம் கொண்டிருந்தது.

Ø  இந்நூல் நமக்குக் கிடைக்கப் பெறவில்லை

Ø ந்நூலின் நூற்பாக்கள் மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.

Ø  அகத்தியர் மாணவர் பன்னிருவர் (செம்பூண்சேய், வையாபிகனர், அதங்கோட்டாசான், அபிநயனர், காக்கைப்பாடினியார், தொல்காப்பியன், வாய்ப்பியர், பனம்பாரனார், கழாகரம்பர், நத்தத்தர், வாமனர், துராலிங்கர் என்பவர்)

தொல்காப்பியம்

Ø  தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

Ø  முற் சங்கத்தில் தோன்றிய நூல்

ஒல்காப் புகழ் தொல்காப்பியம் என்னும் சிறப்பினை உடையது

Ø  இதன் ஆசிரியர் தொல்காப்பியர்

Ø  இவர் அகத்தியரின் மாணவர்

Ø  தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடியவர் பனம்பாரனார்

இந்நூல் நிலந்தரு திருவின் நெடியோன் என்னும் மன்னனின் அவையில் அரங்கேற்றப்பட்டது

இவ்வரங்கேற்றத்தில் அதங்கோட்டு ஆசான் முன்னிலை வகித்தார்

மொழிக்கும் இலக்கியத்திற்கும் மட்டுமல்லாது அம்மொழி பேசும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் கூறும் நூலாகும்

இந்நூல் 1610 நூற்பாக்களைக் கொண்டது

Ø  இந்நூல் மூன்று அதிகாரங்களைக் கொண்டது

Ø  ஒவ்வொரு அதிகாரங்களும் ஒன்பது இயல்களைக் கொண்டது

Ø  இந்நூலில் 27 அதிகாரங்கள் உள்ளன

Ø  இது ஐவ்வகை இலக்கண நூலாகும்

Ø  எழுத்ததிகாரம் நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளன.

இவ்வதிகாரத்தில் எழுத்துகளின் வகை, எண்ணிக்கை, முதல் எழுத்துகள், இறுதி எழுத்துகள், ஒலிகள் பிறக்கும் முறை, எழுத்துகளின் புணர்ச்சி வகைகள், இசை இலக்கணம், தமிழ் மாதப் பெயர்கள் ஆகியன குறித்து விளக்கப்பட்டுள்ளன

Ø  சொல்லதிகாரம் கிளவியாக்கம், வேற்றுமை இயல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு, பெயரியல், வினை இயல், இடையியல், உரியியல், எச்சவியல் என்ற இயல்களைக் கொண்டுள்ளன

சொல்லதிகாரம் சொல்வகைகள், தொடர் வகைகள், திணைப் பாகுபாடு ஆகியன குறித்து எடுத்துரைக்கின்றது

Ø  பொருளதிகாரம், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் போன்ற இயல்களைக் கொண்டது.

இவ்வதிகாரம் இலக்கியம் படைப்புக் கோட்பாடு மற்றும் மனித வாழ்வியல் கோட்பாடு குறித்தும் கூறுகிறது

Ø  இது கி.மு.4 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூலாகும்

இறையனார் களவியல் உரை

Ø  இறையனார் களவியல் என்னும் நூல் தமிழரின் அக வாழ்க்கையைப் பற்றிக் கூறும் அக இலக்கண நூல்.

Ø  இதனை இறையனார் அகப்பொருள் என்றும் குறிப்பிடுகிறோம்.

Ø  இந்நூலிற்கு நக்கீரர் என்பவர் உரை எழுதியுள்ளார்.

Ø  இந்நூலின் காலம் கி.மு.  7-ஆம் நூற்றாண்டு

Ø  இந்நூலின் ஆசிரியர் இறையனார் ஆவார்

Ø  இந்நூல் அகப்பொருளுக்கு மட்டும் இலக்கணம் கூறும் ஆகும்

இந்நூல் இருபிரிவுகளைக் கொண்டது

1. களவுப் பிரிவு - 33 நூற்பாக்கள்

2. கற்புப் பிரிவு - 27 நூற்பாக்கள்

இந்நூலில் 60 நூற்பாக்கள் உள்ளன

இந்நூல் முச்சங்க வரலாறு மற்றும் கடல்கோள்கள் குறித்தும் குறிப்பிடுகிறது

நம்பியகப் பொருள்

Ø  நம்பி அகப்பொருள் அகப்பொருளுக்கு இலக்கணம் கூறும் நூல்

Ø  இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராச நம்பி

Ø  இந்நூல் 252 நூற்பாக்களால் ஆனது.

Ø  இந்நூல் ஐந்து இயல்களைக் கொண்டது. அவையாவன, அகத்திணையியல் (116 நூற்பா), களவியல் (54 நூற்பா), வரைவியல் (29 நூற்பா), கற்பியல் (10 நூற்பா), ஒழிபியல் (43 நூற்பா) என்பனவாகும்.

Ø  இந்நூலின் காலம் கி.பி.  12-ஆம் நூற்றாண்டு

 

புறப்பொருள் வெண்பாமாலை

Ø  இந்நூல் புறப்பொருள் இலக்கணம் கூறும் நூலாகும்.

Ø  இதன் காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு ஆகும்.

Ø  புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார்.

Ø  புறப்பொருளைப் புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளாகப் பகுத்துள்ளது.

Ø  வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்ற பன்னிரண்டும் புறத்திணைகள் ஆகும்

Ø  இந்த 12 திணைகளையும் 3 பிரிவுகளாகப் பாகுபடுத்தி உள்ளார். அவை, புறம் - 7 (வெட்சி முதல் தும்பை ஈறாக), புறப்புறம் - 3 (வாகை, பாடாண், பொதுவியல்), அகப்புறம் - 2 (கைக்கிளை, பெருந்திணை) என்பன வாகும்.

நன்னூல்

Ø  நன்னூல் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்

Ø  பவணந்தி முனிவரால் எழுதப்பட்டது

Ø  எழுத்து, சொல் இரண்டிற்கும் இலக்கணம் கூறும் நூல்

Ø  நன்னூலில் 462 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

Ø  பாயிரம் - 55 நூற்பாக்கள், எழுத்ததிகாரம் - 202 நூற்பாக்கள், சொல்லதிகாரம் - 205 நூற்பாக்கள் என்பன வாகும்.

தண்டியலங்காரம்

Ø  தமிழின் அணி இலக்கணத்தைக் குறிப்பிடும் நூல் தண்டியலங்காரம் ஆகும்.

Ø  இது காவிய தர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது

Ø   இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்

Ø  தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பல்வேறு அணி வகைகளுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

Ø  தண்டி அலங்காரம் பொதுவியல் (25 நூற்பாக்கள்), பொருளணியியல் (64 நூற்பாக்கள்), சொல்லணியியல் (35 நூற்பாக்கள்) என்று மூன்றாகப் பிரித்து அணியிலக்கம் கூறுகிறது.

யாப்பருங்கலக்காரிகை

Ø  இந்நூலின் ஆசிரியர் அமுதசாகரர்

Ø  இந்நூலின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு

Ø  யாப்பருங்கலக்காரிகை என்னும் நூல் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது.

Ø  இது யாப்பிற்கு இலக்கணம் கூறும் நூல்

Ø  இந்நூல் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன, உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல்

Ø  உறுப்பியல் என்னும் இயல் செய்யுள் உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன பற்றிய இலக்கணங்களைக் கூறும்

Ø  செய்யுளியல் பாவகைகள், பாவினங்கள், அவற்றுக்குரிய ஓசைகள் முதலானவற்றின் இலக்கணங்களைக் கூறுகின்றது.

Ø  ஒழிபியலில் முதலிரு இயல்களில் கூறப்படாத யாப்பிலக்கணச் செய்திகளுக்கு இலக்கணம் கூறும்

முடிவுரை

          இலக்கண வராலற்றை நோக்கும் போது ஐவ்வகை இலக்கணம் கூறும் நூலாகத் தொல்காப்பியம் மட்டுமே உள்ளது. மற்ற இலக்கண நூற்கள் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வகைகளுக்கு மட்டும் இலக்கணம் கூறும் மரபைப் பார்க்க முடிகிறது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி