ஐங்குறுநூறு (வேட்கைப் பத்து - பாடல் -1)3 பொருள் விளக்கம்
ஐங்குறுநூறு வேட்கைப்பத்து - பாடல் 1,
பாடியவர் : ஓரம்போகியார்,
திணை : மருதம்
கூற்று : தோழி தோழி தலைவனிடம் சொன்னது
கூற்று விளக்கம் : பரத்தையர் உறவில் நெடுநாள் வாழ்ந்த தலைமகன் தன் பிழையுணர்ந்து தன் மனைவியை மீண்டும் கூடினாள். அப்பொழுது தோழியை நோக்கி, “நான் உங்களைப் பிரிந்து வாழும் நாட்களில் நீங்கள் என்ன எண்ணியிருந்தீர்கள்?” என வினவினான். அதற்கு விடையாகத் தோழி சொல்லியது.
பாடல்
வாழி ஆதன் வாழி அவினிநெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே.
ஐங்குறுநூற்றின் பாடல் கருத்தை எழுதுக
(அல்லது)
தலைவனின் பண்பை இழித்துரைக்கும் தோழியின் சொல் நயத்தைப் புலப்படுத்துக.
(அல்லது)
ஐங்குறுநூறு வெளிப்படுத்தும் தலைவியன் உயர்ந்த பண்பினைக் குறிப்பிடுக.
- சேர நாட்டைச் சேர்ந்த மன்னர்களான ஆதனும் அவினியும் வாழ்க என்று வாழ்த்தினோம்.
- நெற்கதிர்கள் விளைந்து அதிக விளைச்சல் தரட்டும்,
- பொன் சிறந்து விளங்கட்டும் என விரும்பி வாழ்த்தினாள் தலைவி
- நானும் அதையே விரும்புகிறேன்.
- மொட்டுக்கள் நிறைந்த காஞ்சி மரங்களும் சினையான சிறு மீன்களும் நிறைந்த செழித்த ஊரைச் சேர்ந்தவன் தலைவன் அவனும் வாழ்க! என வாழ்த்தினாள் தலைவி
- அவன் பாணனும் வாழ்க! என வேண்டினோம் எனத் தோழி தலைவனிடம் கூறினாள்.
- நறுமணம் கமழும் காஞ்சி மலர்களும், புலால் நாற்றம் வீசும் மீன்களும் ஒரு சேர விளையும் நாட்டைச் சேர்ந்தவன் தலைவன் அந்நிலத்தின் கருப்பொருள் கொண்டு தலைவனின் ஒழுக்கத்தின் இழிவு இகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது.
- ....................................................................................................
கருத்துகள்
கருத்துரையிடுக