புறாநானூறு 187 பாடல் பொருள் விளக்கம்
புறநானூறு 187
பாடியவர் : ஒளவையார்
திணை: பொதுவியல்
திணை விளக்கம் : பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத பொதுவான செய்திகளைக் கூறும் திணை. இது யாப்பு முதலான பிற இலக்கண நூல்களில் இடம்பெறுகிற ஒழிபியல் போன்றது ஆகும்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி
துறை விளக்கம் : சான்றோர் அனுபவத்தில் உணர்த்தும் உரைக்கும் உண்மைப் பொருளைப் புலவர் தம் பாடற் பொருளாகக் கொண்டு பாடுவது பொருண்மொழிக் காஞ்சி ஆகும். காஞ்சி என்றாலே நிலையாமையைக் குறிக்கும். உலகின் நிலையாமையை உணர்ந்து பொருளின் மீது கொண்ட பற்றினைத் துறந்து அருள் உள்ளம் கொண்டு வாழ்வதைக் குறித்துப் பாடும் பாடல்கள் இத்துறைக்குள் அடங்கும்.
ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை என்று விளக்குவதால் இது பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆனது.
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
ஆடவரின் சிறப்பு நிலத்திற்கு மேன்மை உண்டாக்கும் என்று குறிப்பிடும் புறநானூறுப் பாடலை விளக்குக.
(அல்லது)
நிலத்தின் உயர்வு (மேன்மை, பெருமை) எதைப் பொறுத்து அமையும் என்று விளக்கும் புறநாறூறுப் பாடலை விளக்குக.
(அல்லது)
ஆடவர் பண்பினால் சிறப்புடையவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் புறநானூறுப் பாடலைக் குறிப்பிடுக.
- நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக - பள்ளமாக) இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடம் பெருமை பெற்றுத் திகழும் .
- அந்நிலத்தை அனைவரும் போற்றி உரைப்பர். ஒரு நாடு சிறப்புப் பெறக் காரணமாக இருப்பது அந்நாட்டில் வாழும் ஆடவர்கள் தான் என்பதைக் குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது.
- ஒரு நாடு என்பது மருதம் (வயல் பகுதி), முல்லை (காட்டுப்பகுதி), நெய்தல் (கடல், அவல் - பள்ளம்) குறிஞ்சி (மலை, மிசை - மேடு) என்னும் நால்வகை நிலங்களும் இணைந்து காணப்படும் நிலப்பரப்பு ஆகும்.
- நிலத்தின் தன்மைக்கேற்ப மக்கட்பண்பு அமைவது வழக்கம் ஆகும். அத்தகைய மக்களின் பண்புகள் மேன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவ்வாறு இருந்தால்தான் நாடு வளம் பெற்றுப் சிறப்புப் பெறும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் கருத்து ஆகும்.
..........................................................................
கருத்துகள்
கருத்துரையிடுக