புறநானூறு பாடல் 189 பொருள் விளக்கம்
புறநானூறு 189
பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
திணை: பொதுவியல்
திணை விளக்கம் : பொதுவியல் திணை என்பது வெட்சி முதல் பாடாண் வரையிலான ஒன்பது திணைகளில் அடக்கிக் கூறமுடியாத பொதுவான செய்திகளைக் கூறும் திணை. இது யாப்பு முதலான பிற இலக்கண நூல்களில் இடம்பெறுகிற ஒழிபியல் போன்றது ஆகும்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி
துறை விளக்கம் : சான்றோர் அனுபவத்தில் உணர்த்தும் உரைக்கும் உண்மைப் பொருளைப் புலவர் தம் பாடற் பொருளாகக் கொண்டு பாடுவது பொருண்மொழிக் காஞ்சி ஆகும். காஞ்சி என்றாலே நிலையாமையைக் குறிக்கும். உலகின் நிலையாமையை உணர்ந்து பொருளின் மீது கொண்ட பற்றினைத் துறந்து அருள் உள்ளம் கொண்டு வாழ்வதைக் குறித்துப் பாடும் பாடல்கள் இத்துறைக்குள் அடங்கும்.
ஈதலாகிய அறத்தை விளக்குவதால் இப்பாடல் பொருண்மொழிக்காஞ்சித் துறை ஆனது.
தெண்கடல் வளாகம்
பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும்
கல்லா ஒருவற்கும்,
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் குமே;
அதனால், செல்வத்துப்
பயனே ஈதல்;
துய்ப்பேம்
எனினே, தப்புந போலவே!
செல்வத்தின் பயனைக் குறிப்பிடும் புறநானூறுப் பாடலை எழுதுக.
(அல்லது)
உலகில் உள்ள மக்கள் அனைவரும் சமம் என்பதை விளக்கும் புறநானூற்றுப் பாடலைக் குறிப்பிடுக.
(அல்லது)
நக்கீரனார் பாடிய புறநானூற்றுப் பாடலின் பொருளை விளக்கி எழுதுக.
- தெளிந்த கடல் சூழ்ந்திருக்கும் உலகம் அனைத்தையும் பிறருக்கு உரிமை இல்லாமல் தனக்கு மட்டும் உரிமையாகக் கொண்டவன்
- அவன் இவ்வுலகம் முழுவதும் தன் வெண்கொற்றக் குடைக்கீழ்க் கொண்டு வந்து ஆட்சி செய்பவன்
- அவன் இந்நாட்டின் அரசன் என்று அனைவராலும் புகழும் பெருமையுடையவன்
- பகல் இரவு என்று பாராமல் நள்ளிரவிலும் உணவுக்காக விலங்குகளைத் தேடிச் செல்பவன்
- கல்வி கற்காமல் விலங்குகளையே வேட்டையாடும் சிந்தனையில் திரிந்து கொண்டிருப்பவன்.
- இவ்வாறு அரசனாகப் பிறர் மதிக்கும் பெருமை கொண்டு வாழ்பவனாக இருந்தாலும், பிறர் இகழும் தொழிலைச் செய்யும் கல்லாத வேடனாக இருந்தாலும் இருவர்க்கும் இவ்வுலகம் ஓரே விதியைத் தான் கொண்டு இவ்வுலகம் இயங்குகிறது.
- இருவரும் உண்பது ஒரு படி உணவு. மேல் கீழ் என்று உடுத்துவது இரண்டே ஆடைகள்.
- பிறவற்றை எண்ணிப் பார்த்தாலும் இருவர் நுகர்வும் ஒன்றாகவே உள்ளது.
- அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறோம்.
- நாம் மட்டுமே பயன்படுத்தும் என்றால் மற்ற அறச்செயல்கள் எல்லாம் அவனை விட்டு நீங்கிச் சென்று விடும்.
- அதனால் நம் பெற்ற செல்வத்தின் பயனாகக் பிறருக்குக் கொடுக்கும் ஈதல் ஒன்றே மேற்கொண்டு நடக்க வேண்டும்
- அதாவது, தாம் மட்டும் அனுபவிக்க எண்ணினால் அச்செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழக்க நேரிடும்
- ................................................................
கருத்துகள்
கருத்துரையிடுக