குறுந்தொகைப் பாடல் 3 பொருள் விளக்கம்
குறுந்தொகை 3 ஆம் பாடல்
திணை : குறிஞ்சி
கூற்று : தலைவி கூற்று
பாடியவர்: தேவகுலத்தார். குறுந்தொகையில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளது.
கூற்று விளக்கம்: தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள். அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும் அருமையானதாகக் கருதுகிறாள். ஒருநாள் தலைவன் தலைவியைக் காண வருகிறான். தலைவன் காதில் கேட்கும்படியாக, அவர்களுடைய நட்பின் அருமையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.
பாடல்
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
குறுந்தொகை காட்டும் காதலின் சிறப்பை விளக்குக.
(அல்லது)
குறுந்தொகைப் பாடல் கருத்தைத் தொகுத்துரைக்க.
(அல்லது)
தலைவிக் கூற்றில் அமைந்துள்ள குறுந்தொகைப் பாடலை விளக்கி எழுதுக.
- மலைச்சாரலில், கரிய தண்டுகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களிலிருந்து அதிக அளவில் தேன் கிடைக்கும்
- அத்தேனை வண்டுகள் சேகரித்து வைக்கும் நாட்டைச் சார்ந்தவன் தலைவன்
- அந்நாட்டின் தலைவனுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பானது பூமியைக் காட்டிலும் பெரியது;
- ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது;
- கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது என்று தன் காதலின் சிறப்பைத் தோழியிடம் எடுத்துரைக்கிறாள் தலைவி.
..........................................................................................
கருத்துகள்
கருத்துரையிடுக