அற இலக்கியம் - நான்மணிக்கடிகை 11 பாடலும் விளக்கமும்

நான்மணிக்கடிகை 


நான்மணிக்கடிகை குறிப்பு எழுதுக.

Ø  நான்மணிக்கடிகை என்ற சொல்லுக்கு நான்கு மணிகள் பதிக்கப்பெற்று கழுத்தில் அணியும் அணிகலன் என்பது பொருள்.

Ø  இதனைப் போன்று ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்து பண்பை மேம்படுத்தி மனதிற்கு அழகு ஊட்டுவதால் இப்பெயர் பெற்றது.

Ø  இதன் ஆசிரியர் விளம்பி நாகனார்

Ø  104 பாடல்களைக் கொண்டது

Ø  வெண்பா யாப்பால் ஆனது

Ø  அம்மை என்னும் வனப்பினைச் சார்ந்தது

Ø  இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு

Ø  இந்நூலை ஜி.யூ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Ø  அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் என்ற சிலப்பதிகார கருத்து இந்நூலில் உள்ளது

Ø  கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும், மான் வயிற்றில் அரிதாரம் கிடைக்கும், கடலுள் முத்து பிறக்கும் என்பது போன்ற அரிய செயல்கள் இந்நூலில் உள்ளன


நான்மணிக்கடிகை பாடல் 11

நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணி என்ப தாமரை – பெண்மை

நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம்

தான்செல உலகத்து அறம்

 

நான்மணிக்கடிகை கூறும் அணிகலன்கள் யாவை?  

அல்லது

மனிதனுக்கு இவ்வுலகத்தில் பெருமை தரும் அணிகலன் யாது என நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது?

  •  செழுத்து வளர்ந்து காணப்படும் நெற்பயிரும் ஓங்கி உயர்ந்து வளரும் கரும்பும் நிலத்தின் அணிகலன் ஆகும்.  
  • குளத்தின் அணிகலனாக இருப்பவை அடர்ந்து செறிந்து விளங்கும் தாமரை இலையும் மலரும் ஆகும். 
  • பெண்களிடத்து காணப்படும் நாணம் அவர்கள் இயற்கையாக அணிந்துள்ள அணிகலன் ஆகும். 
  • ஒரு மனிதனுக்குச் சிறந்த அணிகலனாக இருப்பது எதுவென்றால் அவன் செய்யும் அறச்செயல்களே ஆகும். 
  • அவன் செய்யும் அறச்செயல்கள் அவனுக்குச் சிறப்பினையும் பெருமையினையும் தரும் என்று நான்மணிக்கடிகை கூறுகிறது 
  • ----------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி