அற இலக்கியம் - நாலடியார் பாடல் 131 பாடலும் விளக்கமும்
நாலடியார் பாடல் 131
நாலடியார் குறிப்பு வரைக.
Ø நான்கு அடிகளைக் கொண்டது
Ø 400 பாடல்களைக் கொண்டது
Ø சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்டது
Ø இதனைத் தொகுத்தவர் பதுமனார்
Ø 40 அதிகாரங்களைக் கொண்டது
Ø 12 இயல்களைக் கொண்டது
Ø அறம் (13), பொருள் (24), இன்பம் (3) என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது
Ø கடவுள் வாழ்த்து என்ற ஒர் அதிகாரமும் உள்ளது.
Ø இந்நூலை ஜீ.யூ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
Ø ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழமொழி இதன் சிறப்பினை உணர்த்தும்
Ø இந்நூல் உலகின் நிலையாமைக் கருத்துகளை எடுத்துக்கூறி நிலைத்த இன்பத்தைப் பெற செய்ய வேண்டிய அறச்செயல்களை எடுத்துரைக்கிறது.
Ø இதன் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு
நாலடியார் பாடல் 131
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு
நாலடியார் குறிப்பிடும் கல்வியின் சிறப்பைக் குறிப்பிடுக.
அல்லது
நாலடியார் குறிப்பிடும் அழகினைக் குறித்து எழுதுக.
அல்லது
கல்வி அழகினால் கிடைக்கும் நன்மை குறித்து நாலடியார் தரும் கருத்தினைக் குறிப்பிடுக.
- தலைமுடி அழகும், ஆடையின் அழகும், மஞ்சளின் அழகும் என இவ்வுலக இன்பங்களைத் தரும் அழகெல்லாம் அழகு ஆவது இல்லை.
- ஏனெனில் இவ்வழகுகள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தருபவை அல்ல.
- சமுகத்தை மேம்படுத்தி மனதில் நல்லெண்ணத்தையும் உருவாக்கி நடுவு நிலைமையோடு ஒவ்வொரு மனிதனையும் வாழ வைப்பது கல்வி ஆகும்.
- எனவே தான் நாலடியார் இவ்வுலகத்தில் உள்ள சிறந்து அழகு எனக் கல்வியைக் குறிப்பிடுகிறது.
- -----------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக