அற இலக்கியம் - இனியவை நாற்பது 37 பாடலும் விளக்கமும்

                             

                                இனியவை நாற்பது

இனியவை நாற்பது குறிப்பு எழுதுக.

Ø  இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார்

Ø  கடவுள் வாழ்த்து பாடல் ஒன்று உள்ளது

Ø  40 பாடல்களைக் (வெண்பாக்களை) கொண்டது

Ø  ஒவ்வொரு பாடலிலும் இவை இவை இனியவை என்று குறிப்பிடப்பட்டுள்ளன

Ø  இந்நூலில் 124 இனியவை குறிப்பிடப்பட்டுள்ளது

Ø  இதன் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு

Ø  குழவி தளர்நடை காண்டல் இனிதே, கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே போன்ற பல கருத்துகள் இந்நூலினகண் உள்ளன.

இனியவை நாற்பது 37 ஆம் பாடல்

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே

கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்ட

ல் இனிதே

தடமென் பணைத்தோள் தளிர் இயலாரை

விடம் என்று உணர்தல் இனிது

 

இனியவை நாற்பது இனிமை தருவனவாகக் குறிப்பிடுபவை எவை?

                            அல்லது 

எதனை விடம் என்று உணர்ந்து வாழ வேண்டும் என்று இனியவை நாற்பது குறிப்பிடுகின்றது?

Ø ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இளமை காலத்தில் முதுமை காலத்தை என்று உணர்ந்து செயல்பட வேண்டும். 

Ø நெருங்கிய சுற்றத்தார்களிடம் இனிய சொற்களைக் கேட்டு வாழ்வது இனிமை தரும்

Ø மூங்கிலைப் போன்ற தோள்களையும் இளந்தளிர் போன்ற மென்மையையும் உடைய மகளிரை விடம் என்று உணர்ந்து வாழ்தல் இன்பம் தரும்

Ø இவையே இனியவை நாற்பது உணர்த்தும் இன்பங்கள் ஆகும்

--------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி