அற இலக்கியம் - பழமொழி பாடலும் விளக்கமும்
பழமொழி நானூறு
பழமொழி நானூறு குறிப்பு எழுதுக.
Ø 400 பாடல்களைக் கொண்டது
Ø கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது
Ø தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கிய வகைகளுள் முதுமொழி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது
Ø இந்நூலினை எழுதியவர் முன்னுறை அரையனார்
Ø ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றுள்ளது.
Ø இந்நூல் 34 தலைப்புகளைக் கொண்டது
Ø இந்நூலில் வரலாற்றுச் செய்திகளும், புராண இதிகாச கருத்துகளும் காணப்படுகின்றன.
Ø கி.பி. 5 ஆம் நூற்றாண்டு
Ø பாம்பின் கால் பாம்பறியும், இருதலைக் கொள்ளி எறும்பு என்பது போன்ற சிறப்பு மிக்க பழமொழிகள் இந்நூலில் உள்ளன
பாடல்
தம் நடை நோக்கார் தமர் வந்தவாறு அறியார்
செந்நடை சேராச் சிறியார் போல் ஆகாது
நின் நடையானே நட அத்தா! நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல்
பழமொழி நானூறு பாடலின் கருத்தை விளக்கு.
அல்லது
உயர்ந்த குடிக்கேற்ற பண்பாகப் பழமொழி நானூறு எதனைக்
குறிப்பிடுக.
அல்லது
பண்பு மேம்பட பழமொழி நானூறு குறிப்பிடும் அறிவுரையை
எழுதுக.
- சிறுமை குணம் கொண்டவர் (இழிந்த கீழ்மை எண்ணம்) கொண்டவர் தன் ஒழுக்கத்தைப் பற்றியும் தன் சுற்றத்தார் ஒழுக்கத்தைப் பற்றியும் அறிய மாட்டார்கள்.
- அவர்கள் நல்ல நெறிபடியும் ஒழுக மாட்டார்கள்.
- இவ்வாறு சிறுமை குணம் கொண்டு இருக்காது தம்மை பற்றியும் தம் நடத்தைப் பற்றியும் தன்னைத் தானே அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
- உன் ஒழுக்கத்தைப் பற்றி உன்னைவிட அறிந்தவர் எவரும் இருக்க முடியாது.
- எனவே உனது ஒழுக்கத்தை அறிந்து உயர்ந்த குடி பிறந்தவனுக்கு ஏற்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு வாழ வேண்டும்.
- அவ்வாறு வாழ்ந்தால் சிறந்த பண்புடையவனாகவும் பெருமையுடையவனாகவும் ஆகி விடுவாய் என்று பழமொழி நானூறு உணர்த்துகிறது.
- -----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக