காப்பிய இலக்கிய வரலாறு

 

காப்பிய இலக்கியத் தகவல்கள்

·         காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்.

·         காப்பியம் பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.

·         அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.

·         அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும்.

ஐம்பெருங்காப்பியங்கள்

·         ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை.

·         சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

·         மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார்

·         சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

·         வளையாபதி -பெயர் தெரியவில்லை

·         குண்டலகேசி – நாதகுத்தனார்

·         சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.

·         சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்

·         மணிமேகலை, குண்டலகேசி, என்ற இரண்டும் பௌத்த காப்பியங்கள்

·         ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள் ஆகும்.

·         குண்டலகேசிக்கு எதிராகச் செய்யப்பட்டது நீலகேசி

·         நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்)

1. சிலப்பதிகாரம்

நூற் குறிப்பு:

·         சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம்

·         கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.

·         சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்(10), மதுரைக் காண்டம் (13), வஞ்சிக் காண்டம் (7) எனும் முப்பெருங்கண்டங்களைக் கொண்டது

·         முப்பது காதைகளை உடையது.

·         இது உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.

·         முதற் காப்பியம், இரட்டைக் காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றி புகழ்வோர்.

·         ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம்

·         ஆசிரியர் இளங்கோவடிகள்

·         சிலப்பதிகாரம் ஆசிரியப் பாவாலும் கொச்சகக் கலிப்பாவாலும் ஆனது.

ஆசிரியர் குறிப்பு:

·         இளங்கோவடிகள் சேர மரபினர்

·         இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோனை

·         இவரது தமையன் சேரன் செங்குட்டுவன்

·         இளையவரான இளங்கோவே நாடாள்வார் என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.

·         அரசியல் வேறுபாடு கருதாதவர், சமய வேறுபாடற்ற துறவி.

·         இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

·         சைவ வைணவ நெறிகளையும் பாடிய சமணநூல் சிலப்பதிகாரம்

·         சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.

2. மணிமேகலை

·         ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

·         வேறுபெயர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவன்

·         காலம் 2 ஆம் நூற்றாண்டு

·         இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்ற பெயரும் உண்டு

·         பௌத்த காப்பியம்

·         தமிழன் இரண்டாம் காப்பிய நூல்

·         துறவுக்கு முதன்மை கொடுக்கும் நூல்

·         கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்

·         காண்டப் பிரிவுகள் இல்லை

·         30 காதைகள் உள்ளன

·         முதல் காதை விழாவறைக் காதை

·         இறுதிக் காதை பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை

·         முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது.

·         ஆசிரியப்பாவாலானது

ஆசிரியர் குறிப்பு:

·         மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

·         சாத்தன் என்பது இவரது இயற்பெயர்

·         இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தார்

·         கூலவாணிகம் (கூலம் – தானியம்) செய்தவர்.

·         இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.

·         இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவார்.

·         இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.

·         இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

3. சீவக சிந்தாமணி

·         ஆசிரியர் திருத்தக்க தேவர்

·         காலம் 9 ஆம் நூற்றாண்டு.

·         திருத்தக்க தேவர் நிலையாமை குறித்து எழுதிய நூல் நரிவிருத்தம்

·         விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்

·         சமணக் காப்பியம்

·         மணநூல், காமநூல்,முக்தி நூல் என்ற வேறு பெயர்களும் உண்டு.

·         வட மொழியில் உள்ள சத்திய சிந்தாமணி, சந்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது சீவக சிந்தாமணி

·         காண்டப் பிரிவு இல்லை

·         13 இலம்பகங்களையும் 3145 பாடல்களையும் கொண்டது.

·         முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம்

·         இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்

·         காப்பியத் தலைவன் சீவகன்

·         சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.

·         சிந்தாமணி என்பது கேட்டதைக் கொடுக்கும்

·         தேவலோகத்தில் உள்ள ஒரு மணி (ரத்தினம்)

·         நூல் முழுமைக்கும் சைவரான நச்சினார்க்கினியர் உரை எழுதினார்.

·         உ.வே.சா. அவர்கள் முதன் முதலில் பதிப்பித்தார்.

·         கிறித்துவரான ஜி.யு.போப் இதனை இலியட் ஒடிசியுடன் ஒப்பிட்டுள்ளார்.

4. வளையாபதி

·         ஆசிரியர் பெயர் தெரியவில்லை

·         சமணக் காப்பியம்

·         விருத்தப்பாவால் ஆனது

·         முழுமையாகக் கிடைக்கவில்லை

·         கிடைத்தவை 72 பாக்கள்

·         மூல நூல் வைசிக புராணம் 35 வது சுருக்கம் ஆகும்

·         நவகோடி நாராயணன் பற்றிய நூல்

·         மடலேறுதல் பற்றிக் கூறும் காப்பிய நூல்

·         இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால் மிகவும் போற்றப்பட்ட நூல்

5. குண்டலகேசி

·         ஆசிரியர் நாதகுத்தனார்

·         காலம் 7 ஆம் நூற்றாண்டு

·         பௌத்த காப்பியம்

·         சுருண்ட தலைமுடியை உடையவள் என்று பொருள்

·         குண்டலகேசி விருத்தம் அகல கவி என்ற வேறு பெயர்களும் உண்டு.

·         நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை

·         கிடைத்தவை 224 பாடல்கள்

·         குண்டல கேசியின் வரலாற்றை நீலகேசி கூறுகிறது

·         குண்டல கேசியின் இயற்பெயர் பத்திரை

·         குண்டலகேசியின் கணவன் காளன் இவன் ஒரு கள்வன்

·         கலைஞரால் ‘மந்திரி குமாரி’ என்று திரைப்படமாக்கப்பட்டது.

          • ஐஞ்சிறு காப்பியங்கள்

·         ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்களே

·         அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது

சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தைத் தண்டியலங்காரம் கூறுகிறது.

·         நாக குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)

·         உதயண குமார காவியம் – ஆசிரியர் தெரியவில்லை (கந்தியார்)

·         யசோதர காவியம் – வெண்ணாவலூர் உடையார் வேள்

·         நீலகேசி – ஆசிரியர் தெரியவில்லை

·          

1. நாககுமார காவியம்

·         ஆசிரியர் பெயர் தெரியவில்லை கந்தியார் ஒருவர் எழுதினார் என்பர்.

·         நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக் கூறும் நூல்

·         இந்நூலுக்கு நாகபஞ்சமி கதை என்ற வேறுபெயரும் உண்டு

·         இராசகிரியில் உள்ள விபுலி மலையில் வீற்றிருக்கும் வர்த்தமான மகாவீரரை வணங்குவதற்குச் சிரேணிக மாமன்னனும் அவன் தேவியாகிய சாலினியும் சென்றனர். அக்கோயிலில் இருந்த தவ முனிவராகிய கௌதமர் அவர்களுக்கு நாககுமாரனது கதையை எடுத்துரைக்கிறார்.

·         மணத்தையும் போகத்தையும் மிகுதியாகக் கூறும் சமண நூல்

2. உதயணகுமார காவியம்

·         ஆசிரியர் பெயர் தெரியவில்லை கந்தியார் என்பர்.

·         மூலநூல் பெருங்கதை

·         நாடு வத்தவ நாடு

·         தலை நகரம் கோசாம்பி

·         சூரிய உதயத்தில் பிறந்ததால் உதயணன் எனப்பட்டான்.

·         உதயணனுக்கு ‘விச்சை வீரன்’ என்ற வேறு பெயரும் உண்டு

·         விச்சை வீரன் என்றால் பலகலை வல்லவன் என்று பொருள்

3. யசோதர காவியம்

·         ஆசிரியர் வெண்ணாவலூர் உடையார்வேள்

·         சருக்கம் 5, பாடல்கள் 320

·         வடமொழியில் எழுதப்பட்ட உத்திர புராணத்திலிருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தர் எழுதிய யசோதர சரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.

·         உயிர்க்கொலை தீது என்று உணர்த்தும் நூல்

·         நல்ஞானம் நற்காட்சி நல்ஒழுக்கம் இம்மூன்றும் மும்மணிகள்

·         ஏழுவகை நரகங்கள் கூறப்படுகின்றன அவை.
1. இருளில் இருள் 2. இருள்
3. புகை 4. சேறு 5. மணல்
6. பரல் 7. மருள்

4. நீலகேசி

·         நீலகேசி என்றால் கருத்த கூந்தலை உடையவள் என்று பொருள்

·         ஆசிரியர் பெயர் தெரியவில்லை

·         சருக்கம் 10 (பதிகவுரைச் சருக்கம் நீங்கலாக)

·         பாடல்கள் 894

·         நீலகேசித் தெருட்டு என்ற வேறு பெயரும் உண்டு

·         சமண முனிவர் முனிச் சந்திரனை நீலி என்ற பெண் அச்சுறுத்தி மயக்க முயல்கிறாள். மயங்காத முனிவர் அறிவுரை கூற, அவள் திருந்தி சமணமதத்தை ஏற்றுப் பிற சமய வாதிகளை வெற்றி கொள்கிறாள்.

·         சமணம் அல்லாத பிற இந்திய சமயங்களின் கோட்பாடுகளைத் தருக்க முறையில் மறுத்துரைக்கும் நூல்

·         குண்டலகேசி என்ற நூலுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் நீலகேசி

·         உரையாசிரியர் சமய திவாகர வாமன முனிவர்.

·         இவ்வுரைக்குச் சமய திவாகர விருத்தி என்ற பெயரும் உண்டு

5. சூளாமணி

·         ஆசிரியர் தோலா மொழித்தேவர். இயற்பெயர் வர்த்தமான தேவர்

·         சருக்கம் 12 விருத்தப்பாக்கள் 2330

·         காப்பியத் தலைவன் உலகின் முடிக்கோர் சூளாமணி ஆயினான் என்பதால் சூளாமணி என்று பெயர் பெற்றது. (பலமுறை வருதல்)

·         முதல் நூல் வட மொழியில் உள்ள ஆருகத மாபுராணம்

·         இதன் கதை ஸ்ரீ புராணத்திலும் உள்ளது.

பெருங்கதை

·         ஆசிரியர் கொங்குவேள்

·         உதயணன் வரலாற்றை முதலில் தமிழில் கூறிய நூல்

·         சமணக் காப்பியம்

·         இதற்குக் ‘கொங்குவேள் மாக்கதை” என்ற பெயரும் உண்டு

·         நூல் முழுவதும் கிடைக்கவில்லை
கிடைத்தவை 5 காண்டங்கள், 99 காதைகள் ஆசிரியப்பாவில் ஆனது

·         முதற் பகுதியும் இறுதிப் பகுதியும் கிடைக்கவில்லை.

·         முழுக் கதையையும் அறிய உதயணகுமார காவியம் உதவி செய்கிறது.

·         கதைக் களஞ்சியம் என்று போற்றப்படும் நூல் பெருங்கதைபிருகத்கதா என்ற பைசாச மொழிநூலை ஒட்டி இயற்றப்பட்டது என்றும் கூறுவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி