சிறப்புத் தமிழ் - கவிக்கோ அப்துல் ரகுமான் - தீக்குச்சி

 

கவிக்கோ அப்துல் ரகுமான்

பிறந்த ஆண்டு : 1937 நவம்பர் 2 ஆம் நாள்

பிறந்த இடம் : மதுரையில் வைகை ஆற்றின் தென்கரை

பெற்றோர் : மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம்

 பணி : வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி தமிழ்த்துறையின் தலைவர்,

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்

நூல்கள்

பால்வீதி, நேயர் விருப்பம், கரைகளே நதியாவதில்லை, அவளுக்கு நிலா என்று பெயர், முட்டைவாசிகள்,   சுட்டுவிரல், ஆலாபனை

விருதுகள்

கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது    ,  அக்ஷர விருது, சிற்பி அறக்கட்டளை விருது, கலைஞர் விருது, ராணா இலக்கிய விருது, சாகித்ய அகாடமி விருது (ஆலாபனை கவிதைத் தொகுதி) பொதிகை விருது     , கம்பர் விருது, உமறுப் புலவர் விருது

  

 தீக்குச்சி

தீக்குச்சி   

விளக்கை ஏற்றியது. 

எல்லோரும்

விளக்கை வணங்கினார்கள்.

பித்தன் 

கீழே எறியப்பட்ட 

தீக்குச்சியை  வணங்கினான்.

ஏன் தீக்குச்சியை

வணங்குகிறாய்?”

என்று கேட்டேன்.  

ஏற்றப்பட்டதை விட

ஏற்றி வைத்தது

உயர்ந்ததல்லவா என்றான்.

அப்துல் ரகுமானின் தீக்குச்சி கவிதை விளக்கும் சமூக செயல்களைக் குறிப்பிடுக. 

 உச்சத்தில் வந்து விட்டவர்களை, உலகமே மதிக்கும், பாராட்டும், போற்றும்.  ஆனால் அவர்கள் உச்சத்திற்கு வர ஏணியாக இருந்தவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.  அவர்களும் அதற்காக வருந்துவதும் இல்லை.  அவற்றை குறியீடாக உணர்த்தும் புதுக்கவிதையே தீக்குச்சி என்னும் கவிதை ஆகும். 

                  தீக்குச்சி உலகின் இருளைப் போக்கி ஒளியை ஊட்டி தன்னை                             அழித்துக் கொள்கிறது. தீக்குச்சியின் தியாகத்தில் ஒளி                                         தோன்றுகிறது.

அதனைப் போன்றே இவ்வுலக வாழ்வில் புகழ் என்னும் உயரத்தை

                 அடைவதற்கு பலரின் துணை தேவைப்படுகிறது. புகழை                                      அடைந்தவர்களையே உலகம் பேசும். அவர்கள் புகழ் அடைய                             காரணமாக இருந்தவர்களை உலகம் பாராட்டுவதில்லை என்ற                         இச்சமுகத்தின் போக்கினை உணர்த்துகிறார்.

..........................................................................................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி