சிறப்புத் தமிழ் - வைரமுத்து - நிலத்தை ஜெயித்த விதை

 

வைரமுத்து குறிப்பு தருக.

பிறந்த இடம் : தேனி மாவட்டம், வடுகபட்டி

பெற்றோர்  : ராமசாமி - அங்கம்மாள்

 இவர் எழுதிய நூற்கள் : வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசியகீதம், எனது பழைய பனையோலைகள், கவிராஜன் கதை, இரத்த தானம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, தமிழுக்கு நிறமுண்டு, பெய்யெனப் பெய்யும் ம‌ழை, "எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்

விருதுகள் :

கலைமாமணி விருது - 1990.

சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)

பத்ம பூசன் விருது (2014)

சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).

நிலத்தை ஜெயித்த விதை

அது எப்படி?

எட்டயபுரத்தில் மட்டும்

ஒருத்திக்கு

நெருப்பைச் சுமந்த் கருப்பை?

அது கூடச் சாத்தியம்தான்

ஆனால்- இது எப்படி

ஏகாதிபத்திய எரிமலையை

ஒரு

தீக்குச்சி சுட்டதே

இது எப்படி?

உன் பேனா

தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்

சிக்கெடுத்தது!

கிழிசல் கோட்டு

கவிதா தேவிக்குப்

பீதாம்பர மானது

உன் எழுத்தில்தான்

முதன்முதலில்

வார்த்தை வாக்கியத்தைப் பேசியது.

உன் பாதங்களுக்குப்

பூச்சொரிவது – எங்கள்

பொறுப்பு.

ஆனால் பொறு.

உன் பாதங்களில்

சொரிவதற்கு

எங்கள்

பூக்களைக் கொஞ்சம்

புனிதப்படுத்திக் கொள்கிறோம்.

 வைரமுத்து பாரதியாரை எவ்வாறு போற்றுகிறார் என்பதை நிலத்தை ஜெயித்த விதை கவிதை மூலம் விளக்குக.

  • பாரதியார் சொல்லிலும் செயலிலும் நெருப்புப் போன்றவர். 
  • அவரது சுதந்திரப் பாடல்கள் ஆங்கிலேயருக்கு எதிராக நெருப்பாகச் சுடர்விட்டு எரிந்தது. 
  • பாரதி என்னும் தீக்குச்சி அந்நிய ஏகாதிபத்திய எரிமலையைத் தனி ஒருவனாக நின்று நெருப்புப்பொறியைப் பற்ற வைத்தார். 
  • ஒரு சிறிய விதை நிலத்தை பிளந்து வெளியே வர பூமியின் அடியில் போராடி வெளிவருகிறது.
  • அவ்வாறு வெளி வரும் விதையே முளைவிட்டு வெற்றி பெற்று தன் கிளைகளை எங்கும் பரப்புகிறது.
  • எட்டயப்புரத்தில் முளைத்த விதை உலகெங்கும் தமிழன்னையின் புகழைப் பரப்பிய பெருமையுடையது. 
  • கவிதைகளுக்குரிய வளமையின்றி சில நூற்றாண்டுகளாக உறங்கிக் கிடந்த தமிழன்னை பாரதியின் வருகையால் உறக்கம் கலைந்து புத்துயிர் பெற்றாள். 
  • உரிமையும் மகிழ்ச்சியும் கண்டுவிட்ட துடிப்பில் பாரதியின் தோள்களில் சோம்பல் முறித்தாள். 
  • பாரதியின் எழுதுகோல் எளிமை, இனிமை பெற்று தரணியெங்கும் விரிந்து சென்றாள். 
  • அவருடைய கிழிந்த ஆடையே கவிதைத் தாய்க்குப் பட்டாடையாக ஆனது. 
  • பாரதியைப் போற்ற வேண்டியது கவிஞர்களின் கடமை. 
  • கவிதைப் பூக்களால் அருடைய பாதங்களுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம். 
  • ஆனால் பாரதியைக் பாராட்டிப் பாத பூசை செய்வதற்குக் கவிதை சிறப்பு பெற வேண்டும்.  
  • உண்மை, தூய்மை கொண்டு தீக்கங்கை உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர் வைரமுத்து.

 ................................................................................................................

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி