முதல் பருவம் - இரண்டு மதிப்பெண் வினாக்கள்


 

                       முதல் பருவம் - (100L1A) - இரண்டு மதிப்பெண் வினாக்கள்


1.   தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?

·        தொல்காப்பியர்

 

2.   முதல்  இலக்கண நூல் எது?

·        தொல்காப்பியம்

 

3.   தொல்காப்பியத்தின் சிறப்பு யாது?

·        ’ஒல்காப்புகழ் தொல்காப்பியம்’ என்ற சிறப்பினை உடையது.

4.   பரிணாம வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் இலக்கண நூல் எது?

தொல்காப்பியம்

5.   தொல்காப்பியத்தின் மூன்று பிரிவுகள் யாவை?

·        எழுத்ததிகாரம்.

·        சொல்லதிகாரம்,

·        பொருளதிகாரம்

 

6.   தொல்காப்பியத்தின் இயல் மற்றும் நூற்பாக்களின் எண்ணிக்கை யாது?

                   ஒவ்வொரு அதிகாரத்திற்கும்  9 இயல்கள்

மொத்தம் 27 இயல்கள்

                    நூற்பாக்கள் மொத்தம் = 1610

7.   தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் யார்?

          பனம்பாரனார்

8.   ஐந்திலக்கண நூல் எது?

தொல்காப்பியம்

9.   தொல்காப்பியம் குறிப்பிடும் இரு வழக்குகள் யாவை?

உலக வழக்கு, நாடக வழக்கு

 

10.           இலக்கியத்திற்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் இலக்கணம் கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

11.           பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என்னும் இரு வழக்கிற்கும் இலக்கணம் கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

12.           நரம்பின் மறை என்றால் என்ன?

இசை இலக்கணத்தை நரம்பின் மறை என்பர்

13.           நரம்பின் மறைக்கு இலக்கணம் கூறும் நூல் எது?

தொல்காப்பியம்

14.           இறையனார் களவியல் உரையைத் தொகுத்தவர் யார்?

இறையனார் என்னும் புலவர்

15.           இறையனார் களவியல் உரை என்னும் நூலுக்கு உரை எழுதியவர்?

நக்கீரர்

16.           இறையனார் களவியல் உரையின் இயல் மற்றும் நூற்பா எண்ணிக்கை தருக?

களவுப் பிரிவு – 33 நூற்பா

கற்புப் பிரிவு – 27 நூற்பா

மொத்தம் – 60 நூற்பா

17.           கடல்கோள்கள் குறித்துக் குறிப்பிடும் நூல் எது?

இறையனார் களவியல் உரை

18.           முதன் முதலில் முச்சங்க வரலாற்றைப் பற்றிக் கூறும் நூல் எது?

    இறையனார் களவியல் உரை

19.           இறையனார் களவியல் உரையின் வேறுபெயர் என்ன?

இறையனார் அகப்பொருள் உரை

20.           நம்பியகப் பொருளின் ஆசிரியர் யார்?

நாற்கவிராச நம்பி

21.           நாற்கவிராச நம்பி பெயர் விளக்கம் தருக.

ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி என்னும் நான்கு வகைக் கவிகளைப் பாட வல்லவர் ஆகையால் நாற்கவிராச நம்பி என்றழைக்கப்பட்டார்.

22.           நம்பியகப் பொருளின் இயல் மற்றம் நூற்பாக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.

அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் ஐந்து இயல்கள்

252 நூற்பாக்கள்

23.           12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல்கள் யாவை?

நம்பியகப் பொருள், தண்டியலங்காரம்

தொல்காப்பியத்தின் வழிநூல் எது ?

நம்பியகப் பொருள்

24.           அகப்பொருளுக்கு இலக்கணம் கூறும் இலக்கண நூற்கள் எவை?

இறையனார் களவியல் உரை, நம்பியகப் பொருள்

25.           புறத்திணைக்கு இலக்கணம் கூறும் நூல் எது?

புறப்பொருள் வெண்பா மாலை

26.           புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் யார்?

ஐயனார் இதனார்

27.           புறப்பொருள் வெண்பாமாலைக்கு முதன்முதலில் உரை எழுதியவர் யார்?

சாமுண்டித் தேவ நாயக்கர்

28.           புறப்பொருள் வெண்பா மாலையின் முதல் நூற்கள் யாவை?

தொல்காப்பியம், பன்னிரு படலம்

29.           நன்னூலின்  ஆசிரியர் யார்?

பவணந்தி முனிவர்

30.           சீயகங்கன் மன்னன் காலத்தில் தோன்றிய இலக்கண நூல் எது?

              நன்னூல்

31.           13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல் எது?

நன்னூல்

32.           நன்னூலின் அதிகாரங்களைக் குறிப்பிடுக.

(அல்லது)

நன்னூலின் பிரிவுகள் யாவை?

எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம்

33.           நன்னூல் நூற்பாக்கள் மொத்தம் எத்தனை?

462 நூற்பாக்கள்

34.           அணி இலக்கணம் குறிப்பிடும் நூல் எது?

தண்டியலங்காரம்

35.           தண்டி என்பவர் எழுதிய இலக்கண நூல் எது?

தண்டியலங்காரம்

36.           காவியதர்சம் என்னும் வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?

தண்டியலங்காரம்

37.           தண்டியலங்காரத்தின் வேறு பெயர் என்ன?

அணியதிகாரம்

38.           தண்டியலங்காரத்தின் இயல்கள் எத்தனை?

இயல்கள் மூன்று 1. பொதுவியல் – 26 நூற்பாக்கள்

2.   பொருளணியியல் (குணவியல்) - 65

3.   சால்லணியியல் (எச்சவியல்) - 35.

மொத்தம் – 126 நூற்பாக்கள்

39.           யாப்பருங்கலக்காரிகையின் ஆசிரியர் யார்?

அமிர்தசாகரர்

40.           அமிர்தசாகரரின் ஆசிரியர் யார்?

குணசாகரர்

41.           யாப்பருங்கலக்காரிகையின் இயல்கள் யாவை?

எழுத்தியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்கள்

44 காரிகைகள்

42.           10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல் எது?

யாப்பருங்கலக்காரிகை

43.           ஒரு, ஓர் வரும் இடங்களை எழுதுக.

·        ஓர் – உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்பு வரும்.

·        (எ. கா)   - ஓர் அணில்,    ஓர் ஆடு

 - ஓர் இரவு,             ஓர் உயிர்

 - ஓர் ஊர்,     ஓர் எலி

·        ஒரு  - உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்பு வரும்.

·        (எ.கா)        -  ஒரு கப்பல்,          ஒரு புத்தகம்

-      ஒரு மாடு,            ஒரு நகரம்

-      ஒரு பறவை, ஒரு மரம்

-       

44.           அது, அஃது வரும் இடங்கள் யாவை?

·        அது - உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்பு வரும்

·        (எ.கா)    -    அது கட்டில்,    அது வண்டு,

-      அது புலி,         அது நாய்,

-       அது சக்கரம்,   அது புத்தகம்.

·        அஃது  - உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன்பு வரும்.

·        (எ.கா)        – அஃது அணில்,   அஃது ஆடு

-      அஃது இலை,   அஃது உரல்,

-      அஃது ஏணி,   அஃது ஓடை

 

45.            ஈரொற்று வரும் இடங்களை குறிப்பிடுக.

·        ய், ர், ழ் என்னும் மூன்று மெய்யெழுத்துக்களை அடுத்து க், ங், ச்,ஞ், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துக்கள் ஈரொற்றாய் சேர்ந்து வரும்.

     (எ.கா)     ய்  - நாய்க்கால், காய்ச்சல், வாய்ப்பு, பாய்ந்தது

                    ர் – பார்த்தான், தீர்ப்பு, உயர்ச்சி,ஊர்ந்து

                     ழ் – வாழ்க்கை, வாழ்த்து, வீழ்ச்சி, தாழ்ப்பாள்

 

46.           தற்சுட்டுப்பெயர்கள் யாவை?

தன், தம், தங்கள்

47.           தற்சுட்டுப் பெயர்கள் எத்தகைய பொருளில் வரும்?

வலியுறுத்தும் பொருளில் வரும்

48.           தான், தாம் வருமிடங்களைக் குறிப்பிடுக.

தன்மைப்பெயர், முன்னிலைப் பெயர், படர்க்கைப் பெயர், சுட்டுப் பெயர்,

49.           திராவிடச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?

வச்சிரணந்தி

50.           திராவிடச் சங்கத்தில் தொகுக்கப்பட்ட இலக்கியம் எது?

சங்க இலக்கியம்

51.           திராவிடச் சங்கத்தின் காலம் எது?

கி.பி. 5 ஆம் நூற்றாண்டு

52.           சங்க இலக்கியத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?

      இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை, 1. தொகை, 2. பாட்டு

53.           தொகை நூல்கள் மொத்தம் எத்தனை?

எட்டு (எட்டுத் தொகை)

54.           பாட்டு நூல்கள் மொத்தம் எத்தனை?

பத்து (பத்துப்பாட்டு)

55.           பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

சங்க இலக்கியம் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் 18 நூற்கள்)

56.           பத்துப்பாட்டில் அகநூல்கள் எத்தனை?

·        குறிஞ்சிப்பாட்டு

·        முல்லைப்பாட்டு

·        பட்டினப்பாலை

 

57.           பத்துப்பாட்டில் ஆற்றுப்படை  நூல்கள் யாவை?

·        திருமுருகாற்றுப்பாடை

·        பொருநராற்றுப்படை

·        சிறுபாணாற்றுப்படை

·        பெரும்பாணாற்றுப்படை

·        கூத்தராற்றுப்படை ( மலைபடுகடாம்)

 

58.           எட்டுத்தொகையில் புறநூல்கள் யாவை?

·        புறநானூறு

·        பதிற்றுப்பத்து

 

59.           எட்டுத்தொகையில் அகநூல்கள் யாவை?

·        நற்றிணை

·        குறுந்தொகை

·        ஐங்குறுநூறு

·        கலித்தொகை

·        அகநானூறு

 

60.           அகத்திணை பெயர்களைத் தருக.

                குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

 

61.           பத்துப்பாட்டில் புறநூல் எது?

·        மதுரைக்காஞ்சி

 

62.           குறுந்தொகையின் அடிவரையறை என்ன?

·        4 -8

 

63.           நல் எனும் அடைமொழிப் பெற்ற நூல் எது?

·        நற்றிணை

 

64.           புறநானூற்றின் வேறுபெயர்களை எழுதுக.

·        புறம்

·        புறப்பாட்டு

 

65.           பத்துப்பாட்டில் அகம்புறம் சார்ந்த நூல் எது?

·        நெடுநல்வாடை

 

66.           நற்றிணை -  குறிப்பு வரைக?

·        பாடல்கள்  - 400

·        அடியளவு 9 12

·        பாடிய புலவர்கள் 175

·        தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

·        சிறப்புப் பெயர் நற்றிணை நானூறு

 

67.           எட்டுத்தொகையில் அகம் புறம் சார்ந்த நூல் எது?

·        பரிபாடல்

68         புறத்திணைகளைக் குறிப்பிடுக. 

·        வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை

69.           குறுந்தொகை குறிப்பு வரைக?

·        நல்ல குறுந்தொகை என அழைக்கப்படுவது

·        அடியளவு  4- 8

·        பாடல்கள் 400

·        தொகுத்தவர் பூரிக்கோ

·        பாடிய புலவர்கள் 205

·        வருணனை குறைவு உணர்வு மிகுதி

·        உரிப்பொருட்கே சிறப்பிடம் தரும் நூல்

 

70.           கலித்தொகை குறிப்பு வரைக?

·        கற்றறிந்தார் ஏத்தும் கலி

·        அடியளவு  = 11- 80

·        பாடல்கள் 150

·        பாடிய புலவர்கள் 5 பேர்

·        தொகுத்தவர் நல்லந்துவனார்

·        பாவகையால் பெயர் பெற்ற நூல்

·        கைக்கிளை, பெருந்திணைப் பாடல்கள் கொண்ட நூல்

·        ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் நூல்

 

71.           கலித்தொகையின் அடைமொழி யாது?

·        கற்றறிந்தார் ஏத்தும் கலி

·        கல்வி வலார் கண்ட கலி

 

72.           ஐங்குறுநூறு குறிப்பு வரைக?

·        பாடல்கள் 500

·        அடியளவு 3 6

·        பாவகை ஆசிரியப்பா

·        தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்

·        தொகுபித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைச

·        கடவுள் வாழ்த்துப் பாடியவர் பெருந்தேவனார்

 

73.           புறநானூறு குறிப்பு வரைக?

·        பாடல்கள் 400

·        அடியளவு 4 40

·        பாடிய புலவர்கள் 175

·        வேறுபெயர்கள் புறம், புறப்பாட்டு

·        கடவுள் வாழ்த்துப் பாடியவர் பெருந்தேவனார்

 

74.           பொருண்மொழிக்காஞ்சி துறையை விளக்குக?

·        காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.

·        அரசனுக்கு , முனிவரும் அவரைப் போன்ற புலவர்களும்  இந்த  உலகில் அழியாமல் நிலைத்திருப்பது இன்னது என்று தாம் தெளிவாய் அறிந்த பொருளை உணர்த்துவது  பொருண்மொழிக்காஞ்சி ஆகும்.

·        இம்மை மறுமைகளில் உயிருக்கு உறுதியைத் தருவது பற்றிக் கூறுவதும்

 

75.           முல்லைப்பாட்டு குறிப்பு வரைக?

·        பத்துப்பாட்டில் மிகச் சிறிய நூல்

·        103 அடிகளைக் கொண்டது.

·        திணை        - முல்லை

·        பாடியவர்   - நப்பூதனார்

·        பாடப்பட்டவன்  - தலையானங்கானத்து செறுவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

- நெஞ்சாற்றுப்படை என்று இந்நூல் அழைக்கப்படுகிறது 

 

76.           பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது?

·        மதுரைக்காஞ்சி 782 அடிகள்

 

77.          பா வகையால் பெயர் பெற்ற சங்க இலக்கிய நூற்கள் யாவை?

கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரியாப்பு)


78.           உள்ளுறை, இறைச்சி என்னும் இலக்கியச் சுவை கொண்ட இலக்கியம் எது?

சங்க இலக்கியம்


79.           தமிழை உயர்தனி செம்மொழியாக அடையாளப்படுத்தும் இலக்கியம் எது?

சங்க இலக்கியம்


80.           அற இலக்கியத்தின் வேறு பெயர்கள் யாவை?

களப்பிரர் கால இலக்கியம், இருண்ட கால இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம்


81.           திருக்குறள் குறிப்பு வரைக?

·        இயற்றியவர் திருவள்ளுவர்

·        காலம்         - கி.மு 31 ஆம் நூற்றாண்டு

·        அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளை உடையது.

·        அதிகாரம் 133

·        குறட்பாக்கள்   -1330

·        இரண்டடி வெண்பாக்களால் ஆனது.

·        109 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

82.           நாலடியார் குறிப்பு வரைக?

·        இயற்றியவர்கள் சமண முனிவர்கள்

·        அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளை உடையது

·        அதிகாரம்  - 40

·        இயல்கள் - 12

·        பாடல்கள்  - 400 வெண்பாக்கள்

·        திருக்குறளைப் போன்று சிறப்புடையது.

 

83.           நாலடியாருக்கு வழங்கப்பட்ட வேறுபெயர்கள் யாவை?  

நாலடி நானூறு, வேளாண்வேதம், திருக்குறள் விளக்கம்


84.           நாலடியாரைத் தொகுத்தவர் யார்?

பதுமனார்

85.           நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

ஜீ.யூ.போப்

86.           பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருந்து நூல்கள் யாவை?

மருந்து நூல்கள் மூன்று

·        திரிகடுகம்

·        ஏலாதி

·        சிறுபஞ்சமூலம்

 

87.           நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படும் நூல் எது?

·        முல்லைப்பாட்டு

88.           கடிகை என்பதன் பொருள் என்ன?

துண்டு, அட்டிகை, ஆபரணம்

89.           நான்மணிக்கடிகை ஆசிரியர் யார்?

விளம்பிநாகனார்

90.           நிலத்துக்கு அணி எது?

·        நெல்லும் கரும்பும்

 

91.           இன்னா நாற்பது குறிப்பிடும் இன்னா செயல்கள் மொத்தம் எத்தனை?

164

92.           யானைப் போரைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

களவழி நாற்பது

93.           ஐந்திணை ஐம்பது ஆசிரியர் யார்?

மாறன் பொறையனார்

94.              ஆசாரக்கோவையின் வேறுபெயர் யாது?

ஆசார மாலை


95.           பதினெண் சித்தர்கள் பெயர்களைக் குறிப்பிடுக.

                    திருமூலர், அகத்தியர், போகர், இடைக்காடர், கொங்கணர், தன்வந்திரி, வால்மீகி, பதஞ்சலி, நந்தி தேவர், மச்சமுனி, சட்டைமுனி, கோரக்கர், கமல முனி, போதகுரு, இராமதேவ சித்தர், பாம்பாட்டி சித்தர்,குதம்பைச் சித்தர், சுந்தரானந்தர்


96.           உண்ணும் உணவு முறைகள் குறித்துக் கூறும் நூல் எது?

ஆசாரக்கோவை

97.           சங்க காலக் குறுநில மன்னர்கள், மூவேந்தர்கள் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

பழமொழி நானூறு

98.           இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுபவை யாவை?

·        சிலப்பதிகாரம்

·        மணிமேகலை

 

99.           காப்பியத்தின் இலக்கணம் கூறும் நூல் எது?

தண்டியலங்காரம்

100.        சிலப்பதிகாரம்குறிப்பு வரைக?

·        ஆசிரியர்                   இளங்கோவடிகள்

·        காலம்              - கி. பி. இரண்டாம் நூற்றாண்டு

·        சமயம்              - சமணம்

·        காண்டங்கள்   – 3

·        காதை              - 30

·        சிறப்பு             முதல் காப்பியம்

 

101.        சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் யாவை?

·        முதல் காப்பியம்

·        முத்தமிழ் காப்பியம்

·        மூவேந்தர் காப்பியம்

·        குடிமக்கள் காப்பியம்

·        வரலாற்றுக் காப்பியம்

·        ஒற்றுமைக் காப்பியம்

·        உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள்

 

102.        ஐம்பெரும் காப்பியங்கள் யாவை?

·        சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்

·        மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்

·        சீவக சிந்தாமணி - திருத்தக்கதேவர்

·        வளையாபதிஆசிரியர் பெயர் தெரியவில்லை

·        குண்டலகேசிநாதகுத்தனார்

 

103.        ஐம்பெருங்காப்பியங்களில் பௌத்த காப்பியம் எவை?

·        மணிமேகலை

·         குண்டலகேசி

 

104.        ஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியம் எவை?

சிலப்பதிகாரம், வளையாபதி, சீவகசிந்தாமணி

105.        மணிமேகலைகுறிப்பு வரைக?

·        ஆசிரியர்சீத்தலைச்சாத்தனார்

·        காலம் -  கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

·        காப்பிய தலைவிமணிமேகலை

·        சமயம்பௌத்தம்

·        காதை – 30

·        வேறுபெயர்கள்மணிமேகலை துறவு

 

106.        அமுதசுரமி தோன்றிய பொய்கையின் பெயர் என்ன ?

கோமுகி

107.        ஐஞ்சிறு காப்பியங்கள் யாவை ?

நாக குமார காவியம் – ஆசிரியர் பெயர் தெரியவில்லை

உதயண குமார காவியம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

யசோதர காவியம் – வெண்ணாவலூர் உடையார் வேள்

நீலகேசி - ஆசிரியர் பெயர் தெரியவில்லை

சூளாமணி – தோலா மொழித்தேவர்

108.        நீலகேசிக்கு உரை எழுதியவர் யார் ?

சமயத் திவாகர வாமன முனிவர்

109.        நீலகேசி உரைக்கு வழங்கப்பட்ட வேறு பெயர் என்ன ?

திவாகர விருத்தி

110.        வடமொழி ஆருகத புராணத்தைத் தழுவி எழுதப்பெற்ற நூல் எது ?

சூளாமணி

111.        மனக்கோயில் கட்டிய நாயனார் யார்?

·        பூசலார் நாயனார்

112.        பெரிய புராணத்தின் ஆசிரியர் யார் ?

சேக்கிழார்

113.        சேக்கிழார் இயற்பெயர் என்ன ?

அருள் மொழித்தேவர்

114.        சேக்கிழாருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர் யாது?

உத்தமச் சோழப் பல்லவன்

115.        சேக்கிழார் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார் ?

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

116.        சேக்கிழார் புராணம் நூலின் ஆசிரியர் யார் ?

உமாபதி சிவாச்சாரியார்

117.        சைவ சமய காப்பியம் எது?

பெரிய புராணம்

118.        பெரிய புராணத்தின் மூல நூல்கள் யாவை ?

திருத்தொண்டர் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி

119.        மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை?

·        திருவாசகம்

·        திருக்கோவையார்

120.        ஆயிரம் படகுகளின் தலைவன் யார்?

·        குகன்

 

121.        திருமந்திரத்தின் வேறுபெயர்கள் யாவை?

·        தமிழ் மூவாயிரம்

·        திருமந்திரமாலை

 

122.        கோப்பெருந்தேவி கண்ட கனவு யாது?

·        மன்னனின் வெண்கொற்றக் குடை, செங்கோல் கீழே சாய்தல்

·        வாயில் மணியோசை கேட்டல்

·        சூரியனை இருள் விழுங்குதல்

·        இரவில் வானவில் தோன்றுதல்

·        நண்பகலில் நட்சத்திரங்கள் விழுதல் போன்ற கனவுகளை கோப்பெருந்தேவி கண்டாள்.

 

123.        உண்பது நாழி உடுப்பவை இரண்டே எனப் பாடியவர்?

·        நக்கீரர்

 

124.        பசிப்பிணியின் செயல்கள் யாவை?

·        குடிப்பெருமையை அழிக்கும்

·        ஒழுக்கத்தை சிதைக்கும்

·        கல்வி சிறப்பை கைவிடச் செய்யும்.

·        நாணணி களையும்

·        உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

·        புறங்கடை நிறுத்தும்.

 

125.        ஆண்டாள் இயற்றிய  நூல்களை குறிப்பிடுக.

·        திருப்பாவை

·        நாச்சியார் திருமொழி

 

126.        முதலாழ்வார் மூவரின் பெயர்களை எழுதுக.

·        பொய்கையாழ்வார்

·        பூதத்தாழ்வார்

·        பேயாழ்வார்

 

127.        சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் யார்?

·        ஆண்டாள்

 

128.        நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் வேறு பெயர்கள் யாவை ?

ஆன்ற தமிழ் மறை, திராவிடச் சாகரம்

129.        நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் பிரிவுகள் யாவை ?

1.   முதல் ஆயிரம், 2. மூத்த திருமொழி, 3. திருவாய்மொழி, 4. இயற்பா

130.        திருவாய் மொழிக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?

ஆளவந்தான் பிள்ளை

131.        திராவிட  வேதம், தமிழ் வேதம் என அழைக்கப்படுவது எது?

·        திருவாசகம்

132.        பிறவா யாக்கை பெரியோன் யார்?

·        சிவபெருமான்

 

133.        இயேசு காவியம் எழுதியவர் யார்?

·        கண்ணதாசன்

 

134.        கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ?

முத்தையா

135.        தமிழக அரசின் அரசவைக் கவியர் யார்?

கண்ணதாசன்

136.        காப்பியங்களின் வகைகள் யாவை?

·        பெருங்காப்பியம்

·        சிறுகாப்பியம்

 

137.         தமிழின் முதல் சமயக் காப்பியம் எது ?

·        மணிமேகலை

 

138.         சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?

·        திருத்தக்க தேவர்

 

139.         கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் யாது ?

·        இராமவதாரம்

 

140.         கம்பராமயணத்தின் காண்டங்கள் யாவை ?

·        பால காண்டம்

·        அயோத்தியா காண்டம்

·        ஆரண்ய காண்டம்

·        கிட்கிந்தா காண்டம்

·        சுந்தர காண்டம்

·        யுத்த காண்டம்

 

 

141.        தமிழுக்குக் கதி எது ?

·        கம்பராமயணம்

·        திருக்குறள்

 

142.        சீறாப்புராணத்தை இயற்றியவர் யார் ?

·        உமறுப்புலவர்

 

143.        சீறாப்புராணத்தின் காண்டங்களை எழுதுக.

·        விலாதத்துக் காண்டம்

·        நுபுவ்வத்துக் காண்டம்

·        ஹிஜ்ரத்துக் காண்டம்

144.        திருமுறை காண்ட சோழன் யார் ?

·         ராஜ ராஜ சோழன்

145.        பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?

நம்பியாண்டார் நம்பி

146.        சைவ சமயக் குரவர்கள் யாவர் ?

·        திருஞானசம்பந்தர்

·        திருநாவுக்கரசர்

·        சுந்தரர்

·        மாணிக்கவாசகர்

 

147.         மூவர் தமிழ் எது ?

·        தேவாரம்

 

148.        பதினோராம் திருமுறையின் வேறுபெயர் என்ன?

சைவ பிரபந்த மாலை, சைவ பிரபந்தத் திரட்டு

149.        திருமுறைகளைப் பாடியோர் எத்தனை பேர்?

27 பேர்

150.        நீவீர் அறிந்த சித்தர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

·        திருமூலர்

·        கடுவெளி சித்தர்

·        பாம்பாட்டி சித்தர்

·        போகர்

151.        திராவிட இயக்க இதழ்கள் யாவை ?

·        விடுதலை

·        பகுத்தறிவு

·        உண்மை

 

152.        இராவண காவியத்தை இயற்றியவர் யார் ?

·        புலவர் குழந்தை

 

153.        கடுவெளி சித்தரின் அறிவுரைகள் இரண்டினைக் கூறுக.

·        பாவம் செய்யாதிருத்தல் வேண்டும்.

·        கோபம் கொள்ளாதிருத்தல் வேண்டும்.

 

154.        பட்டினத்தாரின் இயற்பெயர் யாது ?

·        திருவெண்காடர்

155.         ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர் யார் ?

·        திருமூலர்

156.        இராமயணத்திற்கு எதிராகப் பாடப்பட்ட நூல் எது ?

இராவண காவியம் – புலவர் குழந்தை

157.        சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு யாது

1925

158.        சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார் ?

ஈ.வே.ரா. (பெரியார்)

 ------------------------------------------------------------------------------------------



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி