இலக்கணம் - ஒரு, ஓர், அது, அஃது, தான், தாம், தன், தம் வரும் இடங்கள்

 ஒரு, ஓர் வரும் இடங்கள்

    வருமொழியில் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருப்பின் 'ஓர்'     வருதல் வேண்டும்.

    (எ. கா)

    ஓர் அணில், ஓர் ஆடு, ஓர் இலை, ஓர் ஈசல்.

    வருமொழியில் முதல் எழுத்து உயிர்மெய் எழுத்தாக இருப்பின்     'ஒரு' வருதல் வேண்டும்.

    (எ. கா)

    ஒரு கண்ணாடி, ஒரு பாட்டு.

 அது, அஃது வரும் இடங்கள்

        உயிர்மெய் எழுத்து வரும் இடங்களில் இயற்கையாய் ’அது’     வரும்.

    (எ. கா)

    அது மரம், எது வீடு.

    வருமொழி உயிராகவரின் அஃது, இஃது, உஃது, எஃது  என வரும்

    (எ. கா) அஃது அணில், அஃது ஆட்டம், எஃது ஏணி.

 தான், தாம் வருமிடங்கள்

    தான், தாம் ஆகிய தன்மை, முன்னிலைப் பெயர்களோடும்     அவன், அவள், அவர்கள் போன்ற சுட்டுப் பெயர்களோடும் சேர்ந்து     ’வலியுறுத்தும்’ பொருளில் வழங்கிவருகின்றன 

    (எ. கா)

நான்தான் பொறுப்பு, அவன்தான் சொன்னான், அவர்கள்தான் கட்டினர்.

    தாம் என்பது படர்க்கைப் பன்மையில் வரும். முன்னிலை      ஒருமையைக் குறிப்பதாகவும் மரியாதைப் பன்மையாகவும் ’கள்’     விகுதி சேர்ந்து வரும்.

    (எ. கா)

    அவர்கள் தங்கள் கடமைகளைத் தாங்களே அறியவில்லை .

    தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்

    அமைச்சர் தாம் அறிவித்தார்

    வேற்றுமை உருபை ஏற்பதற்காகத் திரிந்த வடிவங்களாகிய தன்,     தம், தங்கள் ஆகியன தற்சுட்டுப் பெயர்களாக வழக்கத்தில்         உள்ளன.

    (எ. கா)

அவள் தன்னையே நம்பவில்லை 

அவர்கள் தம்மை உயர்வாகக் கருதினர்

தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் அவர்கள் ஆண்டனர்.


------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி