பக்தி இலக்கியம் 1. திருநாவுக்கரசர் பதிகப்பாடல்
திருநாவுக்கரசர் – தேவாரம் – 6 ஆம் திருமுறை
நாமார்க்கும்
குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில்
இடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம்
பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே
எந்நாளும் துன் பமில்லை
தாமார்க்கும்
குடியல்லாத் தன்மையான
சங்கரன்
நற் சங்க வெண் குழை ஓர் காதில்
கோமாற்கே
நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்
மலர்ச் சேவடியிணையே குறுகினோமே.
நாவுக்கரசர் குறிப்பு
- திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்தார்
- வேளாளர் மரபில் தோன்றியவர்
- புகழனாருக்கும் மாதினியார்க்கும் மகனாகப் பிறந்தவர்
- இயற்பெயர் மருள்நீக்கியார்
- தமக்கை பெயர் திலகவதி
- சமண சமயத்தில் சேர்ந்து அச்சமய நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்து ‘தருமசேனர்’ என்ற பட்டப் பெயருடன் வாழ்ந்துவந்தார்.
- இவர் பாடிய முதல் பதிகம் ‘கூற்றாயினவாறு விலக்கலீர், எனத் தொடங்கும் பாடல்
- பன்னிரு திருமுறைத் தொகுப்பில் 4, 5, 6 ஆம் திருமுறைகளாக இவருடைய பதிகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
- தாண்டக வேந்தர், அப்பர், உழவாரத் தொண்டர், வாகீசர், திருநாவுக்கரசர் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்
(அல்லது)
சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் பேறு அல்லது நன்மைகளாக திருநாவுக்கரசர் எதனைக் குறிப்பிடுகிறார்?
- மலர் போன்ற சிவபெருமானின் திருவடிகளை அடைக்கலமாக அடைந்தமையால், நாம் யாருக்கும் அடிமையாவதில்லை.
- மரணத்தைத் தருகின்ற எமனுக்கும் அஞ்சுவதில்லை.
- நரகத்தில் புகுந்து துன்பமடைவதில்லை.
- பொய்யும் புரட்டும் இனி நம்மை அணுகுவதில்லை.
- எல்லா நாளும் என்றும் ஆனந்தமாக இருப்போம்.
- நோய் என்பதையே அறியாது இருப்போம்.
- வேறு யாரையும் பணிந்து நிற்க மாட்டோம்.
- எந்நாளும் நமக்கு இன்பமே ஏற்படும்.
- துன்பம் என்பதை நாம் அறிய மாட்டோம்.
- யாருக்கும் அடிமையாகாதவனும், வெண்குழையைக் காதில் அணிந்த அரசனாகிய ஆதி சங்கரனுக்கு மட்டுமே நாம் அடிமையாக இருப்போம் என்று திருநாவுக்கரசர் பாடுகின்றார்.
- ----------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக