பக்தி இலக்கியம் 3.பொய்கையாழ்வார்

 

பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச்

செய்யசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடர் ஆழி நீ(ங்)குகவே என்று.

பொய்கையாழ்வார் குறிப்பு 

    • தமிழ் நாட்டுச் சமயங்களில் மிக முக்கியமான சமயங்கள் சைவமும் மாலியமும்ஆகும். 
    • மாலியம் என்பது வைணவம் ஆகும். வைணவ நெறியைப் பின்பற்றி பக்திநெறியில் விளங்கியவர் ஆழ்வார் ஆவர்
    • ஆழ்வார் மொத்தம் பன்னிருவர் 
    • பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் பொய்கையாழ்வார்.
    • காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் பொற் றாமரைக் குளத்தில் பிறந்தவர் எனப்படுகிறது.
    •  திருமாலின் ஐம்படைகளில் ஒன்றாக விளங்கும் பாஞ்சசன்யம்என்ற சங்கின் அம்சமாகப் பிறந்தவர்
    • இவர் பாடிய பாடல்கள் முதல் திருவந்தாதி என்று அழைக்கப்பட்டன 
    • இது நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளது
பொய்கையாழ்வார் இறைவனிடம் வேண்டுவனவற்றைக் குறிப்பிடுக?
                        அல்லது
பொய்கையாழ்வார் இறைவனை வழிபடும் முறை குறித்து எழுதுக.
                      அல்லது
பொந்கையாழ்வார் இறைவனுக்கு விளக்கேற்றப் பயன்படுத்தும் பொருள்கள் குறித்து எழுதுக?

    • பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக எடுத்தேன்
    • உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்தேன்
    • உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தினேன்
    •  சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன்
    • பிறவியாகிய துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாகஎன்று வேண்டுகின்றார்.
    • ----------------------------------------------



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி