கடுவெளிச் சித்தர் - ஆனந்தக்களிப்பு
கடுவெளிச்சித்தர் - ஆனந்தக் களிப்பு (பாபம் செய்யாதிரு மனமே)
(தன் செயலுக்கு காரணமான மனத்திடம் கூறுவதைப்
போல நமக்கு உபதேசிக்கிறார். பாவம் செய்யாதிரு, செய்தால் யமன் உன்னை கொண்டாடி அழைத்து
செல்வான் என்கிறார்)
பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சாபம் கொடுத்திட லாமோ ? - விதி
தன்னை நம்மாலே தடுத்திடலாமோ ?
கோபந் தொடுத்திடலாமோ ? - இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ ? 1
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம். 2
நில்லாது போய்விடும் நீயறிமாயம்
பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும்
பற்றா திருந்திடப்பண்ணு முபாயம். 3
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.
4
சொத்துகளிலொரு தூசும் நில்லாதே
ஏடாணை மூன்றும் பொல்லாதே - சிவத்
திச்சைவைத் தாலெம லோகம் பொல்லாதே. 5
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.
6
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.
7
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.
8
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.
11
கூடெடுத் திங்ஙன் உலைவதே தொல்லை
தேடரு மோட்சம தெல்லை - அதைத்
தேடும் வழியைத் தெளிவோரு மில்லை. 12
ஐவர்க்கும் ஐவர் அடைந்திடும் நாடு
முந்தி வருந்திநீ தேடு - அந்த
மூலம் அறிந்திட வாமுத்தி வீடு. 13
ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை
கள்ளப் புலனென்னுங் காட்டை - வெட்டிக்
கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை.
14
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ ?
பேசுமுன் கன்மங்கள் சாமோ ? - பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ. 15
போகவே வாய்த்திடும் யார்க்கும் போங்காலம்
மெய்யாக வேசுத்த காலம் - பாரில்
மேவப் புரிந்திடில் என்னனு கூலம் ? 16
சார்ந்து கொண்டாலுமே தாழ்விலாப் பொங்கம்;
அந்த மில்லாதவோர் துங்கம் - எங்கும்
ஆனந்தமாக நிரம்பிய புங்கம். 17
பற்றின பேர்க்குண்டு மேவரு முத்தி
சீரி லுயரட்ட சித்தி - யார்க்குஞ்
சித்திக்கு மேசிவன் செயலினால் பத்தி.
18
மானந்தத் தேவியின் அடியிணை மேவி
இன்பொடும் உன்னுட லாவி - நாளும்
ஈடேற்றத் தேடாய்நீ இங்கே குலாவி. 19
கான வழியை யறிந்து நீகொண்டு
சீற்றமில் லாமலே தொண்டு - ஆதி
சிவனுக்குச் செய்திடிற் சேர்ந்திடும் தொண்டு.
20
தான்மா அற்றபோதே யாமுடல் வாட்டம்
வான்கதி மீதிலே நாட்டம் - நாளும்
வையிலுனக்கு வருமே கொண்டாட்டம். 21
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்ட வெளியினைச் சார்ந்து - ஆனந்த
வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
22
இச்சைவையாமலே யெந்நாளும் தள்ளு
செத்தேன் வெள்ளம் மதைமொள்ளு - உன்றன்
சிந்தைதித் திக்கத் தெவிட்டவுட் கொள்ளு.
23
போதகர் சொற்புத்தி போத வாராதே!
மையவிழி யாரைச் சாராதே - துன்
மார்க்கர்கள் கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே.
24
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே - கல்லை
வீணிற் பறவைகள் மீதி லெய்யாதே. 25
தீங்கான சண்டையைச் சிறக்கத் தூண்டாதே
தவநிலை விட்டுத் தாண்டாதே - நல்ல
சன்மார்க்க மில்லாத நூலை வேண்டாதே. 26
பத்தினி மார்களைப் பழித்துக்காட் டாதே
வேம்பினை யுலகிலூட் டாதே - உன்றன்
வீறாப்புத் தன்னை விளங்கநாட் டாதே. 27
புகழ்ந்து பலரிற் புகல வொண்ணாதே;
சாற்றுமுன் வாழ்வை யெண்ணாதே - பிறர்
தாழும் படிக்கு நீதாழ்வைப் பண்ணாதே.
28
காட்டி மயங்கிய கட்குடி யாதே!
அஞ்ச வுயிர் மடியாதே - பத்தி
அற்றவஞ் ஞானத்தின் நூல்படி யாதே. 29
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி - நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி. 30
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம். 31
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி - யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி. 32
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே - நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே. 33
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் - தன்னைத்
துதிக்கிற் பதவி அருளுவான் ஈசன். 34
கடுவெளிச் சித்தர் குறிப்பு
- கடுவெளி என்பது வாக்கும் மனமும் கடந்த நிலையில் உள்ள பரவெளி குறித்துப் பாடுவதால் இப்பெயர் பெற்றார்.
- இவர் பாடியது 34 கண்ணிகள் கொண்டதொரு ஆனந்தக் களிப்பு.
- நந்தவ னத்திலோர் ஆண்டி என்ற பெரும்புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்
- இவர் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
- தன் செயலுக்குக் காரணமான மனத்திடம் கூ றுவதைப் போலப் பாடல்களைப் பாடி மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்
- மனமே! உயிர்களைத் துன்புறுத்தும் பாவச் செயலைச் செய்யாதே.
- அப்படிப்பட்ட செயலைச் செய்வாயானால் எமன் உன் மீது கோபம் கொண்டு உயிரைக் கொண்டு சென்று விடுவான்.
- ஒருவரை துன்பம் தரும் வார்த்தைகளால் சபிக்கக் கூடாது.
- தீமை செய்தவர்களுக்கும் சாபம் தரக்கூடாது.
- விதியை நம்மால் தடுக்க முடியாது.
- கோபம் பலவீனத்தின் அடையாளம் அதனால் கோபப் படக்கூடாது.
- பிறரது ஆசையை தூண்டும் பேச்சையோ செயல்களையோ செய்யக் கூடாது.
- பொய் சொல்லக் கூடாது
- சூதினைத் தவிர்க்க வேண்டும்
- பிறரை ஏமாற்றுதல் போன்ற நேர்மையற்ற செயல்களைச் செய்தல் கூடாது.
- இவற்றைச் செய்பவர்கள் நரகத்தை அடைவார்கள்
- இவற்றைச் செய்தால் உறவினர்கள் நண்பர்கள் உன்னை விட்டு விலகி விடுவர்.
- நல்ல பழக்க வழக்கங்கள், பக்தி, உண்மை இவைகள் நாளும் நன்மை தரும்
- இவை இருந்தால் அனைவரும் நட்புடனும் நேசத்துடனும் இருப்பர்
- எனவே இறைவன்பால் பக்தி கொண்டு, வாழ வேண்டும்.
- தண்ணீரின் மேல் நீர்க்குமிழி தோன்றி உடனே அழிந்துவிடும்.
- அதுபோல நம் உடலும் தோன்றியவுடன் அழிவது உறுதி.
எல்லா உயிர்களையும் நேசிப்பது பற்றற்று இருப்பதற்கான வழியாகும்
பற்று நீங்குவது மறுபிறப்பை அடைக்கும் வழியாகும்.
உடல் பெற்றதன் நோக்கம் இறைவனை அடைதல்.
எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்தல்.
ஆனால் அதை செய்யாமல் தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்கி உடலை நோய் துன்பம் துயரங்களுக்கு ஆட்படுத்தி தன்னையே அழித்துக் கொள்கிறான்.
- எனவே இந்த உடல் அழிகின்ற தன்மை உடையது என்று உணர்ந்து இறைவனை வணங்க வேண்டும்.
- யாரையும் இழிவாகப் பேசுதல் கூடாது.
- பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை என்ற மூன்றும் பொல்லாதவை. இவற்றை விட்டு விட வேண்டும்.
- சிவனை அன்பு கொண்டு வணங்கினால் எமன் நம்மை நெருங்குவதில்லை.
- நன்மையான வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
- எந்நேரமும் இறைவனை நினைத்திருக்க வேண்டும்.
- அறிவுள்ள பெரியோருடன் கூடியிருக்க வேண்டும்.
- வள்ளலாகிய இறைவனை வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
- உத்தமர்களான பெரியோர்களின் உறவைக் காத்துக் கொள்ள வேண்டும்.
- தருமங்கள் முப்பத்திரண்டையும் தவறாது செய்ய வேண்டும்.
- பிச்சை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்
- தீமையானவற்றைப் பின்பற்றாது இருக்க வேண்டும்.
- பொய் பேசுதல், கோள் சொல்லுதல் இவற்றை நீக்க வேண்டும்.
- வேதங்களில் கூறப்பட்டுள்ள நன்மையான வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
- பெரியோர்கள் காட்டிய வழிகளில் விருப்பமுடன் செல்ல வேண்டும்.
- மன அமைதி தரும் வார்த்தைகளை மட்டும் பேச வேண்டும்.
- கொடுமையான கோபத்தை அழிக்க வேண்டும்.
- மெய்ஞானத்தை விரும்பி அந்த வழியில் முன்னேற வேண்டும்
- வேதாந்தங்கள் கூறும் வெட்ட வெளியான இறையடியை நாடி இன்புற்று வாழ வேண்டும்
- அஞ்ஞான மார்க்கத்தை விட்டு விலக வேண்டும்
- உன்னை நாடி வருபவர்களுக்கு ஆனந்தம் (இறையை நாடும்) கொள்வதற்கான வழியை கூறி வழிநடத்த வேண்டும்
- இதுதான் உண்மையா? இதுதான் நானா? என இடைவிடாமல் ஆராய்சி செய்வதுதான் ஞான மார்க்கம்.
- அந்த வழியில் செல்.
- உன் உண்மை இயல்பை உணர்ந்து கொள்.
- அஞ்ஞானமாகிய அறியாமையை விலக்கு.
- உண்மையை தேடி
உன்னை தேடி செல் எனப் பிறருக்கு வழிகாட்ட வேண்டும்
- காசிக்குப் போனாலும் கங்கையில் நீராடினாலும் பாவங்கள் போகாது.
- நாம் செய்யும் நல்வினையும் தீவினையும் தொடர்ந்து வரும்
- ஒருவன் தாமே உழைத்து பாடுபட்டு முன்னேற வேண்டியிருக்கிறது.
- அவர்களுக்குத்தான் கடவுளின் அருள் கிடைக்கும். க
- கடவுளை வணங்க நாம் கடமைப்பட்டவர்கள்
- நிலையாக இருப்பது இறைவன் அதுதாட் உண்மை
- மற்றவையெல்லாம் நிலையில்லாதவை.
- அவைகளை சார்ந்தால் அழிவு நிச்சயம்.
- உண்மையை சார்ந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாம்.
- உண்மையை அடைய இரண்டு வழிகள் உள்ளன.
- ஒன்று பக்தி மற்றொன்று ஆராய்ச்சி(தியானம்)
- இரண்டுமே முடிவில் ஒரே உண்மையைத்தான் அடைகின்றன.
- வீடு பேற்றை அடைவதற்கு முழு தியாகமே வழி.
- அங்கிங் கெனாதபடி நீக்க மற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் அன்பு நிறைந்து நிற்கும் இதயத்தில் வாசம் செய்கிறான்.
- அவன் அடியவர்களுக்கு தாசன்.
- இறைவனை நினைப்பவர்கள் இன்ப பேற்றை அடைவார்கள்.
- என்று கடுவெளி சித்தர் உலக நிலையாமையை உணர்ந்து நிலையான இறைவனை நாடுவதே பேரின்பம் என்று அறிவுறுத்துகிறார்
கருத்துகள்
கருத்துரையிடுக