பக்தி இலக்கியம் 4.பேயாழ்வார்

 

பேயாழ்வார்

        திருக்கண்டேன் பொன் மேனிகண்டேன் திகழும்

       அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்

        பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்

        என்னாழி வண்ணன்பால் இன்று.

    பேயாழ்வார் குறிப்பு

  •      சென்னை திருமயிலையில் கேசவப் பெருமாள் கோயில் அருகில் உள்ள கிணற்றில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் 
  •  இவர் இளமையில் நன்கு கல்வி கற்றவர் 
  •  உலக வாழ்வில் பற்றின்றி இருந்தவர்
  • இடையறாது திருமாலின் பக்தியில் திளைத்து வழிபட்டு வந்தார். 
  • பேரன்பு கொண்டு வாழ்ந்ததனால் உலகத்தாரால் ‘பேயன்என்றும் அழைக்கப்பட்டார்
  •  அதிக பக்தியால் ஆடியும் பாடியும் வழிபட்டதால் ’பேயாழ்வார்என்று  அழைத்தனர். 
  • இவர் மூன்றாம் திருவந்தாதி என்னும் நூலை இயற்றியுள்ளார்
  • இந்நூல் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளது 
  • 100 பாடல்களைக் கொண்டது 
  • இந்நூல் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளது

திருமாலின் திருவுருவ அழகினைப் பேயாழ்வார் எங்ஙனம் சுட்டியுள்ளார்?

  •     பெருமானே! நான் இன்று கடலைப்போல கருமை நிறம் கொண்ட உம்     திருமுகத்தைக் கண்டேன். 
  • உம்முடைய அழகிய திருமேனியைக் கண்டேன். 
  • உம்     திருமார்பில் மலர்ந்திருக்கும் இலக்குமியைக் கண்டேன். 
  • உம்முடைய கையில்     எதிரிகளை அழிக்கும் பொன்நிற சக்கரத்தையும், வலம்புரிச் சங்கையும் கண்டேன்.     
  • உன் திருவுருவ அழகினையும் அருளினையும் பெற்றேன்என்று மனமுருகிப் பாடுகின்றார்.
----------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி