நாமக்கல் கவிஞர் ⦁ கத்தியின்றி ரத்தமின்றி

 

3. நாமக்கல் கவிஞர்

கத்தியின்றி ரத்தமின்றி


 கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்! . .(கத்தி)

ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே

மண்டலத்தில் கண்டிலாத சண்டையன்று புதுமையே! .(கத்தி)

குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே

எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய் . .(கத்தி)

கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே

பாபமான செய்கையன்றும் பண்ணு மாசையின்றியே . .(கத்தி)

கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி

பண்டு செய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட! . .(கத்தி)

காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி

மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வமார்க்கமே . .(கத்தி)


1. நாமக்கல் வெ இராமலிங்கம் பிள்ளை குறிப்பு 

  • இராமலிங்கம் பிள்ளை கவிஞர், எழுத்தாளர், இதழாளர், விடுதலை வீரர், சீர்திருத்தச் செம்மல் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர்.  
  • பெற்றோர் : வெங்கட்ராமப் பிள்ளை, அம்மணி அம்மாள் 
  • பிறந்த ஆண்டு : 19.10.1888 
  • தமிழ்நாடு அரசின் முதல் அரசவைக் கவிஞராக இவர் விளங்கினார்.


  • சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்
  • இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்திற்காக 1912 ஆம் ஆண்டு மன்னர் குடும்பம் இவருக்குத் தங்கப் பதக்கம் அளித்துச் சிறப்பித்தது
  • காந்தியடிகளையும், பாரதியையும் தனது ஆசான்களாக ஏற்றுக்கொண்டார்
  • 1932 -ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டதில் ஈடுபட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் பெற்றார்
  • எளிய சொற்களில் கவிதை படைத்து, காந்தியக் கொள்கைகளைப் பரப்பினார். 
  • நூறு தேசபக்திப் பாடல்களை ’நாட்டுக்கும்மி’ என்ற தலைப்பில் எழுதினார்
  • தேசியக் கவிஞர்’ ’காந்தியக் கவிஞர்’ ’அரசவைக் கவிஞர்’ ’காங்கிரசுப் புலவர்என்றெல்லாம் புகழப்பட்டவர் இராமலிங்கம் பிள்ளை.

இவரது நூல்கள் 

சங்கொலி’,  ’நாமக்கல் கவிஞர் பாடல்கள்’, ’பிரார்த்தனைமுதலான  இவரது மிகச் சிறந்த கவிதைப் படைப்புகள்

கம்பனும் வால்மீகியும்’, ’திருவள்ளுவர் திடுக்கிடுவார்முதலான இவரது ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. 

தமிழ் மொழியும் தமிழரசும்’, ’இசைத்தமிழ்’ முதலானவை இவரது உரைநடைக் கட்டுரைகள். திருக்குறளுக்கு உரையும் எழுதியுள்ளார். 

தாமரைக்கண்ணி, மரகதவல்லிமலைக்கள்ளன்முதலான புதினங்களையும் மாமன் மகள்’ ’அரவணை சுந்தரம்ஆகிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

விருதுகள்

  • 1945 -ஆம் ஆண்டு இவரைப் பாராட்டிச் சென்னையில் நடந்த விழாவில், காமராசர், திரு.வி.க., உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டிப் பெருமைப்படுத்தினர்
  • தமிழ்நாடு அரசு வரை அரசவைக் கவிஞராகவும் சட்ட மேலவை உறுப்பினராக்கியும் (1956, 1962) சிறப்பித்துள்ளது
  • 1971 இல் இந்திய அரசின் பத்மபூஷன் விருதினையும் பெற்றுள்ளார்.   

நாமக்கல் கவிஞர் எழுதிய கத்தியின்றி ரத்தமின்றி என்ற  கவிதையின் செய்திகளை விவரிக்க.


 சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியடிகள் தண்டியாத்திரையை ஆரம்பித்தார்.  தமிழ்நாட்டில்n ராஜாஜி தலைமையில்n போராட்டம் நடைபெற்றது.  தொண்டர்கள்   களைப்பில்லாமல்  உற்சாகத்துடன்  செயல்படுவதற்காக கத்தியின்றி  ரத்தம் இன்றி  யுத்தம் ஒன்று  வருகிறது எனத் தொடங்கும் பாடலை நாமக்கல் கவிஞர் எழுதினார்.


 கத்தி இல்லாமல்,  ரத்தம் இல்லாமல்  போர் ஒன்று  வருகிறது.  இதன் உண்மை நிலையை  உணர்ந்தவர்கள் எல்லோரும்  இதில் சேர வேண்டும் என்று போராட்டத்திற்கு  அடைக்கிறார்

 

குண்டுகள் வீசி  உயிரைப் பறிக்கும்  நிலை  இந்த போரில் இல்லை.  இந்த உலகம்  இதுவரை  பார்த்திராத  புதுமையான  போர்  நடைபெற உள்ளது

 

இந்தப் போரில்  குதிரைப் படை,  யானைப் படை முதலிய  படைகள் இல்லை.   யாரையும் கொல்ல விருப்பமில்லை.  ஏனெனில்  எதிரி என்று  எவரும் இல்லை.


 யார் மீதும்  கோபம் இல்லை.  துன்பமில்லை.  எவர் மீதும்  சாபம் கூறும் நிலையும் இல்லை.  அதைப்போலவே  பாவம் செய்யும்  செயல்களை செய்யும் ஆசையும் இப் போராட்டத்தில் இல்லை.


 இந்த மாதிரியான  அறவழிப் போராட்டத்தை  இதுவரை  யாரும்  கண்டதில்லை  கேட்டதும் இல்லை.  முற்காலத்தில்  நாம் செய்த  நல்ல செயல்களின்  பயனை  நாம் இப்போது பார்க்கிறோம்.

 காந்தியடிகள்  இந்திய விடுதலைப் போராட்டத்தை  தலைமையேற்று  அகிம்சை வழியில் நடத்தினார்.  சாந்த வடிவில் இருக்கும்  காந்தி காட்டிய  சிறந்த வழியில் நடப்போம்.  மனிதர்களில்  தீமை எண்ணங்கள்  குறையும்படி  நமக்கு வாய்த்தவர் காந்தியடிகள்  எனக் கவிஞர் குறிப்பிட்டுள்ளார்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி