தனிப்பாடல்கள் அறிமுகம்

 

            

தனிப்பாடல் அறிமுகம்

  • தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தனிப்பாடல் திரட்டு’கள் முக்கிய இடம் பெறுகின்றன.
  • தனிப்பாடல் திரட்டு என்பது பல்வேறு புலவர்கள் அவ்வப்போது பாடிய தனிப்பாடல்களின் தொகுப்பாகும். 
  • பின்னாளில் வந்த ஆர்வலர்கள் அவற்றில் தங்களை மிகவும் கவர்ந்த பாடல்களைத் தொகுத்து வைத்தனர். 
  • படைத்த புலவர்களின் தனிப்பட்ட உள்ளப்போக்கு, சமூகச் சூழல், இலக்கிய இன்பம் ஆகியவற்றைத் தனிப்பாடல்கள் வழி அறியலாம்.
  • தனிப்பாடல்களில் அவலம், பெருமிதம், இகழ்ச்சி, புகழ்ச்சி, வசை போன்ற சுவைகள் மிகுந்துள்ளன. 
  • ஓசை விளையாட்டு, சொல்விளையாட்டு, விடுகவி, கடுகிலே ஏழ்கடலைப்  புகட்டும் ஆற்றல் போன்ற புலவர்களின் புலமை நுட்பம் மற்றும் சொல்வளம் ஆகியனவும் நிறைந்து விளங்குகின்றன.  

திரட்டுகளின் தோற்றம்

  • பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் ஆகியன திரட்டுகளே எனினும் திரட்டுகள் என்னும் இலக்கிய வகை முழுமையாகத் தோன்றி வளர்ந்த காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு ஆகும்.
  • ஔவையார், இரட்டைப் புலவர்கள், காளமேகம் போன்றோர் பாடிய தனிப்பாடல்கள் பிற்காலத்தில் திரட்டாக வடிவம் பெற்றன.
  • ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ உமாபதி சிவாச்சாரியாரின் ‘திருமுறைத் திரட்டு’ பட்டினத்துப் பிள்ளையார் ‘திருப்பாடல் திரட்டு’ போன்றன சமய அடிப்படையிலான திரட்டுகள் ஆகும்.

 இனி, சில திரட்டு நூல்கள் குறித்தும் சில தனிப்பாடல் புலவர்கள் குறித்தும் காணலாம்.

சில திரட்டு நூல்களின் அறிமுகம்

    1. புறத்திரட்டு

  • 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திரட்டு நூல்களில் குறிப்பிடத்தக்கது ’புறத்திரட்டு’.
  •  சங்கப் பாடல்கள் முதல் கம்பரின் இராமாயணம் வரை வெளிவந்த இலக்கியங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1570 பாடல்களின் தொகுப்பாக இந்நூல் காணப்படுகிறது.

     2. தமிழ் நாவலர் சரிதை

  •  17 ஆம் நூற்றாண்டில் தோன்றிய புகழ்பெற்ற தனிப்பாடல் திரட்டு நூல், ‘தமிழ் நாவலர் சரிதை’.

  • சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் உள்ளிட்ட 51 புலவர்களின் பாடல் தொகுப்பாக இது விளங்குகிறது.

     3. 19 ஆம் நூற்றாண்டு தனிப்பாடல் திரட்டுகள்

 

  • 19 ஆம் நூற்றாண்டில் அதிகம் வெளிவந்த நூல்களாகத் தனிப்பாடல் திரட்டுகளே காணப்பெறுகின்றன.
  • கிபி 18 ஆம் நூற்றாண்டில் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவரின் ‘தனிப்பாடல்கள் நூல் திரட்டு’ வெளிவந்தது. 

  • யுரேனியஸ் ஐயரின் ‘வேத உதாரணத் திரட்டு’ மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் ‘பிரபந்த திரட்டு’, சந்திரசேகர கவிராயர் பண்டிதரின் ‘தனிப்பாடல் திரட்டு’ போன்றன குறிப்பிடத்தக்கன.

     4. பிரபந்தத் திரட்டு

  •  19 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட மற்றொரு திரட்டு நூல் பிரபந்தத் திரட்டு. 
  • இது சிற்றிலக்கியங்கள் பற்றிய செய்திகளைத் திரட்டித் தருவதாக அமைந்துள்ளது.

  5. பன்னூற்றிரட்டு

  பாண்டித்துரைத் தேவர்  அறத்துப்பால், பொருட்பால் என்னும் இரு பகுதிகளில் 54 அதிகாரங்களைக் கொண்டு ‘பன்னூற்றிரட்டு’ என்னும் திரட்டு நூலை வெளியிட்டுள்ளார்.

 6.விநோதரச மஞ்சரி

  •  வீராசாமி செட்டியார் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை உரைநடை வடிவத்தில் திரட்டி ‘விநோதரச மஞ்சரி’ என்னும் நூலாக வெளியிட்டார். கம்பர், காளிதாசர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, காளமேகப் புலவர் போன்ற புலவர்களைப் பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன.

 7. பாவலர் சரித்திர தீபகம்

  • சதாசிவம் பிள்ளை அவர்கள் தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழ்ந்த புலவர்களைப் பற்றிய செய்திகளையும் பாடல்களையும் தொகுத்து இப்பெயரில் வெளியிட்டுள்ளார்.

 இவ்வாறு 19 ஆம் நூற்றாண்டில் பல்வேறு திரட்டுகள் வெளிவந்துள்ளன.

 8. இருபதாம் நூற்றாண்டு தனிப்பாடல் திரட்டுகள் 

  •  தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் மகாவித்துவான் ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளைப் பிரபந்த திரட்டு’,தியாகராஜ செட்டியார் பிரபந்தத் திரட்டு’, ‘சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு’, ‘குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு’ ஆகியவற்றை வெளியிட்டார்.

தனிச்செய்யுட் சிந்தாமணி

  • புலவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கும் ‘தனிச்செய்யுட் சிந்தாமணிதிரட்டு இக்காலத்தில் தோற்றம் பெற்றுள்ளது. ஏறத்தாழ 180 புலவர்களின் 3815 பாடல்களைக் கொண்டுள்ளது இத்திரட்டு நூல்
பிற திரட்டு நூல்கள்
  • ரா.பி. சேதுப்பிள்ளை பாரதி இன்கவித் திரட்டு’, பாம்பன் சுவாமிகளின் தோத்திரங்களைப் பாராயணத் திரட்டு’ என்ற பெயரிலும் திரட்டியுள்ளார்.
  • சாகித்ய அகாதெமிக்காக  ரா.பி. சேதுப்பிள்ளை தொகுத்த  'தமிழ்க் கவிதைக் களஞ்சியம் ' சிற்பி பாலசுப்ரமணியம் தொகுத்த   'மண்ணில் தெரியுது வானம்' ஆகியனவும் குறிப்பிடத்தக்கன.
  •  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ‘சதகத் திரட்டு’ என்ற ஒன்றை வெளியிட்டது.
  •   பேராசிரியர் வீ.அரசு அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் 18 நாடகங்களின் தொகுப்பினைச் ‘சுவாமிகளின் நாடகத் திரட்டு’ என்ற பெயரில் திரட்டிப் பதிப்பித்துள்ளார்.
  • நீதி நூல்களின் சிறந்த பாடல்களைக் கொண்ட நீதிநூல் திரட்டு’ம் இவ்வகையினைச் சார்ந்தது ஆகும்.
  • இராமலிங்க வள்ளலாரால் வெளியிடப்பட்ட திருவருட்பா நூலுக்கு ஆறுமுக நாவலர் 'மருட்பா' என எதிர்ப்பு நூல் எழுதி வெளியிட்டார். இருதரப்பு கண்டனச் செய்திகளையும் தொகுத்துச் சரவணன் என்பவர் ‘அருட்பா-மருட்பா கண்டனத் திரட்டு’ என்னும் பெயரில் தொகுத்துள்ளார்.
  • சட்டத்துறையின்    நுணுக்கங்களையும் பல்வேறு சட்டங்களையும் தீர்ப்புகளையும் விவரிக்கும் ‘தீர்ப்புத் திரட்டு’ம் குறிப்பிடத்தக்கது.
  •  நித்தியானந்தனின் தமிழ்ச் சிறுகதைத் திரட்டு', 
  •  ஆனந்த குமாரால் வெளியிடப்பட்ட ‘தகவல் திரட்டு' (பொது அறிவு) 
  •  தேவிராவின் 'தமிழ்  இலக்கிய தகவல் களஞ்சியம்
  • சுராவின் 'ஜாதகத் திரட்டு’ என்று புதிய தளங்களில் திரட்டுகள் தோன்றி வருகின்றன.

இணையதளத் திரட்டுகள்

  • இணையதளத்தில் தமிழ் நூல்களின் பட்டியலை விவரிக்கும் 'மின்னூல் திரட்டு’,  
  •  விக்சனரி’ இணையதளத்தின்  ‘தமிழ்ச் சொற்கள் திரட்டு',
  •  தமிழ் இணையதளங்களில்  பயணிப்போருக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழ்ப் பதிவர் திரட்டு'  ஆகியவையும் குறிப்பிடத்தக்க திரட்டுகளாகும்.

மிழில் திரட்டு முயற்சிகளானது, தனிப் பாடல்களில் தொடங்கி இன்று இலக்கியம், இலக்கணம், சோதிடம், இணையம்பொது அறிவு எனப் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதை அறிய முடிகின்றது.

தனிப்பாடல் பாடிய புலவர்களின் அறிமுகம்

 1.   இரட்டைப் புலவர்கள்

  • இவர்களில் ஒருவர் பார்வையற்றவர்  மற்றொருவர்  கால்கள் ஊனமுற்றவர்
  • இளஞ்சூரியர், முதுசூரியர் என்று அழைக்கப்படவர்கள்
  • 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்
  • ஒருவர் பாடலின் முன்பகுதியினைப் பாட மற்றவர் பாடலின் பின்னடியைப் பாடி முடிப்பர்.
  • இவர்களின் பாடல்களில் ஏராளமான நகைச்சுவைக் கதைகள் காணப்பெறுகின்றன.
  •             தில்லைக் கலம்பகம், திருவாமத்தூர் கலம்பகம், கச்சிக்கலம்பகம், ஏகாம்பர நாதர் உலா, தியாகேசர் பஞ்சரத்தினம் போன்றன இவர்கள் எழுதிய நூல்கள் ஆகும் 

  1. காளமேகம்

காலம் : 15-ஆம் நுற்றாண்டு

இயற்பெயர் : வரதன்

ஊர் : விழுப்புரம் – எண்ணாயிரம் (நந்திக் கிராமம்)

  •  மேகம் மழை பொழிவது போல் கவிதை பாடியதால் ‘காளமேகப்புலவர்’ என அழைக்கப்பெற்றார்.
  • திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர் 
  • பின்னர் சைவத்திற்கு மாறினார் என்று கூறுவர். 
  • திருவானைக்காவில் காலமானார்.
  • ஆசு கவி, சைவப் பாடல்கள், சிலேடைப் பாடல்கள், நகைச் சுவைப் பாடல்கள், வசைபாடுதல் ஆகியவற்றில் வல்லவர்.
  • திருமலைராயன் அவைக்களத் தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு ‘எமகண்டம்’ பாடி அவரை வென்றவர். 
  • வர்க்க (ஒரே இன) எழுத்துகளை மட்டுமே கொண்டு பாடல்கள் பல புனைந்தவர்.
  • திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, சமுத்திரவிலாசம், சித்திரமடல், பரப்பிரம்ம விளக்கம், வினோதரச மஞ்சரி, தமிழ் நாவலர் சரிதை, புலவர் புராணம், தனிச்செய்யுள் சிந்தாமணி, பெருந்தொகை, கடல் விலாசம் ஆகியவை இவர் இயற்றிய நூல்களாகும்

  1. ஒளவையார்

  •  ‘ஔவை’ எனும் சொல்லுக்குத் ‘தாய்’ ’தவப்பெண்’ என்னும் பொருள்கள் உண்டு.  
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயர் கொண்ட புலவோர் பலர் சங்க காலம், நாயன்மார் காலம், கம்பர் காலம், பிற்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் பலர் வாழ்ந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
  • முதல் ஔவையார் கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர், இவர் பாண் குடியைச் சார்ந்தவர்
  •   இவர் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார்.
  • நீதி இலக்கிய காலத்து ஔவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் மூதுரை போன்ற அற இலக்கியங்களையும் படைத்துள்ளார்.

 

  1. அந்தகக்கவி வீரராகவர் 

 ஊர் : தொண்டை நாடு (காஞ்சிபுரம் மாவட்டம்) பூதூர் (களத்தூரில் வாழ்ந்தார்)  தந்தை பெயர் : வடுகநாதர்.

  • அந்தக்கவி வீரராகவர் பிறவியிலேயே பார்வை இல்லாதவர்.
  • கேள்வியறிவின் வாயிலாகக் கல்வி கற்றார்.
  • இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, அணிமணிகள், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்றார்.
  • ஆரூர் உலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவேங்கடக் கலம்பகம், சந்திரவாணன் கோவை, கீழ்வேளூர் உலா ஆகியவை பாடியுள்ளார்.
  •  வள்ளல்கள் மீதும் சிற்றரசர்கள் மீதும் பல தனிப்பாடல்கள் பாடிப் பரிசுகள் பெற்றுள்ளார்.

5. சத்திமுத்தப் புலவர்

ஊர் : கும்பகோணம் சத்திமுத்தம்

  • மதுரையில் வாழ்ந்தார் எனக் கூறுவர். 
  • இவரது இயற்பெயர் என்னவென்று அறியப்படவில்லை.
  • இவரைக் குறித்துப் பாரதிதாசன் சத்திமுத்தப் புலவர்  என்னும் சிறு நாடக நூலை 1950 இல் வெளியிட்டுள்ளார்.   

            தனிப்பாடல்களின் சிறப்பினையினையும் அப்பாடல்களைப் பாடிய புலவர்களின் புலமை நுட்பத்தினையும் அறிந்து கொள்ளலாம்.


---------------------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி