இம்பர் வான் எல்லை இராமனையே பாடி - வீரராகவர்

 இம்பர் வான் எல்லை இராமனையே பாடி

- வீரராகவர்

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி

என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி

வம்பதாங் களபமென்றேன் பூசுமென்றாள்

மாதங்கமென்றேன் யாம் வாழ்ந்தோமென்றாள்

பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்

கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்

கைமா என்றேன் சும்மா கலங்கினாளே


1. அந்தகக்கவி வீரராகவர் குறிப்பு எழுதுக.

 

பிறந்த ஊர் : இவர் தொண்டை நாட்டில் (காஞ்சிபுரம் மாவட்டம்) பூதூர்

வாழ்ந்த ஊர் :  களத்தூர்

தந்தை பெயர் : வடுகநாதர்.

  • இவர் இசைப் பயிற்சி உள்ளவர்
  •  இவர் பிறவியிலேயே பார்வை இல்லாதவர்.
  •  கேள்வியறிவின் வாயிலாகக் கல்வி கற்றார்.
  • தமது முதுகில் எழுத்துகளை எழுதச் சொல்லி எழுத்துக் கற்றார்.
  • இவர் இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, அணிமணிகள், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்றார்.
  • ’திருவாரூர் உலா’, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சந்திரவாணன் கோவை போன்ற சிற்றிலக்கிய நூற்களைப் படைத்துள்ளார்
  •  தனிப்பாடல்களையும் எழுதியுள்ளார்

2. இராமன் பரிசளித்த சிறப்பு குறித்துப் பாணன் பாடினி இடையே நடைபெற்ற உரையாடலை எழுதுக.


  • பாணனின் மனைவியானவள் பாணனிடம், வான்புகழ்பெற்ற இராமன் என்ற வள்ளலைப்பாடி என்ன பரிசு கொண்டு வந்தாய்? என்று கேட்டாள். 
  • அதற்கு பாணன்  யானையைக்குறிக்கும் களபம்  என்றான். 
  • அவள் அதை சந்தனம் என்று நினைத்துப் பூசும் என்றாள்.
  • பாணன் யானையின் மற்றொரு பெயரான "மாதங்கம்’ என்றான்.
  • அவள் அதை மிகுதியான தங்கம் என்று நினைத்து நம் வறுமை நம்மை விட்டு அகலும் என்றாள்
  •  பாணன் வேழம் என்றான். அவள் கரும்பு என்று நினைத்துத் தின்னும் என்றாள்.
  •  பாணன் பகடு என்று சொல்ல அவள் அதை மாடு என்று நினைத்து வயலை உழுக’ என்றாள்.

  • அவன் இறுதியாக கம்பமா என்று சொல்ல அவள் கம்பு மாவு என்று நினைத்து நல்ல களியாகச் செய்யலாம் என்றாள். 
  •  பின்னர் பாணன் கைம்மா என்று கூற அவள் யானை என்பதை உணர்ந்து கலங்கினாள். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி