வான்குருவின் கூடு - ஔவையார்
அ. வான்குருவின் கூடு
- ஔவையார்
வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமை சொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது
1. ஔவையார் குறிப்பு எழுதுக.
- ‘ஔவை’ எனும் சொல்லுக்குத் ‘தாய்’ ’தவப்பெண்’ என்னும் பொருள்கள் உண்டு.
- தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயர் கொண்ட புலவோர் பலர் இருந்திருக்கிறார்கள்
- சங்க காலம், நாயன்மார் காலம், கம்பர் காலம், பிற்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் பலர் வாழ்ந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
- முதல் ஔவையார் கடைச்சங்க காலத்தைச் சார்ந்தவர்
- இவர் பாண் குடியைச் சார்ந்தவர்
- இவர் ஓர் இலக்கிய அறிஞர்.
- பெண் கவிஞர்களின் முன்னோடி.
- அதியமானின் அவைக்களப் புலவராக விளங்கியவர்.
- அன்றைய தமிழ்நாட்டின் முதல் பெண் தூதர்
- இவர் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார்.
- அகப்பாடல்கள் 26, புறப்பாடல்கள் 33 ஆகும்
- அற இலக்கியங்களையும் படைத்துள்ளார்
1. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு என்பதை ஔவையார் எவ்வாறு விளக்குகிறார்?
தூக்கணாங்குருவியின் கூடும், வன்மையான அரக்கும், கரையான் புற்றும், சிலந்தி கூடும் எல்லோராலும் செய்யமுடியாது.
ஆதலால் மிக திறமை உள்ளவர் நான்தான் என்று எவரும் இவ்வுலகில் பெருமை கூற வேண்டாம்
எனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும்
ஒவ்வொருக்கும் ஒரு செயலைச் செய்தல் எளிதாகும் என்று ஔவையார் விளக்குகிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக