பாரதிதாசன் - சிறுத்தையே வெளியில் வா
2. பாரதிதாசன்
- சிறுத்தையே வெளியில் வா
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப்பட்டது! சிறுத்தையே வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகை விரி எழு!
சிங்க இளைஞனே திருப்பு முகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய் விரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக் கென் பார் எனில்,
வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற்றெழுக?
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யோம் பூணம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக் கொணக் கடல் போல் மாப்பகை மேல் விடு!
நன் மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன் மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்று சேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்கதின் கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் தன்னே!
பாரதிதாசனின் சிறுத்தையே வெளியில் வா என்னும் கவிதையின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக
அக்காலத்தில் மக்கள் ஜாதி மதம் போன்ற மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் . பாரதிதாசன் பூட்டிய இரும்பு கூடு என்று கூறுகிறார்
இக்காலத்தில் மூடநம்பிக்கையை அகற்றி அனைவரும் சமம் என்ற நிலை உருவானது என்பதை பூட்டிய இரும்பு கூடு திறந்தது என்று எழுதியுள்ளார்
தமிழ் இளைஞர்களை பாரதிதாசன் சிறுத்தையைப் போன்ற உடல் வலிமையும் மன வலிமையும் உடைய தமிழ் இளைஞனே மூடநம்பிக்கை என்னும் கூட்டிலிருந்து வெளியே வா என்று அழைக்கிறார்
தமிழனாகிய உன்னை இதுவரை எலி போல நினைத்தவர்கள் அஞ்சுமாறு புலி போல புறப்பட்டு வா என்கிறார்
இதுவரையில் நீ பகுத்தறிவு என்னும் ஒளி மிகுந்த பகல் பொழுதை இருட்டு என்று நம்பி வந்தாய். இந்த மூடநம்பிக்கையை விட்டுவிட்டு சிம்புட் பறவையைப் போன்ற தமிழ் இளைஞனே! உன்னுடைய சிறகை விரித்து பறந்து வா!
சிங்கத்தைப் போன்ற இளைஞனை உன் முகத்தை திருப்பு ! விழிகளை திறந்து பார்!
இங்கே உன் தமிழ்நாட்டில் இழிவான கழுதைகளைப் போன்றவர்களுடைய ஆட்சி வேண்டுமா? என எண்ணி பார் என்கிறார்.
பகைவர்களாகிய ஆரியர்கள் ஒன்றும் இல்லாமல் தம் கைகளை வீசிக்கொண்டு வந்தார்கள். பல பொய்கதைகளை பேசி அவற்றை நம்ப வைத்து நம் அறிவு புலன்களை மறைத்து தமிழுக்கு விலங்கு பூட்டி தாயகத்தை கைப்பற்றினார்கள். தமிழர்களாகிய நமக்கு உள்ள உரிமைகள் அத்தனையும் தமக்கே உரியன என்று சொந்தம் கொண்டாடினார்கள்.
அவர்களுடைய பொய் கதைகளை நம்புவாய் என்றால் உன்னுடைய பரம்பரை வீரம் எங்கே போனது? உன்னுடைய தாய் மொழி பற்று என்ன ஆனது? எனவே விழித்து எழுக என்கிறார்
நம் தன்மானத்திற்கு ஓர் இழுக்கு என்றால் இறந்து விடுவோம் என்றும் நம் புகழையை நாம் விரும்பி ஏற்பது என்று நாம் உறுதி கொண்டு இந்த உலகத்தையே ஆண்ட வளமான தமிழ் மரபே உன் கையிருப்பு என்பதை காட்ட உடனே எழுந்திடுவாய்
இளைஞர் கூட்டம் எங்கே போனது? மறித்து அடக்க முடியாத கடல் போன்ற பெரிய பகைவர் மீது உன் வீரத்தை காட்டு
நன்மை மிகுந்த நம் தமிழ் மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு. பொன்னைப் போன்ற தமிழ் மொழிக்கு புதுமைகளை சேர்த்திட புறப்படு
தமிழ் மக்களை ஒன்று சேர்த்து வாழ்க்கையை உயர்த்து உன் திறமை என்ன என்பதை காட்ட எழுந்திடு. தமிழ் இளைஞனே நீ வாழ்க. தமிழ் கூட்டம் வாழ்க திராவிடம் வாழ்க என்கிறார்
இவ்வாறு தமிழ்நாட்டு இளைஞர்களை அந்நிய ஆட்சிக்கு எதிராக தமிழ் மொழியை காக்க தமிழ் மக்களை காக்க எழுந்திடுவாய் என பாரதிதாசன் உணர்ச்சிமிக்க கவிதையால் அழைக்கிறார்
கருத்துகள்
கருத்துரையிடுக