தெல்காப்பியப் பூங்கா - கலைஞர்

தொல்காப்பியப் பூங்கா - கலைஞர் மு. கருணாநிதி 


1. கலைஞர் மு.கருணாநிதி குறிப்பு தருக


பெரியார், அண்ணா ஆகிய இரு பெரும் தலைவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்பட்ட திராவிட இயக்கத் தலைவர்களில் முதன்மையானவராகக் விளங்கியவர் மு.கருணாநிதி. தமிழகம் மற்றும் இந்திய அரசியல், இலக்கிய மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு தலைசிறந்த ஆளுமையாக விளங்கியவர்.  

 பிறந்த நாள் : 03-06-1924 

பெற்றோர் : முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் 

ஊர்     :  நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊர்

கல்வி :  தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் பெற்றார். திருவாரூர்                                    உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார்

ஆர்வம் :   இசை, எழுத்து மற்றும் சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் உடையவர்      

   இவர், தனது 14வயதிலேயே பல்வேறு சமூக இயக்கங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டு, அரசியலில் நுழைந்தார்.

 அரசியல் வாழ்வு : 

  •     1969 இல் அண்ணா மறைந்த பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பினை  45 வயதில் ஏற்றுக்கொண்டார்
  • தி.மு..வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது மறைவுவரை 50 ஆண்டுகள் அப்பதவியை வகித்தார்
  • 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரான மு.கருணாநிதி, 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்
  • 62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினர் பணி எனத் தொடர்ந்த கலைஞரின் சாதனைகள் எண்ணிலடங்காதவை.

 நலத்திட்டங்கள் :

  • இலவசக் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்;   
  • மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றி மாநில உரிமைகளுக்கு வித்திட்டவர்
  • இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்
  • தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டுவந்தவர்
  • மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, கைம்பெண்களுக்கு மறுமண உதவித் திட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்கள் காவல் நிலையம் எனப் பெண்ணுரிமை காத்தவர் என்னும் பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் கலைஞர் மு.கருணாநிதி.
  • கல்வித்துறையில் பாரதிதாசன் பல்கலைக் கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம், ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடைப் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை அமைத்துக் கல்விப் புரட்சி செய்த இவர், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்களைத் தீட்டினார்.

· தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான பல்வேறு போராட்டங்களுக்கு மூல காரணமாக இருந்து, தமிழ் மொழி/கலாச்சாரக் காப்பில் பெரும்பங்காற்றினார்.

· தமிழ் அறிஞர்களின் ஆய்வரங்கத்தைக் கூட்டி, தமிழ் ஆண்டு வரிசைக்குத் திருவள்ளுவர் ஆண்டுஎன்ற பெயரை அளித்தார்.

· 133 அடி உயரத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவருக்குச் சிலை அமைத்ததோடு, சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்குக் காரணகர்த்தாவாக இருந்தார்.

· ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கினார்.

· மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970 இல் ஏற்படுத்தினார்.

· மத்திய அரசின் ஞானபீடம்விருதுக்கு இணையாகக் குறள் பீடம்என்ற அமைப்பை நிறுவிப் பரிசு வழங்கியதோடு, இந்திய மொழிகளிலும் பிற உலக மொழிகளிலும் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் பணியும் நடத்த ஏற்பாடு செய்தார்.

·   தமிழ்நாடு தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு பெறுவோர், தமிழில் அடிப்படைத் தகுதி பெற்றிருக்க வேண்டும், தமிழ் வழியில் உயர்கல்வி பயில்வோருக்கு ஊக்கத்தொகை போன்ற திட்டங்களும் இவரால் கொணரப்பட்டு, தமிழ்க் கல்வி, தமிழ்வழிக் கல்வி ஊக்கப்படுத்தப்பட்டது


2. தெல்காப்பியப் பூங்காவில் வெளிப்படும் கலைஞரின் உவமை மற்றும் கற்பனைத் திறத்தை விவரிக்க.

தொல்காப்பியர், 'எழுத்து' என ஓலையில் தலைப்பு எழுதிவிட்டு, சிந்தனை உறக்கத்தில் ஆழ்ந்தார். அவர் எழுதப்போகும் இலக்கண இலக்கியக் கருவூலத்திற்கான கனவுச் சிந்தனையில் மிதக்கத் தொடங்கினார்.

உவமை

கண்ணுக்கு - அரிசி உவமை

நெடுநேரம் மழை நீரில் ஊறிய நெல்லுக்குள்ளிருந்து அரிசி தலை காட்டுவதுபோல, வெள்ளை விழிகள் இமைகளின் இடுக்குகளில் ஒளிகாட்டிய வண்ணமிருந்தன என்று அரிசிக்குக் கண்களை உவமை செய்துள்ளார்.

எழுத்துப் பணி உழவுப்பணிக்கு உவமை

ஏட்டில் பதிந்து உழவு செய்வதற்கு முன்பு அவர் இதயத்தில், ஆழ உழுதிடும் பணியைச் செய்தார் என்று உவமித்துள்ளார் கலைஞர்.  

மொழிகளின் மூலம் ஒலி

எல்லா மொழிகளுக்கும் ஒலிதான் மூலம் என்பதாலும் இஃது எழுத்ததிகாரம், என்பதாலும் முதல் நூற்பா எழுத்து எனத் தொடங்குகிறது.

தொல்காப்பியரைப் பின்பற்றிய வள்ளுவர்

தொல்காப்பியரைப் பின்பற்றித்தான் போலும் அய்யன் வள்ளுவரும் அகர முதல எழுத்தெல்லாம்என்று திருக்குறளை எழுத்திலேயே தொடங்கியிருக்கிறார்.

எழுத்துக்களின் அணிவகுப்பு

மிழ் மொழியில் உள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களை அலசி ஆய்ந்து பார்க்கும்போது, அவையனைத்தும் முப்பது எழுத்தொலியில் அடங்கிடும் என்ற வரம்பு, தொல்காப்பியக் காலத்திற்கு முன்பே வழிவழியாக வந்த ஒன்றாகும். அதனால்தான் காப்பியரின் அந்தக் கனவில் ஒலியெழுப்பியவாறு எழுத்துகள் அணிவகுத்து வீறுநடை போட்டு வந்து கொண்டிருந்தன.

ஒவ்வொரு முதலெழுத்தும் அவர் முன் நடந்து வந்து; வணக்கம் தெரிவித்து விட்டு வரிசையில் நின்றன.

, , , , , , , , , , , ஔ என, ஒரு முன் வரிசை அமைந்தது. பின் வரிசையில் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய எழுத்துகள் அணி வகுத்தன.

நிழல் எழுத்து (குற்றியலிகரம், குற்றியலுகரம்)

அப்போது, சுவர் ஓரமாக ஒரு நிழல் தென்பட்டது. அதைத் தொடர்ந்து இன்னொரு நிழலும் தென்பட்டது. அந்த இரு நிழல்கள் எழுப்பிய ஒலி, சற்றுக் குறுகியதாகக் கேட்டமையால், அந்த வேறுபாட்டை உணர்ந்த தொல்காப்பியர், விழி திறந்து நோக்கினார்.

ஒரு நிழல்; என் பெயர் ''கரம் என்றது! இன்னொரு நிழல்; என் பெயர் கரம் என்றது!

தொல்காப்பியர் அந்த நிழல்களைப் பார்த்து, “நீங்கள் குற்றியலிகரம் - குற்றியலுகரம் என்ற வரிசையில்தான் இடம் பெறுவீர்கள். உங்களை முதல் எழுத்துகள் முப்பதின் வரிசையில் வைக்க முடியாது" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

கையில் கம்புடன் தோன்றிய எழுத்து

கையில் ஒரு கம்புடன் ஒரு புதுமையான எழுத்துருவம் அங்கே தோன்றி "இந்த முப்பதோடு என்னை இணைக்க ஒப்புகிறீர்களா?" என்று கேட்டது.

உடனே தொல்காப்பியர் என்ன; என்னை மிரட்டுகிறாயா? நீ ஆயுதமேந்தி ஆய்த எழுத்தாக வந்தால்; நான் அஞ்சி நடுங்கி, உன்னை முதல் எழுத்துகள் வரிசையில் நிற்கவைத்து விடுவேன் என்ற நினைப்பா?"

அவரது சீற்றம் உணர்ந்த ஆய்த எழுத்து; "அய்யனே! என்னைத் தங்கள் விருப்பம்போல் அமர வைக்கலாம். முதல் எழுத்து வரிசையில் எனக்கு இடமளிக்காவிடினும், தேவைப்படும் முக்கியமான சமயங்களில் நான் உதவிக்கு வருவேன்!" என்று அடக்கமாகக் கூறியது. தொல்காப்பியர் கேலியாகச் சிரித்துக் கொண்டே, எழுத்ததிகாரத்தின் முதல் நூற்பாவை எழுதி முடித்துவிட்டு; 'நீ எனக்கு உதவிட வருகிறேன் என்கிறாய்; நல்ல வேடிக்கை!" என்று புன்னகை புரிந்தவாறு கூறினார்.

"ஆமாம்! தாங்கள் எழுதிய முதல் நூற்பாவிலேயே எனக்கு இடம் கொடுத்து விட்டீர்களே! என் திறமையைப் பார்த்தீர்களா?" என்று ஆய்த எழுத்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. தொல்காப்பியர், அவர் எழுதியதைத் திரும்பப் படித்துப் பார்த்தார்.

"எழுத்தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே" (எழுத்ததிகாரம் - நூல் மரபு - 1)

"முப்பஃ தென்ப" என்னும் தொடரில், ஆய்த எழுத்து வந்து அமர்ந்து கொண்டதை அவரும் வியப்புடன் நோக்கி, நிறைவான மகிழ்ச்சி கொண்டார்.

முப்பது எழுத்துகள் தமிழின் முதல் எழுத்துகள். குற்றியல் இகரம், குற்றியல் உகரம்,  ஆய்த எழுத்து என்னும் மூன்றும் முதல் எழுத்தைச் சார்ந்து வரும் எழுத்துகள் ஆகும். தொல்காப்பிய இலக்கண நூலை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கற்பனைத் திறத்துடன் தொல்காப்பிய பூங்கா வடிவில் அமைத்துள்ளார் கலைஞர்

--------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி