குலசேகர ஆழ்வார் - திருவேங்கட மலை
குலசேகர ஆழ்வார் - திருவேங்கட மலை
பாடல்
ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்
ஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே
குலசேகர ஆழ்வார் குறிப்பு தருக.
குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்.
இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர்
இவர் பிறந்த ஊர் கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம்.
இவர் ஸ்ரீராமபக்தர்.
வைணவ சமயத்தைச் சார்ந்தவர்
இவர் மாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தவர்
இவர் திருமாலின் மார்பில்இருக்கும் மணியின் (கௌஸ்துப) அம்சமாகத் தோன்றியவர்
பெருமாள் திருமொழி என்னும் நூலை இயற்றியுள்ளார்.
குலசேகர ஆழ்வார் திருவேங்கட மலையில் எவ்வாறு பிறக்க வேண்டும் என்று ஆசைபடுகிறார்?
உடம்பை வளர்க்கும் மனித உடம்பெடுத்து பிறத்தலை நான் விரும்பவில்லை.
திருவேங்கட மலையில் குருகாய் (நாரயாய்) பிறத்தல் வேண்டும் வேண்டும் என்று குலசேகர ஆழ்வார் திருமாலிடம் வேண்டுகிறார்.
-----------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக