வேலைக்காரி நாடகம்

வேலைக்காரி நாடகம் 

வேலைக்காரி நாடகத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் 

1.  வேதாச்சல முதலியார்  - வட்டியூர் ஜமீன்தார்

2. சரசா - வேதாச்சல முதலியாரின் மகள்

3. மூர்த்தி - வேதாச்சல முதலியாரின் மகன்

4. அமிர்தம் - வேலைக்காரி

5. சொக்கன் - வேலைக்காரன்

6. முருகேசன் - அமிர்தத்தின் தந்தை

7. சுந்தரம்பிள்ளை   - ஆனந்தனின் தந்தை

8. ஆனந்தன் - சுந்தரம்பிள்ளையின் மகன்,

கதையின் முதன்மைப் பாத்திரம்

9. மணி  -ஆனந்தனின் நண்பன்

10. முத்தாயி  - அமிர்தத்தின் தாய்

11. பாக்கியம்  - 55 வயது மாப்பிள்ளையின் தங்கை  


வேதாச்சலம் முதலியார் பண்புகள்

வேதாச்சலம் முதலியார்  பணக்காரர்வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கொடுத்த கடனைத் திருப்பித் தரவில்லை என்றால் அவர்களை கொடுமைப்படுத்துபவர்அவருக்கு சரசா என்ற மகளும், மூர்த்தி என்ற மகனும் உள்ளனர்

 சுந்தரம் பிள்ளையின் இறப்பு

சுந்தரம் பிள்ளை வேதாச்சலத்திடம் கடன் வாங்கியவர்.  வேதாச்சலம் பிள்ளை சுந்தரர் வீட்டிற்கு வேலைக்காரனுடன் வந்து  கொடுத்த கடனைத் திருப்பி கேட்கிறார். கொடுக்காவிட்டால் ஜெயிலில் போட்டு விடுவதாக மிரட்டுகிறார். சுந்தரம் பிள்ளை மானத்திற்கு அஞ்சி உள்ளே சென்று தூக்கு போட்டுக் கொண்டு இறந்து விடுகிறார்.

 ஆனந்தன் வருகை

ஆனந்தன் சுந்தரம் பிள்ளையின் மகன்.  இவன் வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். வெளியூரிலிருந்து வரும் வழியில் தன் நண்பன் மணியைச் சந்திக்கிறான்தான் 200 ரூபாய் சம்பாதித்திருப்பதாகவும் தன் தந்தையைச் சந்திக்க வந்திருப்பதாகவும் கூறுகிறான்தன் நண்பனோடு வீட்டிற்கு வந்தபோது  தன் தந்தை இறந்து கிடப்பதைப் பார்க்கிறான்தன் தந்தையின் மரணத்திற்கு வேதாச்சலம் தான் காரணம் என்பதைக் கடிதம் மூலம் தெரிந்து கொள்கிறான்.

ஆனந்தன் பழிவாங்க எண்ணுதல்.

ஆனந்தன் கத்தியை தீட்டிக் கொண்டிருக்கிறான்அப்போது மணி தடுத்துக் கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு என்று அறிவுரை கூறுகிறான் ஆனால் தன் தந்தையின் மரணத்திற்குக் காரணமான வேதாச்சலத்தின் தலையை வெட்ட வேண்டும் என்று ஆவேசத்துடன் ஆனந்தன் கூறுகிறான். அவ்வாறு வெட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும் உன்னுடைய தந்தையைத் தற்கொலைக்குத் தள்ளிய மாதிரியே கொஞ்சம் கொஞ்சமாக வேதாச்சலத்தைப் பழிவாங்கலாம் என்று மணி அறிவுரை கூறுகிறான்இறுதியில் பழிவாங்கும் எண்ணத்தை விட்டு விட்டுக் காளியை வணங்கி விட்டு மணியுடன் திரும்புகிறான். 

பணக்காரர்களின் ஆதிக்கம்

வேதாச்சலம் தொடர்ந்து  ஏழைகளை ஏமாற்றிப்  பணம் பறித்துக் கொண்டிருக்கிறார்.   அவர் மகள் சரசாவும், தந்தையைப் போன்று, பணத்திமிர் பிடித்தவள்வேலைக்காரி அமிர்தத்தை மதிக்காமல் நடத்துகிறாள்.  

பழைய ஜமீன்தார்  தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாததால்  ஜமீனை வேதாச்சலத்துக்கு எழுதி வைத்து விட்டு சென்று விடுகிறார்அதற்குப் பரிகாரமாக  காளி கோயிலுக்கு அபிஷேகம் செய்கிறார் வேதாச்சலம்.

 ஆனந்தன் நிலை 

  ஆனந்தனும் கடன்காரன் ஆகிவிடுகிறான்.  கடன் கொடுத்தவன் உடனே கடனைத் தருமாறு கேட்கிறான்.  தற்போது தர முடியாது எனில் வேலையில் இருந்து பெறக்கூடிய சம்பளத்தைத் தனது பேருக்கு எழுதி தர வேண்டும் என்று கேட்கிறான்ஆனால் அன்று காலை தனக்கு வேலை போய் விட்டதாக ஆனந்தன் கூறுகிறான்நீ உன் தந்தையைப் போலவே தூக்கு போட்டு இறக்க வேண்டியது தானே என்று கடன் கொடுத்தவர் ஆனந்தனைத் திட்டுகிறார்

ஆனந்தன் தன் மான உணர்விற்கு வருந்தித் தூக்கு போடுவதற்கு முயற்சி செய்கிறான்ஆனால் அவனுடைய மனசாட்சி அக்கிரமக்காரர்கள் எல்லாம் உயிரோடு இருக்கும்போது நல்லவனாகிய நீ ஏன் இறக்க வேண்டும் என்று கேட்கிறது. ஆதலால் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான்

ஆனந்தன் காளி தேவியைப் பழித்தல்

காளியின் தீவிர பக்தன் ஆனந்தன் . அவன் காளி கோவிலுக்கு சென்று தன் நிலைமையை எடுத்துச் சொல்லிப் புலம்புகிறான். புலம்பல் கோபமாக மாறிவிடுகிறது. காளியிடம் கோபப்படுகிறான். இதனைப் பார்த்த ஊர் மக்கள் அவனைத்  துரத்துகின்றனர்அவன் ஓடுகிறான். மணி அவனைக் காப்பாற்றுகிறான். மறைவிடத்தில் இருவரும் நிற்கின்றனர்.  

மூட்டையை இருவரும் பார்த்தல் 

ஒரு மூட்டை கண்ணில் படுகிறதுமணி அது ஒரு புதையலாக இருக்கலாம் என்று கூறுகிறான் அந்த மூட்டையை அவிழ்த்து பார்க்கும் போது  அதில் ஒரு பிணம் இருப்பதைப் பார்த்தார்கள். ஒரு டைரியில்,  அவன் பெயர் பரமானந்தன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மணியின் திட்டம்

மணி உடனே  திட்டம் தீட்டுகிறான். இனி நீ இறந்து போன பரமானந்தன் பெயரில் மேவார் விலாசத்திற்கு போக வேண்டும் நான் உனது செகரட்டரி ஆக அந்த வீட்டுக்கு வருகிறேன் அந்த வீட்டில் ஒரு வயதான தாயார் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறுகிறான்நம்முடைய அதிர்ஷ்டம் அந்த அம்மாவுக்கு கண் குருடு ஆதலால் அவளுடைய மகனாகப் பரமானந்தனாக நீ அங்கே நடிக்க வேண்டும் என்று கூறுகிறான்

பரமானந்தனின் கொலைக்குக் காரணம் என்ன என்று னந்தன் மணியிடம் கேட்கிறார்அவனிடமிருந்து வைரங்கள் தான் காரணம். அதைப் பற்றி உனக்கு என்ன கவலைஅந்த அம்மாவை பொறுத்தவரை  காணாமல் போன அவருடைய மகன் நீ அவ்வளவுதான் என்று கூற இருவரும் மேவார் விலாசத்திற்கு போகிறார்கள்.

பரமானந்தனின் அம்மா  ஆனந்தனைப் பரமானந்தன் என்று நம்புகிறார். இப்பொழுதாவது அவன் வந்ததற்குச் சந்தோஷம் என்று கூறி  அதற்காகக்  காளி கோவிலில்  அபிஷேகம் செய்யப் போவதாகக் கூறுகிறார்.   மணி மறுத்து  அதற்குப் பதில் ஒரு டீ பார்ட்டி வைத்தால்  பெரிய மனிதர்கள் வந்து போவார்கள்பரமானந்தன் வந்துவிட்டது   தெரியும் என்று கூறுகிறான். தேனீர் விருந்துக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டதுவேதாச்சலம் அவர் மகள் சரசா மூர்த்தி எல்லோரும் தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறார்கள்அந்த விருந்தில்  ஆனந்தனுக்கும் சரசாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறதுஇடையில் தான் பிறர் பணத்தில் வாழ்வது எண்ணி   ஆனந்தன் வேதனைப்படுகிறான்.  

ஆனந்தன் புலம்பல் 

என் தந்தை ஏழைநான் அவர் இறக்கக் காரணமாக இருந்த வேதாசலம் பிள்ளையின் மருமகன்இது என்ன வினோதம்நான் அவரை அப்பொழுதே கொன்றிருக்கலாம் என்று ஆனந்தன் வருந்துகிறான்.  

மணியின் அறிவுரை

மணி நீ சரசாவை எப்பொழுதும் கொடுமைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் தன் மகள் கலங்குவதைப் பார்த்து அவன் வருத்தப்பட வேண்டும்அவளை ஒரு தடவை அடித்தால் பணம் 5000 , 6000 என்று கொட்ட வேண்டும் 

ஆனந்தன் அய்யோ அவள் பெண்ணாயிற்றே என்று இரக்கம் கொள்கிறான். அதற்கு மணி. அவள் உன் தந்தை இறக்கக் காரணமாக இருந்த அரக்கனின் மகள். வள் மீது கருணை காட்டாதே என்று கூறுகிறான். மணியின் திட்டப்படி  சரசாவை கொடுமைப்படுத்தி  நிறைய பணத்தை வேதாச்சலத்திடம்  இருந்து கறந்து  அதைக்  குடித்தும், ஆனந்தனும் மணியம்  பலவாறாகச் செலவு செய்கிறார்கள். ஊர் மக்கள்  வேதாச்சலத்தின் மருமகன் இப்படி கூத்தடிக்கிறானே என்று பேசுகின்றனர்

மூர்த்தியின் காதல்

மூர்த்தி  வேலைக்காரி   அமிர்தத்திடம்  தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அதற்கு அமிர்தம்  தான் ஏழை என்றும்மூர்த்தி மிகப் பணக்காரன் என்றும், மூர்த்தியின் தந்தை  இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் என்றும் அஞ்சுகிறாள். என்றாலும்  தனக்கு  மூர்த்தியிடம்  அன்பு இருப்பதையும்  வெளிப்படுத்துகிறாள்.  அதற்கு மூர்த்தி  பெற்றோர்கள்  ஒத்துக் கொண்டால் மாளிகையில் வாழலாம், இல்லையென்றால் மண் குடிசையில் வாழலாம் என்று கூறுகிறான். சரசாவைக் கோபப்படுத்துவதற்கென்றே அமிர்த்தத்திடம் அன்பாகப் பேசுகிறான், பரமானந்தன். அதைக் கண்ட சரசா  அமிர்தத்திடம் கோபப்படுகிறாள். மூர்த்தி பரமானந்தத்திடம் நீ அமிர்தத்திடம் ஏன் தரக்குறைவாக நடந்து கொள்கிறாய் என்று கோபப்படுகிறான்அதற்குப் பரமானந்தம் வேலைக்காரிகள் மூன்று விதம்அதில் அமிர்தம் மூன்றாவது ரகம் என்று கூறுகிறார்இருவரும் கட்டி புரண்டு சண்டையிடுகின்றனர்இறுதியில் பரமானந்தம் தோற்றுப் போகிறான்அமிர்தமும் மூர்த்தியும் காதலிப்பதைப் பரமானந்தன் தெரிந்து கொள்கிறான். இதைத் தன் மாமனாரிடம் கூறிப் பணம் சம்பாதிக்கப் போவதாகக் கூறுகிறான்.

வேதாச்சலம்  ஆனந்தனைக் கண்டித்தல்

தன்னுடைய பணத்தை ஆனந்தன் பாழாக்குவதாக வேதாச்சலம் ஆனந்தனைக் கண்டிக்கிறார்.  ஊர்மக்கள் ஆனந்தனைத் தவறாகப் பேசுவது தனக்கு அவமானமாக இருப்பதாகக் கூறுகிறார்அப்போது  ஆனந்தன்  மூர்த்தி வேலைக்காரியைக் காதலிப்பது தங்களுக்கு அவமானமாக இல்லையா என்று கேட்கிறான்.   மூர்த்தி  மிகவும் நல்லவன் அவன் மீது பழி போடாதே என்று வேதாச்சலம் கூறுகிறார்தான் ஒரு நாள் நேரடியாகவே அவர்கள் பழகுவதை காட்டுவதாக ஆனந்தன் கூறுகிறான் 

வேதாச்சலம் மூர்த்தியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல்

அமிர்தமும் மூர்த்தியும் பேசிக் கொண்டிருப்பதை ஒருநாள் வேதாச்சலம் பார்க்கிறார் மூர்த்தியைக் கண்டிக்கிறார்ஏதாவது பணத்தைக் கொடுத்து அமிர்தத்தை அனுப்பிவிடலாம். தனக்கு ஜாதி, அந்தஸ்து எல்லாம் மிகப்பெரியது என்றும் அமிர்தத்தைத் திருமணம் செய்ய ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றும் கூறுகிறார்மூர்த்தி தனக்கு அமிர்தம் தான் முக்கியம் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறுகிறான்வேதாச்சலம் வேலைக்காரன் முருகேசனிடம்  உன் மகள் அமிர்தம் என் மகனை மயக்கி விட்டாள் என்று சத்தம் போடுகிறார்நான் என் மகளை வெட்டி கொன்று விட்டு வருகிறேன் என்று கூறிக்கொண்டு முருகேசன் வெளியேறுகிறான்.

அமிர்தத்தின் வீடு எரிந்து போதல் 

மூர்த்தி  அமிர்தத்திடம்  தான்  அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு வந்துவிட்டதாகவும்,   தான் அமிர்தத்தைத்  திருமணம் செய்து கொள்வதற்காகச் சென்னை சென்று  தன் நண்பனின்  உதவியைப் பெற்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்னை செல்கிறான். முருகேசன்  தன்மகள் தன்னை ஏமாற்றி  விட்டதாக  விரத்தியுடன்  பேசிக் கொண்டிருந்து  தான் பற்ற வைத்த சுருட்டை குடிசையில் எரிகிறார். குடிசை பற்றி எரிகிறது.  சென்னையிலிருந்து தன் நண்பன் உதவியை பெற்று  வந்த மூர்த்தி  அமிர்தத்தின் வீட்டைக் காணாமல் திகைக்கிறான்.   ஊரார்  வீடு தீப்பற்றி எரிந்ததில் அனைவரும் இறந்து விட்டதாகக் கூறுகின்றனர்.   மூர்த்தி மனம்   வெறுத்து ஒரு ஆசிரமத்தில் போய்  சேர்கிறான்.

அந்த ஆசிரமத்தின் சாமியார்கள்  ஹரிகரதாஸ், சுந்தரகோஷ்  சொத்து மொத்தத்தையும் ஆசிரமத்தின் பெயரில் எழுதி வைக்கச் சொல்லுகிறார்மூர்த்தி ஒத்துக் கொள்கிறான்

மூர்த்தி கொலை செய்தல்

அன்று இரவு ஆசிரமத்தில் தற்செயலாக மூர்த்தி உலா வரும்போது சுந்தர கோஷூம் ஹரிஹரதாசும் உண்மையான சாமியார்கள் அல்ல என்பதை மூர்த்தி கண்டு கொள்கிறான். அதனால் கோபமடைந்து ஹரிஹர தாசைக் கொலை செய்கிறான்

அமிர்தம் தப்பிச்செல்லுதல் 

எரிகிற வீட்டிலிருந்து தப்பிச்சென்ற அமிர்தம்  ஒரு லாரியில் ஏறித் தப்பித்து விடுகிறாள்பின்பு  பழம் விற்கும் பெண்ணாக மாறுகிறாள்

வேதாச்சலம் மகளையும் மருமகனையும் வீட்டிலிருந்து வெளியேற்றல்

வேதாச்சலம் ஆனந்தனின்  கொடுமை தாங்கமுடியாமல் சரசாவையும் ஆனந்தனையும் வீட்டை விட்டு வெளியே போகச் செல்கிறான். ஒரு சிறிய வீடாகப் பார்த்து  இங்குதான் நீ வாழ வேண்டும் என்று சரசாவிடம் பரமானந்தன்  கூறுகிறான். 

அமிர்தம் சுகிர்தமாக மாறுதல்

அமிர்தம் பழம் விற்றுக் கொண்டு வருகிறாள்வழியில் வந்த பாலு முதலியார் அவளைத் தன் மகள் என்று அழைத்துக் கொண்டு போய் அவளுக்குப் பைத்தியம்  சரி செய்ய வேண்டும் என்று மருத்துவரிடம் கூறுகிறார்மருத்துவர் அவர்தான் பைத்தியம் என்றும் அவர் பைத்தியத்தைச் சரி செய்ய நீ அவர் மகளாக நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்கேற்றவாறு அவள் நடிக்கிறாள். 

நீதிமன்றத்தில் வழக்கு

பரமானந்தம் வடநாட்டு வக்கீல் ஆகவும்  மணி அவரது வேலையாளாகவும் மாறுகிறான். வழக்கு நடைபெறுகிறது வழக்கில் மூர்த்தி குற்றவாளி அல்ல என்று வடநாட்டு வக்கீல் வாதாடி வெற்றியடைகிறார். வடநாட்டு வக்கீலின் வீட்டிற்கு சென்று மூர்த்தி நன்றி கூறுகிறான்அந்த நன்றிக்குப் பதிலாகப் பாலு முதலியாரின் மகள் சுகிர்தத்தைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வட நாட்டு வக்கீலாக நடிக்கும் பரமானந்தம் கூறுகிறான். சுகிர்தத்துக்கும் மூர்த்திக்கும் திருமணம் நடைபெறுகிறது. 

பரமானந்தம் உண்மையைக் கூறுதல்

வேதாச்சலம் வீட்டில் அனைவரும் கூடி இருக்கின்றனர். எனக்கு ஊரில் குடிகாரன் மாமனாரைக் கொடுமை செய்பவன் என்று என்னவெல்லாம் பெயர் ஆனால் இதெல்லாம் எதற்காகச் செய்தேன். வேதாச்சலம் பிள்ளை என் தந்தையைக் கொடுமை செய்து அவர் மரணத்துக்குக் காரணமாக இருந்தார் அவரைப் பழிவாங்க அவ்வாறெல்லாம் செய்ததாக கூறுகிறான். சுகிர்தம்தான் அமிர்தம் என்று மூர்த்தி தெளிந்து கொள்கிறான். நாடகமாடி வேலைக்காரியை அவளது மருமகளாக ஆக்கியதும் அவளது பணக்கார மகளைக் கஷ்டப்படுத்தியதும் அவரை பழி வாங்குவதற்காகத் தான் என்று கூறி உண்மையை விளக்குகிறான். வேதாச்சலம் தான் திருந்தியதாகக் கூறி மன்னிப்பு கேட்கிறார். யாரும்  வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்றும் தானும் பாலு முதலியாரும் வீட்டை விட்டு வெளியேறி, ஊருக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று உரைப்பதாகக் கூறிவிட்டு வெளியேறுகின்றனர். மூர்த்தியின் அமிர்தமும் அதே வீட்டில்  மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

உழைப்பின் உயர்வு


பணக்காரர்கள் பணம்தான் உயர்வைத் தரும் என்று நினைக்கின்றனர். ஆனால் உழைப்பே செல்வம் என்பதனை,


ஏன் உழைப்பே செல்வம் உன் முகமே
இன்ப ஒளி”  என்ற மூர்த்தியின் கூற்று வழி அறிஞர் அண்ணா விளக்குகின்றார்.

வேலைக்காரி எந்த வகையிலும் இழிந்தவள் அல்ல என்பதனை,

பூ விற்றால் பூக்காரி. பிச்சை எடுத்தால் பிச்சைக்காரி. சிங்காரித்துக் கொண்டால்

 சிங்காரி நீ வேலை செய்கிறாய் அதனால் வேலைக்காரிஎன்ற பரமானந்தன்

 கூற்றுவழி எடுத்துரைக்கின்றார்.

முடிவுரை

    இவ்வாறு அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு  ஜாதி வேறுபாடுகளையும் போலி சாமியார்கள், வழிப்பாட்டு எதிர்ப்பு போன்ற விழிப்புணர்வு கருத்தை இந்நாடகம் வாயிலாக அண்ணா மக்களுக்கு உரைத்துள்ளார். மேலும் அவர் சமூகத்தில் இழிநிலையாக கருதும் வீட்டு வேலைக்காரர்களுக்குச் சமூக மரியாதையை உருவாக்கும் நோக்கிலும் இந்நாடகம் அமைந்துள்ளது.  

..............................................................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி