சொல் வேறுபாடு கண்டறிதல் ( ர -ற) (ல - ள -ழ) (ண - ன)

 

அலகு V மொழிப்பயிற்சி

சொல் வேறுபாடு / பிழை தவிர்த்தல்


ற ர   வேறுபாடு

1. அறம் -  தருமம் 

    அரம் - அறுக்கும் கருவி

2. அரவு - பாம்பு

    அறவு - நீங்கல்

3. அறன் - அறம்

    அரன் - சிவன்

4. அறி -  தெரிந்துகொள்

    அரி - திருமால்

5. அறுகு - அறுகம்புல்

    அருகு - அருகில்

6. அறை - வீட்டின் அறை

    அரை - பாதி

7. அக்கரை - அந்தக் கரை

    அக்கறை -  ஆர்வம்

 8. இரத்தல் - யாசித்தல் 

    இறத்தல் - சாதல்

9. இறை - தலைவன்

    இரை - உணவு

10. உரவு -  வலிமை

    உறவு - சுற்றத்தார்

 

                ண ன வேறுபாடு

1. அண்ணம் - மேல்வாய்

    அன்னம் - சோறு

2. அண்ணல் - பெருமை 

    அன்னல் - புகை

3. அணங்கு - தெய்வம்

    அனங்கு - மன்மதன்

4. அணி - வரிசை

    அனி - நெற்பொரி

5. ஆணி - இரும்பாணி

    ஆனி - மாதம்

6. ஆணை -  கட்டளை

    ஆனை - யானை

7. ஊன் - உணவு

    ஊன் - இறைச்சி

8. பணி - வேலை

    பனி - குளிர்காற்று

9. மணம் - வாசணை

    மனம் - உள்ளம்

10. கண்ணி    -  மாலை

    கன்னி      - குமரி

                ,, ழ வேறுபாடு

     அலகு -  பறவை மூக்கு

     அழகு -  பொலிவு

    அளகு - கோழி, மயில் இவற்றின் பெண்

    அலி - ஆண் பேடி

    அழி - சிதைத்தல்

    அளி - கொடு, வண்டு

    ஒலி -  ஓசை, சத்தம்

    ளி -  வெளிச்சம்

    ஒழி - அழித்தல், மறைத்தல்

    கலகம் - அமளி, குழப்பம்

     கழகம் -  இயக்கம், அவை

     களகம் - நெற்கதிர்

    குலம் - இனம்
    குளம் - நீர்நிலை
    பல்லி - விலங்கு
    பள்ளி - கல்வி கற்கும் இடம்
   வலி -  துன்பம்

    வளி -  காற்று

    வழி - பாதை

    வால் - உறுப்பு

     வாள் -  ஆயுதம்

    வாழ் - வாழ்வாயாக

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி