II SEM - இரண்டு மதிப்பெண் வினா விடைகள்


 

1. கலிங்கத்துப்பரணியின் ஆசிரியர் யார்?

· செயங்கொண்டார்

2. கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

· முதலாம் குலோத்துங்கச் சோழன்

3. செயங்கொண்டார் எழுதிய பிற நூல்கள் யாவை ?

· இசை ஆயிரம்

· உலா மடல்

4.  பரணி நூல்களின் பெயர்கள் நான்கினை எழுதுக ?

· தக்கயாகப் பரணி

· பாசவதைப் பரணி

· மோகவதைப் பரணி

· சீனத்துப் பரணி.

· போர்ப் பரணி

5. திருக்குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் யார்?

· திரிகூடராசப்பக் கவிராயர்

6. குறவஞ்சி நூல்கள் சிலவற்றை எழுதுக?

· திருக்குற்றாலக் குறவஞ்சி

· தமிழரசி குறவஞ்சி

· திருவாரூர்க் குறவஞ்சி

· பெத்தலகேம் குறவஞ்சி

7. வானரங்கள் கனிகொடுத்து எதனோடு கொஞ்சும்?

· மந்தி

8. கானவர்கள் விழியெறிந்து யாரை அழைப்பர்?

· வானவரை

9. குற்றால நாதர் வீற்றிருக்கும் மலை எது ?

· திரிகூடமலை (குறும்பலா )

10. முதலில் தோன்றிய பள்ளு நூல் எது?

· முக்கூடற்பள்ளு

11.  பள்ளு இலக்கியத்தின் வேறு பெயர்கள் ?

· உழத்திப் பாட்டு

· பள்ளு ஏசல்

·  பள்ளு நாடகம்

12.  தவளை எதற்காகச் சத்தமிட்டுக்கொண்டிருக்கிறது.

· மழை வருவதை அறிவிக்க

13. எங்கு மின்னல் மின்னுகிறது.

· மலையாளம் (கேரளம்)

· ஈழம் ( இலங்கை)

14. அந்தாதி என்றால் என்ன?

அந்தம் +ஆதி = அந்தாதி

அந்தம்  - முடிவு

ஆதி  - தொடக்கம்

ஒரு பாடலின் முடிவு அடுத்த பாடலின் தொடக்கமாக அமைத்துப் பாடும் முறையே அந்தாதி ஆகும்.

15. அபிராமி அந்தாதியின் ஆசிரியர் யார்?

· அபிராமி பட்டர்

16. அபிராமி அந்தாதி பாடப்பட்ட  ஊர் எது?

· திருக்கடவூர்

17.  கலம்பகம் என்றால் என்ன?

கலம் + பகம் = கலம்பகம்

கலம் பன்னிரண்டு

பகம் அதில் பாதி ஆறு

  பதினெட்டு உறுப்புக்களைக் கொண்டு பாடுவது கலம்பகம் எனப்படும்.

18. கலம்பகத்தில் குறிப்பிடப்படும் உறுப்புக்கள் எத்தனை?

· பதினெட்டு

19. கலம்பக உறுப்புக்கள் எவையேனும் நான்கினை குறிப்படுக?

1. அம்மானை, 2. ஊசல், 3. காலம், 4.வண்டு, 5. மேகம், 6. கைக்கிளை, 7.பாண், 8. தழை, 9. இரங்கல், 10.  குறம், 11. தூது, 12. களி, 13. மறம், 14. புறம், 15. புயம், 16. சம்பிரதம், 17. கார், 18. தவம்

20.  செல்லரித்த ஓலை செல்லுமோ விளக்குக.

· செல்லரித்த ஓலை எப்படி பயனற்றதோ அதே போன்று உன் மன்னனும் மதிப்பில்லாதவன் என்பதை இது சுட்டுகிறது.

21. முதல் கலம்பக நூல் எது?

· நந்திக்கலம்பகம்

22. கலம்பக நூல்கள் நான்கினைக் குறிப்பிடுக.

· நந்திக்கலம்பகம்

· காசிக்கலம்பகம்

· மதுரைக் கலம்பகம்

· தில்லைக் கலம்பகம்

· திருவரங்க கலம்பகம்

23. வேடர்குல மக்கள் தினைகளை அளக்க எவற்றைப் பயன்படுத்தினர்?

· அரசர்கள் சூடியிருந்த கிரீடங்களையே தினைகளை அளக்கப் பயன்படுத்தினர்.

24. வேடர்குல மக்கள் எவற்றை தங்கள் வீடுகளுக்கு வேலியாக அமைத்தனர்?

· தோல்வியடைந்த எதிரி நாட்டு வீரர்களின் வில், அம்பு, வாள் போன்றவற்றையே வேலியாக அமைத்தனர்.

25. தூது எத்தனை வகைப்படும்? அவை யாவை?

· இரண்டு வகைப்படும்

அவை 1.  அகத்தூது

2. புறத்தூது

26. தூது அனுப்புவதற்கு உரிய பொருட்கள் யாவை?

· அன்னம்

· மயில்

· கிளி

· குயில்

· முகில்,

· வண்டு

· தென்றல்

· நெஞ்சம்

· நாகனவாய்ப் பறவை

27. முதல் தூது நூல் எது?

· நெஞ்சுவிடு தூது உமாபதி சிவாச்சாரியார்

28. தூதுக்குரிய பாவகை எது?

· கலிவெண்பா

29. ஔவையார் இயற்றிய நூல்கள் யாவை?

· ஆத்திச்சூடி

· கொன்றைவேந்தன்

· நல்வழி

· மூதுரை

30. வான்குருவியின் கூடு என்ற பாடலில் இடம்பெரும் உயிரினங்கள் யாவை?

· தூக்கனாங்குருவி

· குளவி

· கரையான்

· தேனீ

· சிலந்தி

31. காளமேகப்புலவரின் இயற்பெயர் யாது?

· வரதன்

32. காளமேகப் புலவரின் படைப்புகளை எழுதுக.

· திருவானைக்கா உலா

· சரசுவதி மாலை

· சித்திர மடல்

· பரப்பிரம்ம விளக்கம்

33. காளமேகப் புலவருக்கு வழங்கும் சிறப்புப் பெயர்கள் யாவை?

· ஆசு கவி

· வசைபாட காளமேகம்

· வசைக்கவி

34. சிலேடை  என்றால் என்ன?

· இருபொருள்படும்படி பாடுவது

· இதனை இரட்டுற மொழிதல் எனவும் அழைப்பர்

35. அந்தகக் கவி என அழைக்கப்படுபவர் யார்?

· வீரராகவர்

36. யானைக்கு வழங்கும் வேறுபெயர்கள் யாவை?

· களபம்

· மாதங்கம்

· வேழம்

· கம்பமா

· கைம்மா

37. வேழம் என்பதன் பொருள் யாது?

· கரும்பு

· யானை

 

38. ‘நாரைவிடு தூதுநூலின் ஆசிரியர் யார்?

· சத்திமுத்தப் புலவர்

39. பாரதியாரின் முப்பெரும் நூல்கள் யாவை?

· கண்ணன் பாட்டு

· குயில் பாட்டு

· பாஞ்சாலி சபதம்

40. எல்லாம் உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தவர் யார்?

· கண்ணபிரான்

41. தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடியவர் யார்?

· பாரதியார்

42. பாரதியாரின் வேறுபெயர்கள் யாவை?

· மகாகவி

· தேசிய கவி

· முண்டாசுக்கவி

· ஷெல்லிதாசன்

43. புரட்சிக்கவி என அழைக்கப்படுபவர் யார்?

· பாரதிதாசன்

44. பாரதிதாசனின் நூல்கள் நான்கினை எழுதுக.

· பாண்டியன் பரிசு

· அழகின் சிரிப்பு

· குடும்ப  விளக்கு

· இருண்ட வீடு

· எதிர்பாரத முத்தம்

45. பாரதிதாசனின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் எது?

· பிசிராந்தையார் (1969)

46. காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

· நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

 

 

47. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது எனப் பாடியவர் யார்?

· நாமக்கல் கவிஞர்

48. நாமக்கல் கவிஞரின் நூல்களை எழுதுக.

· அவனும் அவளும்

· மலைக்கள்ளன்

· சங்கொலி

· மாமன் மகள்

· என் கதை

49. மீன்கள் கவிதையின் ஆசிரியர் யார்?

· தமிழ் ஒளி

50. வான்கடல் தோன்றிடும் முத்துக்களோ! எனத் தமிழ் ஒளி எதனை குறிப்பிடுகிறார்?

· விண்மீன்கள்

51. தமிழ்ஓளியின் நூல்கள் யாவை?

· மே தின ரோஜா

· வீராயி

·  மாதவி காவியம்

· நிலைபெற்ற சிலை

· விதியோ விணையோ

52.எட்டாவது சீர் என்ற புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?

· ஈரோடு தமிழன்பன்

53. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் என்ன?

· . ஜெகதீசன்

54. ஈரோடு தமிழன்பனின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் எது?

· வணக்கம் வள்ளுவ – 2004

55. ஈரோடு தமிழன்பனின் நூல்கள் நான்கினை குறிப்பிடுக.

· தீவுகள் கரையேறுகின்றன

· தோணிகள் வருகின்றன

· ஊமை வெயில்

· அந்த நந்தனை எரித்த நெருப்பின் எச்சம்

· வணக்கம் வள்ளுவ

56. புதுமைப்பித்தனின் இயற்பெயர் என்ன?

· சொ. விருத்தாசலம்

57. புதுமைப்பித்தனின் சிறப்புப் பெயர்கள் யாவை?

· சிறுகதை மன்னன்

· சிறுகதைச் சிற்பி

58. தமிழில் முதன் முதலாக ஞானபீட  விருது பெற்ற எழுத்தாளர் யார்?

      அகிலன்

59. வாய்ச்சொற்கள் என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

· ஜெயகாந்தன்

60. ஜெயகாந்தனின் நூல்கள்  நான்கினை எழுதுக.

· ஒருபிடி சோறு

· இனிப்பும் கரிப்பும்

· தேவன் வருவாரா

· மாலை மயக்கம்

61. அந்நியர்கள் சிறுகதையின் ஆசிரியர் யார்?

· ஆர். சூடாமணி

62. ஆர். சூடாமணியின் முதல் சிறுகதை எது?

· காவேரி

63. திருக்குறள் மாநாடு எங்கு நடைபெற்றது?

· சென்னை

64. திருக்குறள் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

· நடைபெற்ற இடம் சென்னை

· நாள் - 15.01.1949

· நடத்தியவர் - பெரியார்

· நோக்கம் - திருக்குறளின் மேன்மை மற்றும் சிறப்பை உலகறியச் செய்தல்.

65. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?

· நடைபெற்ற இடம் சென்னை (தீவுத் திடல்)

· நடைபெற்ற நாள்  – 03.01.1968

66. அண்ணாவிற்கு வழங்கும் சிறப்புப் பெயர்கள் யாவை?

· தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா

· தென்னாட்டு காந்தி

67. அறிஞர் அண்ணாவின் தாரக மந்திரம் எது?

· கடமை

· கண்ணியம்

· கட்டுப்பாடு

68.தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நால்வரைக் குறிப்பிடுக.

· இளம்பூரணர்

· சேனாவரையர்

· பேராசிரியர்

· நச்சினார்க்கினியர்

· கல்லாடர்

69.தொல்காப்பியத்தின் ஆசிரியர் யார்?

· தொல்காப்பியர்

70. கலைஞரின் தொல்காப்பியப் பூங்காகுறித்து விளக்குக.

· எழுத்து அதிகாரத்திற்கு உரை எழுதியுள்ளார்

· 142 தொல்காப்பிய நூற்பாக்களுக்கு எளிய இனிய உரை வழங்கியுள்ளார்.

· 100 தலைப்புகள்

· தொல்காப்பியத்தின் இலக்கிய, இலக்கண சுவை தோன்ற புதுமையாக அமைந்துள்ளது,

71. வேலைக்காரி நாடகத்தின் ஆசிரியர் யார்?

அறிஞர் அண்ணா

72. வேலைக்காரி நாடகத்தின் கதைத் தலைவி யார்?

· அமிர்தம்

73. நாடகத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை?

· நாடகத்திற்கு அடிப்படையாக அமைவது உரையாடலே (வசனம்) ஆகும்.

·  நடிப்பவரின் ஒப்பனையும் கதாபாத்திரங்களும் நாடகத்திற்கு முதன்மையானவை ஆகும்.

74.  ஓரங்க நாடகம் என்றால் என்ன?

· ஓரங்க நாடகம் என்பது ஒரு நிகழ்ச்சியை அல்லது உணர்வை ஒரு சில களங்களில் முழுமைப்படுத்திக் காட்டும் நாடக இலக்கியத்தின் ஒருவகை ஆகும்.

· ஒரு காட்சி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காட்சிகளை உள்ளடக்கியதாகவும் அமையலாம்.

75. உன்னையே நீ அறிவாய் என்று கூறியவர் யார்?

· சாக்ரடீஸ்

76. தமிழ் எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

· 12.10.2004

77. தமிழுக்குச் செம்மொழி தகுதி கோரிய முதல்  தமிழர் யார்?

· பரிதிமாற் கலைஞர் ()வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி

78. செம்மொழிக்கான இலக்கணமாகப் பரிதிமாற் கலைஞர் கூறுவன யாவை?

· திருந்திய பண்பு

· சீர்த்த நாகரிகம்

· பொருந்திய தூய்மொழியாம் என்கிறார்.

79. நாடகவியல் என்னும் தமிழ்நாடக நூலின் ஆசிரியர் யார்?

· பரிதிமாற்கலைஞர்

80. செம்மொழி தகுதி பெற்ற மொழிகள் நான்கினை குறிப்பிடுக.

· தமிழ்

· இலத்தின்

· கிரேக்கம்

· சீனம்

· எபிரேயம்

· சமஸ்கிருதம்

81. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எங்கு? எப்போது நடைபெற்றது?

· நடைபெற்ற நாள்  - 23.07.2010

· நடைபெற்ற இடம்  - கோவை

· நடந்த நாள்கள்  - ஜுன் 23 முதல் 27 வரை ( 5 நாட்கள்)

· நடத்தியவர்  - கலைஞர் மு. கருணாநிதி

82. எழுத்துப்பிழை நீக்கி எழுதுக.

1. வாணம் பார்த்த பூமி.

விடை வானம் பார்த்த பூமி

2. பில்லைகளே மலர்கலை எடுக்காதீர்.

விடை பிள்ளைகளே மலர்களை எடுக்காதீர்கள்

3. தமிள் இனிமையாணது.

விடை தமிழ் இனிமையானது

4. தோட்டத்தில் மேயுது வெல்லைப் பசு

விடை தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி