பண்டையத் தமிழர் அணிகலன்கள்
அணிகலன்கள்
பண்டைய தமிழரின் அணிகலன்கள் குறித்து
விளக்குக.
முன்னுரை
பழந்தமிழக
மக்கள் பல்வேறு அணிகளால் தங்களை அழகுபடுத்தியுள்ளனர். தமிழகத்துப் பெண்கள் அணிகலன்களுக்கு
மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். பெண்கள்
தம்முடல் முழுவதும் அணிகலன் அணிந்துள்ளனர். மகளிர் பல்வேறு அணிகலன்களால் தம்மை ஒப்பனை
செய்து கொண்டனர். அக்காலத்தில் வழக்கில் இருந்த அணிகலன்கள் குறித்தும் அவற்றை அணிந்த
மக்கள் குறித்தும் இங்கு உரைக்கப்படுகிறது.
பண்டைத் தமிழக மக்கள் அணிகலன்கள்
செய்ய பயன்படுத்திய உலோகங்கள்
- பொன்,
- முத்து,
- பவழம்,
- இதர மணி வகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பலவகையான அணிகலன்களைச் செய்துள்ளனர்.
- அணிகலன்களைச் செய்வோர் கம்மியர் என அழைக்கப் பெற்றனர்.
பண்டைத் தமிழகத்தில் பொன் கிடைக்கப் பெற்ற இடங்கள்
- யவனர் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொன்,
- மன்னர் பகைவரிடமிருந்து கவர்ந்து கொண்டு வந்த பொன்,
- நிலத்திலிருந்து எடுக்கப் பெற்ற பொன்
- என மூன்று நிலைகளில் பொன்னைப் பெற்றுள்ளனர்.
மகளிரின் அணிகலன்கள்
1. விரலணி
வாளை மீனைப்
போன்று வடிவமைக்கப்பட்ட மாணிக்க மோதிரத்தைப் பெண்கள் விரலில் அணிந்துள்ளனர்.
2. கழுத்தணி
- மோசை எனப்படும் மரகதக் கடைசெறி,
- வீரச்சங்கிலி,
- நேர்ச் சங்கிலி,
- அரி நெல்லிக்காய் மணிமாலை போன்றன.
3. காலணி
- பரியகம்,
- நூபுரம்,
- அரியகம்,
- பாடகம்,
- சதங்கை,
- கால் விரல்களில் மோதிரம்
- போன்றவற்றை மகளிர் கால்களில் அணிந்துள்ளனர்.
- அவர்கள் சிலம்புகளுக்குள் முத்தையும் மாணிக்கத்தையும் பரல்களாக இடுவதுண்டு.
4. இடையணிகலன்கள்
- பெண்கள் இடையில் அணிந்த பட்டிகை ஐவகை பட்டிருந்தது.
- அவையாவன, மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை,
- மேலும் இடையில் முத்து வடம், பொன்ஞாண், 32 வடத்தாலான முத்துமேகலை போன்றவற்றையும் அணிந்தனர்
5. காதணிகள்
- குதம்பை (இது முகப்பல் கட்டின இந்திர நீலத்திடையே வைரம் இழைத்துச் செய்யப்பட்டிருக்கும். பெண்கள் தம் காதுகளைத் தொங்க தொங்க வார்த்து அணிந்து கொள்ளும் காதணி)
- கடிப்பிணை (வளர்ந்த காதில் அணியும் காதணிக்கு என்றும் பெயர்)
6. கைவளைகள்
- செம்பொன் வளை,
- நவமணி வளை,
- சங்க வளை,
- பவழ வளை,
- மாணிக்கமும் வைரமும் பதிக்கப்பட்ட சூடகம் போன்றவற்றை அணிந்தனர்.
- கைவளைகளில் பலவகையான பூவேலைப்பாடுகள் செய்யப்பட்டன.
- சிலவகை வளைகள் முத்தால் இழைக்கப்பட்டன.
7. தலையணிகள்
- தலைக்கோலம் செய்து கொள்வதில் பண்டைய தமிழகப் பெண்கள் ஆர்வம் மிகுந்திருந்தனர்.
- சீதேவியார் வலம்புரிச் சங்கு, பூரப்பாளை, தென்பல்லி, வடபல்லி, என்ற பலவகையான தலைகோலம் பூண்டனர்.
- கருத்த நீண்ட கூந்தல் வளர்ப்பதை விரும்பினர்.
- கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி யென ஐந்து வகையாகத் தலைக்கோலம் செய்து கொண்டனர்.
- தலையில் பலவகையான மலர்களை சூட்டிக் கொள்வர்.
- இதற்கு 100 வகையான பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- மகர வாய், வகிர் போன்ற தலையணிகளையும் அணிவதுண்டு.
- மாணிக்க மணிகளுடன் மலர்களையும் வெண்நூலில் கோர்த்து அணிந்துள்ளனர்.
- மகளிர் தம் கூந்தலுக்கு அகிற் புகை ஊட்டுவர்.
- கூந்தலைக் கைவிரல்களால் கோதி உலர்த்துவர்.
- அதனை இரு தொகுதியாகப் வகிர்ந்து பின்னி விடுவர்.
- அக்காலத்தில் களிமண்ணை தேய்த்துத் தலை குளித்தனர்.
- கண்ணுக்கு மை தீ ட்டிக் கொள்வர்.
- நறுமணப் பாக்கு, வெற்றிலை போட்டுக் கொள்வர்.
8. பிற அணிகலன்கள்
- குறங்கு செறி – தொடையணி,
- மாணிக்கமும் முத்தும் இழைத்த தோள் வளையல்கள்
பண்டைத் தமிழக குழந்தைகள்
பயன்படுத்திய அணிகலன்கள்
- நெற்றிச்சுட்டி,
- பிறை,
- மூவடம் கொண்ட பொன்சங்கிலி,
- கழுத்தில் ஐம்படைத்தாலி,
- புலிப்பல் தாலி,
- மோதிரங்கள் (சுறா மீன் மற்றும் காளைமாடு உருவங்கள் பதிக்கப்பட்டன),
- மணிகள் உள்ளிடப்பட்ட சதங்கை,
- பொன் இரட்டைச் சரிகள் (காலணி),
- மணியும் பவளமும் கோத்த அரைஞாண்,
- சதங்கைகளின் பூட்டுவாய்கள் தேரையின் வாய் போல் அமைக்கப்பட்டன. இவற்றை குழந்தைகள் அணிந்திருந்தனர்.
பண்டைத் தமிழக ஆண்கள் பயன்படுத்திய
அணிகலன்கள்
- மதாணி,
- முத்துமாலை,
- வெள்ளிக் கம்பியில் கோத்த பொற்றாமரை மலர்கள்,
- கைவளைகள் ஆகிய அணிகளை ஆண்கள் அணிந்திருந்தனர்.
ஆண்களின் தலையணிகள்
- ஆடவர் தலைமுடியை நீளமாக வளர்த்திருந்தனர்.
- அதை சுருட்டிப் பின்புறம் முடிந்து கொள்வர்.
- நெற்றிக்கு மேல் சிறிய குடுமி போட்டிருப்பர்.
- தலையில் பூச்சூடி கொள்வதுண்டு.
- தலையில் சூடும் பூமாலைக்குக் கண்ணி என்று பெயர்.
- ஆண்கள் தலையில் முக்காடிட்டுக் கொள்வதும் உண்டு.
- பார்ப்பனச் சிறுவர் குடுமி வைத்திருப்பர்
பண்டைத் தமிழகத்தின் அணிகலன்களின்
ஏற்றுமதி
- தமிழ்நாட்டில் செய்யப்பட அணிகலன்கள் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
- கொடுமணம் என்ற ஊரில் செய்யப்பட்ட பொன்னணிகள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
முடிவுரை
பழந்தமிழர் பல வகையான உலோகங்களைப்
பயன்படுத்தி அழகிய வேலைபாடுகளை அணிகலன்கள் செய்வதில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தனர்
என்பதை அறிய முடிகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக