அயல் நாட்டுத் தொடர்புகள்
அயல் நாட்டுத் தொடர்புகள்
தொல் தமிழர் வரலாற்றின் தொன்மை
- தொல் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தனர்
- லெமூரியாக் கண்டமே அவர்களின் தாய் மண் ஆகும்
- 1869 ஆம் ஆண்டு சென்னையில் கல் கோடரி ( Madras stone axe) கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தமிழர்களின் தொன்மையைத் தேடும் முயற்சி தீவிரப்பட்டது.
- தமிழகத்தில் மட்டும் 17 ஆற்றங்கரை நாகரிகங்கள் இருந்துள்ளன
- இவையெல்லாம்தொல் தமிழர் வரலாற்றுக்குச் சான்றுகளாக அமைகின்றன.
நாடுகள் என்ற வரையறை தோன்றும் முன்னரும் பிறகும் புலம்பெயர்ந்துள்ளனர்- தமிழர்கள் அரசமைக்கவும் வாணிக மேற்கொள்ளவும் மதம் சார்ந்தும் புலம்பெயர்ந்துள்ளனர்.
- கடல் கடந்து வாணிகம் செய்துள்ளனர்
- வாணிகம் மேற்கொண்டோர் பதினெண் விஷயத்தார், திசை ஆயிரவர் என அழைக்கப்பட்டனர்
- கொரியாவில் தமிழ் நிலப் பெண் ஒருத்தி அரசியாக ஆண்டு இருக்கிறாள்.
- ஜப்பான், கனடா, உருகுவே, கலிபோர்னியா, மலேசியா போன்ற நாடுகளின் பூர்வக் குடிகள் தமிழராய் இருந்தனர்.
- ஆஸ்திரேலியா, மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும் தமிழ்ப் பூர்வக் குடிகள் வாழ்ந்துள்ளனர்
- சுமேரியம், பார்சி போன்ற மொழிகளில் தமிழ் சொற்கள் கலந்துள்ளனர்.
- சுமார் 8500 கிலோ மீட்டர் வரை தமிழும் தமிழரும் பரவி இருந்தனர்.
- சுமார் 191 நாடுகளில் தமிழ் பேசப்படும் இடங்களாக இருந்தன.
- பிற தொன்மை மொழிகளில் தமிழ் மொழியின் தாக்கம் காணப்படுகிறது
- கொரியாவில் தமிழகத்தில் இருந்து மூன்று பெண்கள் கொரியா சென்று நெல் விளைவித்தல், கடலில் முத்து குளித்தல் முதலிய தொழில்களை சொல்லிக் கொடுத்துள்ளனர்.
- ஆட்சி அதிகாரத்திலும் புலம்பெயர்ந்த தமிழர் இடம்பெற்று இருந்துள்ளனர், இருக்கின்றனர் என ஏரிசா பாலு கூறுகிறார்
- பழங்காலத் தமிழர் கிரீஸ், ரோமபுரி, எகிப்து, சீனா போன்ற நாடுகளில் கடல் வாணிகம் செய்தனர்.
- பாலஸ்தீனம், மெசபடோமியா போன்ற நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர்.
- தமிழகத்தின் ஏலம், மிளகு, இலவங்கம் போன்ற பொருட்களை ஆசிய மக்கள் விரும்பி வாங்கியுள்ளனர்
- இதனால் தமிழர் இப்பொருட்களைப் பெருமளவில் ஏற்றுமதி செய்து பெரும்பொருள் ஈட்டினர்.
- முசிறி துறைமுகம் கப்பல் உள்ளே வருவதற்கு தேவையான ஆழமில்லாத துறைமுகம்.
- ஆகவே யவனரின் பெரிய கப்பல்கள் கரைக்கு வர முடியாமல் கடலில் நின்றன.
- தமிழர்கள் மிளகைத் தோணிகளில் ஏற்றிக் கப்பலுக்குக் கொண்டு சென்றுள்ளனர்
- மிளகு மூட்டைகளைக் கப்பலில் ஏற்றிவிட்டு அதன் விலையாகக் பொன் கட்டிகளை வாங்கி வந்தனர் என்பதைப் பரணர் பாடல் எடுத்துரைக்கிறது,
"யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து
கறியொடு பெயரும்
வளங் கெழு முசிறி" என்று பரணர் கூறுகின்றார்.
- கடலிலிருந்து கிடைக்கும் முத்து மற்றும் சங்குகளால் செய்யப்பட்ட வளையல்கள், நவதானியங்கள், உப்பிட்டு பதப்படுத்திய மீன்கள் போன்றவற்றைத் தமிழகத்து வணிகர்கள் அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்
- வாணிகம் முடிந்து திரும்பும் போது குதிரை முதலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு திரும்பினார் என்பதை மாங்குடி மருதனார் என்ற புலவர்,
" முழங்குகடல் தந்த விளங்குகதிர் முத்தம் ஆரம் போழ்ந்து அறுத்த கண்ணேர் இலங்குவளை
பரதவர் தந்த பல்வேறு கூலம்" என்று மதுரைக்காஞ்சியில் குறிப்பிட்டுள்ளார்.
- புறநானூற்றுப் பாடல் ஒன்று, யவனர் மரக்கலங்களில் கொண்டு வந்த நறுமணம் மிகுந்த மதுவைப் பாண்டிய மன்னன் பருகிக் கழித்தான் என்று குறிப்பிடுகிறது.
"யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைக்கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து ஆங்கு இனிதி ஒழுகுமதி ஓங்குவாள் மாற"
என வரிகள் தெரிவிக்கின்றன.
- இவ்வாறு வாணிகத் தொடர்பு உலக நாடுகளில் எல்லாம் தமிழர் கொண்டிருந்தனர்.
- இன்றும் உலகின் பல நாடுகளிலும் தமிழரும் தமிழும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் பரவி வாழ்ந்து வருகின்றனர்
- இவெயெல்லாம் பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பை நமக்கு நன்கு எடுத்துரைக்கின்றன.
-------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக