புதிய கற்காலம் (Neolithic Age) - கி.மு. ஒரு லட்சம் முதல் 30,000 ஆண்டுகள் வரை

 

புதிய கற்காலம் (Neolithic Age)  

கி.மு. ஒரு லட்சம் முதல் 30,000 ஆண்டுகள் வரை



புதிய கற்காலம் குறித்து விளக்கி எழுதுக.

புதிய கற்காலம்

  • பழைய கற்காலத் தமிழர்களின் வாழ்க்கை நிலை படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது. 
  • இந்தக் காலகட்டத்தை வரலாற்று அறிஞர்கள் புதிய கற்காலம் என்பர்.
  •  இந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் புதிய கற்கால மனிதர்கள் ஆவர்.
  • இதற்கு முந்தைய பழைய கற்கால மனிதர்கள் உருவாக்கிய கற்கருவிகளை நன்கு தேய்த்து வழவழப்பாகவும் கூர்மையாகவும் மெருகேற்றிய கற்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். 
  • இதனால் புதிய கற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

புதிய கற்கால மனிதர்களின் உடலமைப்பு

  • பழைய கற்காலத் தமிழர்களைப் போன்று உடலில் அதிக மயிர்க்கற்றை இல்லாமல் இருந்தனர். 
  • கடுமையான முகத்தோற்றம் மறைந்து மென்மையானதாகப் பொலிவு பெற்றது. 
  • நீண்ட தலைமுடியையும் தாடியையும் பெற்றிருந்தனர்.  

புதிய கற்கால மனிதர்களின் வாழ்விடங்களுக்கான சான்றுகள் கிடைத்த இடங்கள்

  •             தர்மபுரி, பாலக்காடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி, பெண்ணாகரம் ஆகிய வட்டங்களில் இம் மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.
  • அரிக்கமேடு, சேலம் மாவட்டம், திருச்சி மாவட்டம், மதுரை மாவட்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் புதிய கற்காலத் தமிழர்களின் வாழ்விடங்களுக்கான சான்றுகள் உள்ளன.

புதிய கற்கால கருவிகள் கிடைக்கப் பெற்ற இடங்கள்

  • கற்கருவிகள், வட்டுகள், தேய்பான்கள் போன்றன பிக்கனள்ளி என்ற ஊரிலும் கைக்கோடாரிகள் வத்தல்மலை அடிவாரத்திலும் மக்களால் வழிப்படப் படுகின்றன.  
  • வடார்க்காடு, தென்னார்க்காடு பகுதிகளின் பல இடங்களிலும் புதிய கற்கால கருவிகள் கிடைக்கின்றன.

புதிய கற்காலக் கருவிகள்

  • நன்கு மெருகூட்டப்பட்ட புதிய கற்கருவிகள்
  • பல வகைக் கல்தூண்கள் 
  •  எலும்பு கருவிகள்
  • கல் கோடரிகள்
  • சிறு கல்கருவிகள்
  • இரு பக்க கல் கோடாரிகள் 
  • அம்மி
  • குழவி
  • திரிகை
  • கற்சட்டி
  •  கல் பாத்திரங்கள்
  • கைக்கோடாரி 
  • உழுகலப்பை
  • கவண்
  • வில்
  • மான் கொம்பு
  • மாட்டுக்கொம்பு
  • வளைதடி 

புதிய கற்கால அணிகள்

 கல்மணிகள், ஆற்றுக்கூழாங்கற்கள் கொண்டு கோலிகள், தாயத்துகள் முதலியன  செய்துள்ளனர்.

புதிய கற்காலத் தொழில்கள்

  • புதிய கற்காலத் தமிழர்கள் மரத்தாலும் கற்களாலும் ஆன பொருட்களைச் செய்வதைத் தொழிலாகக் கொண்டனர்.
  • விலங்குகளின் தோல்களைப் பதப்படுத்தித் தோல் ஆடையும் செய்துள்ளனர்.
  • வேட்டை உணவு தேவையை நிறைவு செய்யாததால் கால்நடைகளை வளர்த்தல், இயற்கையாக விளையக்கூடிய பயிர் வகைகளைப் பயிர் செய்தல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டனர்.                                                                                                               புதிய கற்காலத் தமிழர்களின் வேளாண்மை தொழில் வகைகள்

தொழில் வகைகளின் படிநிலை வளர்ச்சி மாற்றத்தால் குறிஞ்சி நிலப் பகுதியில் மட்டும் வாழ்ந்து வேட்டையாடி வந்த பழைய கற்காலத் தமிழர்களின் வழிவந்தோர் புதிய கற்காலத்தில் உருவான முல்லை நிலப் பகுதியில் கால்நடைகளை மேய்த்து வாழப் பழகினர்.

1.   1. கொத்துக்காட்டு வேளாண்மை

 கால்நடைகளைப் பயன்படுத்தி வேளாண்மை செய்ய பழகாத நிலையில் கற்கோடாரி கொண்டு கொத்தி கொத்தியே வேளாண்மை செய்தனர். இதற்குக் கொத்துக்காட்டு வேளாண்மை என்ற பெயர்.

2.   2. காட்டெரிப்பு வேளாண்மை

 குறுங்காடு, பெருங்காடுகளைத் தீயிட்டு அழித்து வேளாண்மைக்காக நிலத்தைப் பயன்படுத்தினர். அதனால் இதற்குக் கொல்லை என்று பெயர். இது காட்டெரிப்பு வேளாண்மை என்ற பெயர்.

3.   3. பயிர் மாற்று வேளாண்மை

 பருவ மாற்றத்துக்கு தக்கபடி ஒருமுறை கிழங்குகளையும் மறுமுறை வேறுவகை பயிர்களையும் விளைவித்தனர். இதற்குப் பயிர் மாற்று வேளாண்மை என்று பெயர். இப்படி வேளாண்மை படிமலர்ச்சி பெற்றது.

பிற்காலத்தில் நீரைப் பயன்படுத்திப் பயிரிடும் வகையில் மருத நிலத்தை  உருவாக்கினர்.  

புதிய கற்காலத் தமிழர்கள் விலங்குகளைப் பழக்க கற்றுக் கொள்ளுதல்

  • புதிய கற்காலத் தமிழர்களின் படிநிலையான  அறிவு வளர்ச்சியினாலும் பட்டறிவினாலும் தங்களது தேவைகளுக்காகக் கால்நடைகளைப் பழக்கிக் கொண்டனர்.
  • உணவுத் தேவைக்கு இவ்விலங்குகளைப் பழக்கிப் பயன்படுத்தியுள்ளனர். 
  • தாங்கள் வளர்க்கும் விலங்குகளின் உணவுக்காக மேய்ச்சல் நிலங்களை உருக்கினர். இதற்குக் காடுகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் குறிஞ்சி, முல்லை நிலப் பகுதிகள் அவர்கள் நிலையாகத் தங்கும் இடங்களாக மாறின.
  • நாய்களின் நுண்ணறிவு கண்டு வியந்து அவற்றை தமது வேட்டைத் தொழிலுக்கு உதவுமாறு பழக்கிக் கொண்டனர்.

புதிய கற்காலத் தமிழரின் வீடுகள்

  • புதிய கற்காலத் தமிழர்கள் பயிர்த்தொழில் செய்ய அறிந்து கொண்டதால் கால்நடைகளை வளர்க்கவும் தானியங்களை விளைவிக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் நிலையாக ஓரிடத்தில் தங்க வேண்டிய நிலை உருவானது.
  •             சிறிய சமதளமான மலைகள் அல்லது மலையின் அடிவாரத்தில் சிறிய நிலையான வீடுகளை அமைத்து வாழ்ந்தனர். 
  • மக்கள் தொகை பெருகப் பெருக வேளாண் உற்பத்தியும் பெருகப் பலர் சேர்ந்து வாழ வேண்டிய நிலையில் ஊர்கள் உருவாயின.
  •  மரத்தின் போக்கிற்கேற்ப வீட்டின் அமைப்பை, வட்டம், நீள்வட்ட வடிவில் அமைத்துப் புல் வேய்ந்த கூரை வீடுகளைக் கட்டிக் கொண்டனர்.
  • மரக்கம்புகளை நட்டு அதன் மேல் புல்லால் கூரைவேய்ந்தனர். 
  • மூங்கிலைப் பின்னி அதன்மேல் சாம்பல் கலந்த மண்ணைப் பூசியும், பின் மண்ணும் கல்லும் கலந்து சுவராகப் பயன்படுத்தினர். 
  • வீட்டின் சுற்றுச்சுவரை மண்ணாலும் காலப்போக்கில் மண்சேறு பூசி மெழுகியும் பயன்படுத்தியுள்ளனர். 
  • தரையில் தட்டைக் கற்கள் பதித்துக் கொண்டனர்.
  • வீட்டுக்கூரையின் உச்சியில் மழைநீர் விழுவதைத் தடுக்க மண்குடத்தைக் கவிழ்த்துக் கொண்டனர். 
  • இந்தக் குடம் அல்லது சட்டி தான் பிற்காலத்தில் கோயில்களில் கலசங்களாக மாறின.
  • வீடுகள் கட்டத் தெரிந்த காலமே கட்டடக்கலையின் தொடக்கம் எனலாம். 
  • இத்தகைய வீடுகளை இன்றும் மலைவாழ் மக்களின் ஊர்களில் காணலாம். 
  • புல்வேய்ந்த குடில்களைப் புறநானூறும் மலைபடுகடாமும் குறிப்பிடுகின்றன.

 

புதிய கற்காலத் தமிழரின் தொடர்பு மொழி

மனிதன் மொழி                                                                                                           

    1. இயற்கை மொழி (Natural language), 

    2. செயற்கை மொழி (Artificial language), என இருவகை படும். 

  • சுட்டுச் சொற்களுக்கு முந்தியது இயற்கை மொழி. 
  • பிந்தியது செயற்கை மொழியாகும்.
  • குமரிக்கண்டத்தில் குறிஞ்சி நிலத்திலிருந்து தோன்றிய தமிழ் பின்னர் முல்லை நிலத்திற்குப் பரவியது. அதனால் அந்நிலத்துக் கருப்பொருட்கள் பற்றிய சொற்கள் பிறந்தன.
  • பழைய கற்காலத் தமிழர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள சுட்டு ஒலிகளைப் பயன்படுத்தினர்.  
  • புதிய கற்காலத்தில் அவை தனித்தனிச் சொற்களாக வளர்ந்தது.

செயற்கை மொழியின் வகைகள்

செயற்கை மொழி நான்கு வகைப்படும். அவையாவன,

1. அசைநிலை அசைநிலை என்பது ஒற்றையாய் வேறு எந்தச் சொல்லுடனும் சேராமல் தனியாய் இருக்கும் சொல் (ஏ, உள், பல், யா, உண்)

 2. புணர்நிலை புணர்நிலை என்பது இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருத்தல் (பெரு+மகன்= பெருமகன், செய்+கை= செய்கை)

3. கொளுவுநிலை கொளுவுநிலை என்பது முழுச் சொல்லும் துணை உறுப்புச் சொற்களும் ஒன்றாய் இணைந்து ஒரு சொல்லாய் இருத்தல் (வரு+உந்து+இ=வருந்துவி)

4. பகுசொல் நிலை பகுசொல் நிலை என்பது இரண்டு சொற்கள் மருவி உட்பிணைந்து உருமாறி இருத்தல் - பெம்மான் (பெருமகன்) - பிரான்

     இந்நிலைகளைப் புதிய கற்காலம் முடியும் முன்னரே கடந்து இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் உரைக்கின்றனர். 

அசைநிலைக் காலத்தில் சீனரின் முன்னோரும் கொளுவுநிலைக் காலத்தில் சித்தியரின் முன்னோரும் பகுசொல் நிலைக் காலத்தின் தொடக்கத்தில் சுமேரியரின் முன்னோரும் குமரி நாட்டில் இருந்து பிரிந்து போயிருக்க வேண்டும் எனச் சில சான்றுகள் வழித் தெரிய வருகிறது.

...............................................................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி