பழைய கற்காலம் (Palaeolithic Age) – கி.மு. 5 இலட்சம் முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை
பழைய கற்காலம் (Palaeolithic Age) –
கி.மு. 5 இலட்சம் முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை
பழையகற்கால குறித்து அறியப்படும் செய்திகளைத் தொகுத்துரைக்க.
முன்னுரை
பழைய கற்கால மக்கள் பழன்படுத்திய கருவிகள், தொழில்கள், உணவு வகைகள், வாழ்ந்த இடம், கிடைக்கப்பெற்ற சான்றுகள் வழியாகப் பழைய கற்காலம் குறித்து இங்கு விளக்கப்படுகின்றன.
பழைய கற்காலம்
- பழைய கற்காலம் என்பது மனித வாழ்க்கையின் தொடக்க நிலையைக் குறிப்பதாகும்.
- இயற்கையாகக் கிடைக்கும் (குவார்ட்சைட்) கரடு முரடான, சொரசொரப்பான கற்கருவிகளை வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய முதல் மாந்தர்கள் வாழ்ந்த காலம் பழைய கற்காலம் எனப்படும்.
பழைய கற்காலம் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட
பெயர்கள்
- கற்களைக் கருவியாகப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து விலங்கிலிருந்து வேறுபட்ட மனிதனாக மாறினான்.
- அவர்களை வரலாற்று ஆசிரியர்கள் உணவு சேகரிப்பவர்கள் என்றும், மானிடவியலார் காட்டாண்டி நிலை என்றும் குறிப்பிட்டனர்.
பழைய கற்காலம் மனிதர்களின் உடலமைப்பு
- கூர்மையான முகம், உடல் முழுவதும் மயிர்க்கற்றை, நீண்ட நகங்கள், நீளமான தலைமுடியுடன் இருந்தனர்.
பழைய கற்காலம் மனிதர்களின் கால பழமையைக் கண்டறிந்தவர்
- தென்னிந்தியாவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த 459 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- அவற்றில் 42 இடங்கள் பழங்கற்காலத்தையும் 252 இடங்கள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவையாக உள்ளன.
- இன்றைய இந்திய வரலாற்றை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என முதன் முதலில் உலகுக்கு உணர்த்தியவர் இராபர்ட் புரூட்ஸ் பூட் ஆவார்.
பழைய கற்காலம் மனிதர்கள் வாழ்ந்த இடங்கள்
- முதன் முதலில் மனிதன் தோன்றியது மலைகளும் மலை சார்ந்த இடங்களும் காடுகளுமே ஆகும்.
- முதலில் தமிழர் தோன்றிய மலை சார்ந்த நிலப்பகுதி குறிஞ்சி எனப்பட்டது.
- இம்மலைத்தொடர்களில் வேட்டையாடி வாழ்ந்து வந்த வேட்டுவத் தமிழர்களே முதல் மனிதர்கள் ஆவார்.
- தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர், கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர், வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகில் உள்ள கொற்றலை (பழைய பாலாறு) ஆற்றுச் சமவெளி, ஆரணியாற்றுச் சமவெளி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூண்டி, குடியம், அத்திரம் பாக்கம், நெய்வேலி, வடமதுரை, சென்னையில் உள்ள பல்லாவரம் மலை போன்ற தமிழகத்தின் பல இடங்களில் சான்றுகள் கிடைத்துள்ளன.
- பாலாற்றில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு சிறிய கால்வாயே கொற்றலை ஆறாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வட்டங்கள் வழியாகப் பாய்ந்தோடி எண்ணூர் அருகில் கடலில் கலக்கிறது.
- செயற்கைக்கோள், நிழற்படங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கொற்றலை ஆற்று பள்ளத்தாக்குப் பகுதியில்தான் ஏறக்குறைய 5 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாலாறு ஓடியிருக்கலாம்.
- இந்தக் கொற்றலை ஆற்றின் கரையோரத்தில் பழைய கற்கால மக்கள் பெருமளவில் வாழ்ந்துள்ளனர்.
- இங்கு மாட்டின் நீள் வட்ட வடிவமான 17 காலடித் தடயங்கள் 3 மீட்டர் ஆழத்தில் பழைய கற்கருவிகளுடன் காணப்பட்டன.
- இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாய்வில் முதன் முறையாக விலங்கின் காலடித் பதிந்த தடயங்கள் இப்பகுதியில் தான் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சேரி பகுதியில் 1½ இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
- புதுவைக்கு அருகே உள்ள பொம்மையார்பாளையத்தில் கிடைத்த தொல் மனிதக் கூட்டை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்தபோது அதன் காலம் 1½ இலட்சம் ஆண்டுகள் எனக் கண்டறியப்பட்டது.
- அதற்கு முன்பிருந்தே மனித இனம் வாழ்ந்திருக்கக்கூடும்.
- அல்லிக்குழி மலைத்தொடரில் 2½ இலட்சம் ஆண்டுகளுக்கு முன் 16 குகைகளில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- 1962 – 63, 1963 - 64 ஆண்டுகளில்
மனத்தசம்மன் குகையிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பழைய கற்காலக் கருவிகள்
1.
கைக்கோடாரிகள்
2. இதய வடிவிலான கைக்கோடாரிகள்
3. வெட்டுக்கத்திகள்
4. சுரண்டிகள்
5.
சிறிய
வெட்டுக் கருவிகள்
6.
கூர்முனைக்
கருவிகள்
7.
வட்டுகள்
8.
மரம் இளைக்கும்
உளி
இக் கருவிகள் கரடு முரடான சொரசொரப்பான கற்களைக் கொண்டு செய்துள்ளனர்.
பழைய கற்காலக் கருவிகளின் பயன்பாடு
- தரையைத்
தோண்டுதல்
- மரத்தை
வெட்டுதல்
- நிலம்
மற்றும் மரத்தைத் துளைத்தல்
- விலங்குகளின் இறைச்சியைக் கிழித்தல்
- விலங்குகளின் தோல் உரித்தல்
- மரப்பட்டைகளைச் சீவவுதல்
- ஈட்டியை போன்று வீசி எறிந்து விலங்குகளைக் கொல்லுதல்
போன்ற தொழில்களைச் செய்ய கருவிகளைப் பயன்படுத்தினார்.
பழைய கற்காலக் கருவிகள் கிடைக்கப் பெற்ற
இடங்கள்
1.
பல்லாவரம்,
அத்திரம்பாக்கம், பூண்டி, வடமதுரை, குடியம், பரிக்குளம், பெங்களூர் போன்ற இடங்கள்
2.
புதுக்கோட்டை
மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள குருவிக்கொண்டான்பட்டி, சோழகம்பட்டி, இரகுநாதபுரம், ஒட்டப்பாலம், புனல்குளம்,
3. மணப்பாறை வட்டத்தில் ஊனையூர்
4.
கரூர்
மாவட்டத்தில் செகதாபி,
5.
தஞ்சை
வட்டத்தில் வல்லம், புதூர், சாணூரப்பட்டி, செங்கிப்பட்டி, கூனம்பட்டி,
6.
அரியலூர்
மாவட்டம் செந்துறை வட்டத்தில் பாசாலம், நல்லாம்பாளையம், செந்துறை, தாமரைப்பூண்டி, சிறுகளத்தூர்,
கஞ்சமலைப்பட்டி,
7. உடையார்பாளையம் வட்டத்தில் மருங்கூர், இடையக்குறிச்சி, கூழாட்டுக்குப்பம், மைக்கேல்பட்டி, பிலிச்சிக்குழி, மேலசிந்தாமணி, காக்காபாளையம், அணிக்குறிச்சி, வெண்மான்கொண்டான், ஆதிச்சனூர், விளாங்குடி கா.அம்பாப்பூர், காத்தான்குடிக்காடு, கோரியம்பட்டி, நடுப்பட்டி, புதுக்குடி, செங்குந்தபுரம்
ஆகிய இடங்களில் நுண்கற்கருவிகளும்
பழைய கற்கால கருவிகளும் கிடைத்திருக்கின்றன.
- தகடூர் மாவட்டம் தான் அதிக அளவில் கற்கால கருவிகள் கிடைக்கப் பெற்ற பகுதி என்று தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் சுந்தரவேலு ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பழைய கற்காலத் தமிழர்களின் நெருப்பு
பயன்பாடு
- பழைய கற்காலத் தமிழர்கள் நெருப்பின் பயன்பாட்டைத் தொடக்க காலத்தில் அறிந்திருக்கவில்லை.
- கோடை காலத்தில் மூங்கில்கள் உராய்ந்து பற்றிக் கொண்ட நெருப்பைப் பார்த்து அஞ்சினர். பிறகு மரக் குச்சிகளைக் கடைந்து தீயை உருவாக்குவதன் (தீக்கடைக்கோல்) மூலமும் சிக்கிமுக்கி கற்களை உரசுவதன் மூலமும் நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டனர்.
- நெருப்பைக் கண்டுபிடித்த பின்பே மக்கள் தமது நாகரீக வளர்ச்சியைத் தொடங்கினார்.
- நெருப்பைப் பயன்படுத்தித் தாக்க வரும் விலங்குகளை விரட்டினர்.
- இறைச்சியை வதக்கி உண்டனர்.
- குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்தினர்.
- தேனியை விரட்டித் தேன் எடுக்கவும் கற்றுக் கொண்டனர்.
பழைய கற்காலத் தமிழர்களின் தொழில்கள்
- உணவு சேகரித்தல்,
- காய்கனிகளைப் பறித்தல்,
- கிழங்கு எடுத்தல்,
- தேன் எடுத்தல்,
- வேட்டையாடுதல்,
- கற்களைத் தோண்டுதல்,
- கற்களை நாட்டுதல்,
- பாறையில் ஓவியம் தீட்டுதல் போன்ற வேலைகளைச் செய்தனர்.
பழைய கற்காலத் தமிழர்களின் உணவுகள்
- இவர்கள் தொடக்க காலத்தில் காடுகளில் இயற்கையாக விளைந்த காய்கள், கனிகள், கிழங்குகளை உண்டனர்.
- காலபோக்கில் பருவ மாற்றங்களால் காய்கனிகள் கிடைப்பது அருகிய நிலையில் இறைச்சி உணவை உண்ணத் தொடங்கினர்.
- சில இடங்களில் தீயில் வெந்த இறைச்சியை உண்டனர்.
- விலங்குகளைத் தானே வேட்டையாடி உண்டனர்.
- தேனை வடித்து உண்டனர்.
பழைய கற்காலத் தமிழர்கள் இறைச்சியை உணவாகப்
பயன்படுத்தியமைக்குச் சான்றாதாரங்கள்
தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி (கருமலை) கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 65 ஊர்களில் உள்ள மலைகளில் காணப்படும் இயற்கையாக அமைந்த குகைத்தளங்களின் பாறைகளில் செங்காவிக் கட்டி மற்றும் சுண்ணாம்புக்கட்டி ஆகியவை கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள் உள்ளன.
விலங்குகளையும் மக்கள் விலங்குகளை வேட்டையாடும் காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்திருந்தனர்.
விலங்குகளின் இறைச்சியை மக்கள் உண்டனர்
என்பதற்கு இவ் ஓவியங்கள் சான்றாக உள்ளன.
பழைய கற்காலத் தமிழர்களின் ஆடைகள்
- முதலில் ஆடையின்றி வாழ்ந்த மக்கள் பின்பு குளிர் வெப்பம் போன்ற இயற்கை நிலையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளத் தொடங்கினர்.
- அதற்குக் கோரைத் தழை, தையிலை, இலைதழை, மரப்பட்டை, விலங்கின் தோல், மரப்பட்டைகளை ஊறவைத்துத் தட்டி விரிவாக்கிய நார்கள் ஆகியவற்றை அடையாக அணிந்தனர்.
- கற்கருவிகளைக் கொண்டு தோலைக் கிழித்து உடுத்திக் கொள்ளவும், மரப் பட்டைகளைச் சீவியும் ஆடையாக அணிந்துள்ளனர்.
- தழை, மரப்பட்டை ஆகியன சீரை எனப்பட்டது.
- சீரை என்ற சொல் சீலை- சேலை என்ற சொல்லாக மாறியது.
பழைய கற்காலத் தமிழர்களின் அணிகலன்கள்
- மருக்கொழுந்து,
- அழகிய மலர்,
- பறவைகளின் இறகு,
- வண்ணக் கற்கள் முதலியவற்றை அணிகலன்களாக அணிந்துள்ளனர்.
- புலிப்பல் வடிவம் கொண்ட தாலி செய்துகொண்டதும்,
- இன்றும் மலரைத் தலையில் சூடி கொள்வதும் சான்றுகளாக அமைகின்றன.
பழைய கற்காலத் தமிழர்களின் பழக்கங்கள்
- தண்ணீரைச் சேமிக்க மட்கலங்களைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர்.
- இதனால் ஓடை, ஆறு, நீர் ஊற்றுகளில் தண்ணீரை அள்ளிப் பருகினர்.
- தண்ணீர் வற்றிய காலத்தில் பாறைக்குழிகளில் நிறைந்த நீரை கைகளால் அள்ளிப் பருகியதோடு விலங்குகளைப் போல கவ்வியும் குடித்துள்ளனர்.
- தண்ணீர் இல்லாத வறட்சி காலத்தில் மரத்தைத் துளைத்தும், கல்லைக் குடைந்தும், சுரைக் குடுக்கை, மூங்கில் நாழி ஆகியவற்றை நீர் கலங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
பழைய கற்காலத் தமிழர்களின் படுக்கைகள்
- தொடக்க காலத்தில் ஆற்றுப் படுக்கையில் உறங்கினர்.
- விலங்குகளுக்கு அஞ்சி மரக்கிளைகளில் இலைகள், தழைகள், விலங்கின் தோல் ஆகியவற்றைத் தொட்டிலாகக் கட்டி அதில் தொங்கிக் கொண்டே தூங்கினர்.
- அதன் பின்னர் குளிர் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள மலை குகை, கல்லால் அமைந்த காற்று மறைப்பில் உறங்கினர்.
கருத்துகள்
கருத்துரையிடுக