வரலாற்றுக்கு முந்தைய காலம் (Pre historic period)
தமிழரின் வரலாற்று கால வகைப்பாடு (பிரிவு)
- முதல் மனிதராகிய தமிழரின் வரலாற்றைக் கால அடிப்படையில், 1. வரலாற்றுக்கு முந்தைய காலம் (Pre historic period), 2. வரலாற்றுக் காலம் (Historic period) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.
- எழுத்துச் சான்றுகள் தோன்றுவதற்கு முந்தைய காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் அல்லது தொல் பழங்காலம் எனலாம்.
- எழுத்து தோன்றி அதனை அடிப்படை சான்றாகக் கொண்டு விளங்கும் காலத்தை வரலாற்றுக் காலம் எனவும் வகைப்படுத்தலாம்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் (Pre historic period)
- வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது மனிதன் உடல் அளவிலும் மன அளவிலும் பல வகையில் படிப்படியாக மேம்பட்டுக் கொண்டிருந்த காலமாகும்.
- இந்த காலம்தான் வரலாற்றில் நீண்ட பெருங்காலமாக இருந்துள்ளது. இக்காலத்தில் தான் உலகம் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டது.
- உணவு திரட்டுதல், விலங்குகளை வேட்டையாடுதல், உணவு விளைவித்தல், விலங்குகளைப் பழக்குதல் வரைவிலான செயல்கள் வரலாற்றுக்கு விளக்கமாக அமைந்திருந்தன.
- இக்காலம் வரலாற்றுக்கு முந்தைய காலமாகும்.
- வரலாற்றுக்கு முந்தைய கால வரலாற்றை அறிவதற்கு எழுத்து வடிவ சான்றுகள் இல்லை.
- அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் விட்டுச் சென்ற கற்கள், பானை ஓடுகள் மற்றும் உலோகத்தால் ஆன கருவிகள், ஓவியங்கள், எலும்புகள் முதலியவை கிடைத்துள்ளன.
- இவற்றின் உதவியுடனும் இலக்கியச் சான்றுகள், மொழி ஆய்வு, சமூகவியல், மானிடவியல் ஆகியவற்றின் துணையுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி அறியலாம்.
வரலாற்றுக்கு முந்தைய காலம் (Pre historic period)
தொல் தமிழர்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை,
- பழைய கற்காலம் (Palaeolithic Age) – கி.மு. 5 இலட்சம் முதல் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை
- புதிய கற்காலம் (Neolithic Age) - கி.மு. ஒரு லட்சம் முதல் 30,000 ஆண்டுகள் வரை
- உலோகக் காலம் (பெருங்கற்காலம்) (Megalithic Age) – கி.மு. 30,000 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரை
என வகைப்படுத்தலாம்.
..........................................................................................................................................
கருத்துகள்
கருத்துரையிடுக