அகழ்வாராட்சியில் தமிழும் தமிழரும் (கீழடி வரை)

 அகழ்வாராட்சியில் தமிழும் தமிழரும் (கீழடி வரை)


தொல்லியல் துறையின் நோக்கம்

  • நமது பழமையினைத் தேடும் துறை தொல்லியல் ஆகும்.
  • நமது முன்னோர் விட்டு சென்ற கருவிகள் வழியாக மானுட சமூகம் பெற்ற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே தொல்லியல் துறை இயங்குகிறது.
  • நவீன கருவிகள் உருவாக மூதாதையர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு கற்கருவிகள், சக்கரம் போன்ற தொல் பொருள்கள் தான் மூல காரணமாக இருந்தன எனலாம்.
  • மனித வளர்ச்சியும் தொல்பழங்காலம் முதல் படிப்படியாகத் தோன்றியதே ஆகும்.

தொல்லியல் துறையின் பிரிவுகள்

  • வரலாற்றுக்கு முந்திய தொல்லியல்
  • வரலாற்று காலத் தொல்லியல்
  • என இரு பெரும் பிரிவுகளாகத் திகழ்கிறது.
தொல்லியல் துறையின் பணிகள் அல்லது தொல்லியல் துறையின் செயல்பாடுகள்

  • அகழ்வாய்வு இடங்களைக் கண்டறிதல்
  • கண்டறிந்த இடங்களில் அகழாய்வுகளை மேற்கொள்ளுதல்
  • கண்டறிந்த பொருள்களுக்கு விளக்கம் அறிதல்
  • இலக்கியங்கள், கல்வெட்டுகள், காசுகள், கட்டடங்கள் உள்ளிட்ட மூலப் பொருட்களை ஆய்வு செய்வதாகும். 
  • அகழாய்வுப் பணியே தொல்லியல் ஆய்வின் முதன்மைப் பணியாகும்.
அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட பழமையான நாகரீகங்கள்
  • மெசபடோமியா,
  • எகிப்து,
  • மயன் நாகரீகங்கள்
  • கிழக்கில் சீனம் 
போன்றன அகழாய்வுகள் மூலமே வெளிக்கொணரப்பட்டன. 

அகழாய்வினால் ஏற்பட்ட நன்மைகள்


  • இந்தியாவில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் பழங்கற்காலம், புதிய கற்காலம், செம்பு காலம் மற்றும் இரும்பு கால வாழ்விடங்கள் வெளிவருவதற்கு உதவியாக இருந்துள்ளன.
  • தமிழ்நாட்டில் தற்செயலாகக் கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்நாட்டின் வரலாறு தொடங்குவது உறுதி செய்யப்பட்டன.
அகழாய்வுகளை மேற்கொள்வதற்குத் துணைபுரியும் நிறுவனங்கள் யாவை?

  • மும்பையில் உள்ள இந்திய புவி காந்தவியல் நிறுவனம்,
  • அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம்,
  • பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு துறை
அகழாய்வில் பின்பற்றப்படும் தொழில்நுட்பங்கள்
  • தரை ஊடுருவல் தொலை உணர்வு மதிப்பாய்வு,
  • காந்த அளவி மதிப்பாய்வு,
  • ஆளில்லா வான்வழி வாகன மதிப்பாய்வு
அகழாய்வில் கிடைத்த பொருள்களின் பழமையைக் கணக்கிடப் பயன்படும் துறைகள்


  •  தொல் - தாவரவியல்,
  • மூலக்கூறு உயிரியல்,
  • மக்கள் மரபியல்,
  • சுற்றுச்சூழல் தொல்லியல்,
  • மொழியியல் தொல்லியல்

இந்திய தொல்லியலாளர்கள்

  • இந்திய தொல்லியலின் தந்தை திரு அலெக்சாண்டர் கன்னிங்காம்,
  • இராபர்ட் புரூஸ்புட், 
  • கர்சன் பிரபு,
  • சர் ஜான் மார்ஷல்,
  • சர் மார்டிமர் வீலர்,
  • ரேமண்ட் ஆல்சின்,
  • V.D. கிருஷ்ணசாமி,
  • A. கோஸ்,
  • M.N. தேஷ்பாண்டே,
  • B.K. ராவ்,
  • B.B.லால்,
  • H.D. சாங்கலியா,
  • V.N. மிஸ்ரா,
  • R.S.பிஷ்ட்  

 

சிந்துவெளி அகழ்வாராய்ச்சி


  •  சிந்துவெளியின் வரலாற்று புகழ்பெற்ற அகழ்வாராட்சிகள் ஹீராஸ் பாதிரியாரின் தலைமையில் நடைபெற்றன.
  • சிந்துவெளியில் மிகப் பழங்காலத்தில் பெரியதொரு நாகரீகம் செழித்து வளர்ந்திருந்தது அது அறவே அழிந்து போனதற்கான காரணங்கள் தெரியவில்லை என்கின்றனர் அறிஞர்கள்
  • சிந்துவெளியில் மொகஞ்சதாரோ, ஹரப்பா என்ற இரு நகரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவ்விடங்கள் இப்போது பாகிஸ்தானில் உள்ளன.
  • இவையன்றிச் சானுடாரோ, கோட்பீஜி, லோதால், காளிபங்கன் என்ற இடங்களிலும் அகழ்வாய்வு செய்து பண்டைய நாகரிக சின்னங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இவை நான்கும் இந்தியாவுக்குள் உள்ளன.
  • அகழ்வாய்வு முடிவுகளை முதன் முதலில் உலகிற்கு தந்துதவியவர் சர் ஜான் மார்ஷல் ஆவார்.
  • மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இரு நகரங்களும் நெருங்கிய ஒற்றுமையுடன் காணப்படுகின்றன.
  • பழங்காலத்தில் மெகஞ்சதாரோ  செழிப்பான நகரமாக விளங்கியதாகவும் பிறகு அது வெள்ளத்தில் மூழ்கி மண் மேடானதாகவும் அதற்கு மேல் வேறு ஒரு நகரம் எழுந்தது என்றும் அதுவும் பிறகு வெள்ளத்தில் மூழ்கி போனது என ஏழு நகரங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக எழுந்து அவை அனைத்தும் மண்ணில் புதை கொண்ட போனதாகத் தெரிகின்றது. அல்லது எதிரிகளால் அளிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சிலர் கருதுகின்றனர்.
  • மொகஞ்சதாரோவிலும் ஹரப்பாவிலும்  ஊருக்கு வெளியே பெரிய கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருந்தன.
  • அக்கோட்டைக்குள் மன்னரின் மாளிகையும் பெரிய பெரிய நீராடுங் குளங்களும் நேருக்கு நேரான சாலைகளும் பெரிய வீடுகளும் நெற்களஞ்சியங்களும் இருந்தன.
  • மொகஞ்சதாரோ முழுவதும் செங்கல்லால் கட்டப்பட்டதொரு நகரமாக காட்சியளிக்கின்றது.

  • அதன் அழகிய தெருக்கள் யாவும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன.

  • நகரத்தின் சுற்றளவு 3.4 கி.மீ. ஆக இருந்துள்ளது

  • கோயில் பூசாரிகளுக்கெனத் தனித்தனி வீடுகள் இருந்தன.
  • மொகஞ்சதாரோவில் உள்நாட்டு வெளிநாட்டு வாணிகம்  சிறப்பாக நடைபெற்று இருந்தது.
  • இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களும் உலோகங்களும் நவமணிகளும் சேமித்து வைக்கப்பட்டன.
  • அழகான மட்பாண்டங்கள், மண் பொம்மைகள்,  வெண்கல சிலைகள் முதலியவற்றை கலை நயத்துடன் செய்து வைத்திருந்தனர்.
  • களிமண் முத்திரைகளும் செப்பேடுகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
சிந்துவெளி மொழியும் எழுத்து அமைப்பும்
  • செப்பேடுகளில் ஒரு வரி இடமிருந்து வலமாகவும் அடுத்த வரி வலமிருந்து  இடமாகவும் வருகின்றது.
  • இவை சித்திர முறையும் ஒலி முறையும் கலந்து பிறந்தவை என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.
  • சிந்துவெளி மொழியில் 300 குறிகள் காணப்படுகின்றன.
  • இவற்றில் 250 குறிகள் அடிப்படையானவை.
  • எனயவை சார்புக் குறிகள் 
  • சிந்துவெளி மொழி என்பது பண்டைய தமிழ் வடிவமே என்பதற்குப் பல்வேறு சான்றுகளை ஹீராஸ் பாதிரியார் தருகிறார்.
  • அதனை இக்கால அறிவியல் வழியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
  • ரஷ்யா,  பின்லாந்து ஆகிய நாட்டு ஆய்வாளர்களில் சிலர் மொகஞ்சதாரோ மொழியை அறிவியல் முறையில் ஆராய்ந்து அம்மொழி திராவிட மொழியின் தொடக்க உருவமே என்று முடிவு கட்டியுள்ளனர்.
  • சிந்துவெளி எழுத்துகளை ஆராயும் பணியில் முனைந்திருந்தவர் ஐராவதம் மகாதேவன் ஆவார்.
  • சிந்துவெளி எழுத்துகளுக்குத் தாம் ஓரளவு விளக்கம் கண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
  • அவ்வெழுத்துகள்  சித்திரமும் ஒலிக்குறிப்பும் இணைந்து வடிவமைப்புப் பெற்றிருப்பதால் இன்றைய தமிழில் அவற்றைப் பெயர்த்து எழுத முடியவில்லை என்கிறார். 

சிந்துவெளி நாகரீகத்திற்கும் ஆரிய நாகரீகத்திற்கும் வேறுபாடுகள்

  • கிமு 1200 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் ஆரிய நாகரீகம் தோன்றியிருக்க முடியாது என்பது வரலாற்று ஆய்வாளர்கள் கொண்டுள்ள முடிவாகும். 

  • இருக்கு, அதர்வண வேதங்களில் காணப்படும் இலக்கிய அமைப்பை கொண்டும் புதைபொருள் சான்றுகளைக் கொண்டும் ஆரிய நாகரீகமானது கி.மு. 1100 - 1000  ஆண்டுகளில் தோனறிருக்கலாம்.

  •  சிந்துவெளி நாகரிகம் மறைவுக்கும் இந்திய நாட்டுக்குள் ஆரியர் நுழைவதற்கும் இடையில் பல நூற்றாண்டுகள் கழிந்து போயின.
  • ஆகவே சிந்துவெளி நாகரிகத்தை ஆரியரின் நாகரீகமாகக் கொள்ளக்கூடாது.
  • ஆரிய நாகரீகம் நாட்டுப்புறத்தோடு ஒன்றி வளர்ந்து வந்துள்ளது.
  • சிந்துவெளி மக்கள் பெரிய பெரிய நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தவர்கள். அவர்களது நாகரிகம் நகர்புறத்து நாகரிகம் ஆகும்.
  •  சிந்துவெளிச் சிதைவுகளில் இலிங்க உருவங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • சிந்துவெளி மக்கள் இலிங்க வழிபாடு உடையவர்கள் என்பது உறுதி படுகிறது.
  • இருக்கு வேத கால ஆரியர்கள் இலிங்க வழிபாட்டைப் புறக்கணித்துள்ளார்கள்.
  • வேதகால ஆரியர்கள் சிந்துவெளியில் வாழ்ந்தவர்களாக இருந்து பிறகு கங்கைவெளியில் பரவிக் குடியேறி இருப்பார்கள் என்றால் சிந்துவெளி சின்னங்களான எழுத்து முத்திரைகளையும் செப்பேடுகளையும் பொறிக்கும் வழக்கத்தையும் தம்முடனே கொண்டு சென்றிருக்க வேண்டும்.
  • ஆனால் இவை எவையும் வேதகால நாகரிகத்தில் காணப்படவில்லை.
  • ஆரியருக்கும் சிந்துவெளி மக்களுக்கும் உருவ அடிப்படையில் வேறுபாடு காணப்படுகிறது.
  • மொகஞ்சதாரோ களிமண் முத்திரைகளில் பசுபதி என்ற சிவ வடிவமும் அம்மன் வடிவமும் சிறப்பாக இடம்பெறுகின்றன்
  • ஆரியர்கள் பசுபதியை ஏற்காமல் உருத்திரனை ஏற்கின்றனர்.
  •  சிந்துவெளி மக்கள் பின்பற்றி வந்த சமயமானது கோள்கள் விண்மீன்கள் ஆகிய வான மண்டலங்களுடன் தொடர்பு கொண்டிருந்தது.
  • வேதகால ஆரியர்களும் அவர்களின் முன்னோர்களும் வானியல் சார் அறிவு பெற்றிருக்கவில்லை
  • பிற்கால ஆரியர்கள் பிற நாகரிக தொடர்பு காரணமாக ஏற்றுக் கொண்டனவும் திருத்திக் கொண்டனவும் மாற்றிக் கொண்டனவும் ஏராளம். 
சிந்துவெளி அகழ்வாய்வு மூலம் கண்டறியப்பட்ட வரலாற்று உண்மைகள்
  • சிந்துவெளி மக்களில் ஒரு சாரார் கங்கைச் சமவெளியிலும் வேறு பலர் தெற்கு நோக்கி வந்து தக்காணத்திலும் தமிழகத்திலும் தங்கி இருப்பார்கள் என்பது கருப்பு சிவப்பு பானை பயன்பாட்டின் மூலம் எடுத்துரைக்கப் பெறுகிறது.
  •  சிந்துவெளி அகழ்வாய்வு இந்தியாவில் திராவிட இன மக்கள் பரவி வாழ்ந்ததற்குப் புறநிலைச் சான்றாக அமைகின்றது.
  • திராவிட மொழிகள் பரவிய பலுச்சிஸ்தானம் வரையும் திராவிட இனம் பரவி இருந்தது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.
  • இந்தியப் பழங்குடி மக்கள் அனைவரிடத்திலும் காணப்பெறும் அடிப்படையிலான பண்பாட்டுக் கூறுகள் திராவிட பழங்குடியினரின் பண்பாட்டுக் கூறாகத்தான் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். 
தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழாய்வுகள்

  • தமிழ்நாட்டின் பழமையான நகரங்கள்
  • தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்
  • வைகை ஆற்றங்கரை நாகரிகம்,
  • பாலாறு ஆற்றங்கரை நாகரிகம்,
  • காவிரி ஆற்றங்கரை நாகரிகம்
                போன்ற ஆற்றங்கரை நாகரிகள் அகழ்வாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

 பொருநை  ஆற்றங்கரை நாகரிகம் அல்லது ஆதிச்சநல்லூர் அகழாய்வு


  • இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் ஆதிச்சநல்லூர் பறம்பில் நடைபெற்ற அகழ்வாய்வு முதல் அகழ்வாய்வாகும்.
  • இந்த அகழ்வாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மிக தொன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.
  • திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாளையங்கோட்டையிலிருந்து 12 கிலோமீட்டர் தண்பொருநை ஆற்றின் தென்கரையில் உள்ளது.
  • இங்கு 114 ஏக்கர் தெற்கு வடக்காகப் பரந்து கிடக்கும் பொட்டல் பறம்பான இது பண்டைத் தமிழரின் ஈமக்காடாக இருந்ததை அறிய முடிகிறது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு மேற்கொண்ட அறிஞர்கள்


  •  1876 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் உள்ள முனைவர் ஜாகோர் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு செய்தார் .
  • அவர் அங்குக் கிடைத்த பொருள்களை பெர்லின் அருங்காட்சியத்தில் இடம்பெறச் செய்தார்.
  • 1903 - 04 ஆம் ஆண்டுகளில் அலெக்ஸாண்டர் ரீ தொடர்ந்து ஏராளமான தொல்பொருட்களைக் கண்டெடுத்தார்.
  • இவர் கண்டெடுத்த தொல்பொருள்கள் சென்னை அரசு அருங்காட்சியத்தில் உள்ளன.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்பொருள்கள்
  • 50க்கும் மேற்பட்ட வகைகளில் களிமண் பாண்டங்கள் (தரமான களிமண்ணால் வனையப்பட்டு சூளையில் வைத்து வேக வைக்கப்பட்டுள்ளன. அவை செவ்வண்ணம், கருப்பு வண்ணம் மற்றும் இரு வண்ணம் கலந்த வண்ணத்துடன் காணப்படுகின்றன).
  • இரும்பு ஆயுதங்கள்
  • குட்டையான வெட்டுவாய் பகுதி உடைய வாள்கள்
  • கைகோடாரிகள்
  • எலும்புகள்
  • மண்டை ஓடுகள்
  • பெரிய மட்பாண்டத்தினுள் சிறிய மண்கலயமும்   இருந்தன.
  • அவற்றில் ஒன்றில் நெல் உமி வைக்கப்பட்டிருந்தது.
  • அரவைக்கல்
  • இவ்வகழ்வாய்வில் 847 தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.
  • வட்டச் சில்லுகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன.
  • செம்பு, இரும்பினாலான மோதிரங்கள்,
  • கண்ணாடி மணிகள்,
  • தந்தத்தாலான மணிகள்,
  • அரிய வகை கல்மணிகள்,
  • கண்ணாடி வளையல் துண்டுகள்,
  • எலும்பு மணிகள்,
  • சுடுமண்ணாலான மணிகள், 
  • வளையல்கள்
  • துளையிடப்பட்ட கூரை ஓடுகள்
போன்றன கிடைத்துள்ளன

தொல்பொருட்களின் விவரம் அடங்கிய நூல்
  • இந்நூல் 1913 ஆம் ஆண்டு வெளிவந்தது
  • அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் சே. ஆர். எண்பர்சன் அவர்கள் தொகுத்து வெளியிட்டுள்ளார்
  • இந்நூலில் முன்னுரை ஒன்றும் உள்ளது
  • இந்நூலின் பெயர் "ஆதிச்சநல்லூர் மற்றும் பெரும் பேர் ஊர்களில் உள்ள வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்ட தொல்பொருட்களின் பட்டியல்"

ஆதிச்சநல்லூர் நகர அமைப்பு

  • ஆதிச்சநல்லூர் பறம்பின் மேற்பகுதி மூன்றடி வரை சரளைக் கற்கள்,
  • அதன் அடிப்பகுதியில் தனிக் கூறாகக் சிதைந்த படிகக் கற்பாறைகள் இருக்கிறது.
  • ஈமத்தாழிகளைப் புதைப்பதற்காகவே பாறைகளில் தனித்தனியான  உட்குடைவு செய்யப்பட்டுள்ளது. 
  • ஈமத்தாழிகள் பெரியதாக இருந்தன.
  • ஏறத்தாழ 6 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன.
  • சில 3 முதல் 12 அடி வரையிலான ஆழத்திலும் சில இடங்களில் ஒன்றன் மீது ஒன்றான அடுக்காகவும் புதைக்கப்பட்டுள்ளன.
  • வரலாற்றுக்கு முந்திய ஈமக்காடு பகுதிகளில் இது மிகப் பரந்தபட்டது ஆகும்.
  • அப்படியானால் இதற்கு எதிர் திசையில் பெருமளவு மக்கள் வாழ்ந்து இருந்த வாழ்விடப் பகுதிகள் இருந்திருக்கக்கூடும் என்பது புலப்படுகிறது.

ஆதிச்சநல்லூர் ஈமத்தாழிகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள்


  1. ஈமத் தாழிகளின் உள்ளே எலும்புகளும் சிறு சிறு மட்பாண்டங்களும், பொன், வெண்கலம், இரும்பு போன்ற உலோக கிண்ணங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.  

  2. நெற்றியிலோ கைகளிலோ கட்டப்படும் மெல்லிய பொன் தகட்டுப் பட்டங்கள் (அத்தகடு நீள்வட்ட வடிவில் உள்ளது. அத்தகட்டின் மீது முக்கோண வடிவில் கடுகு போன்ற புள்ளிகள் பொறிக்கப்பட்டிருந்தன. அதன் இருபுறங்களிலும் கயிறு அல்லது கம்பி கட்டுவதற்கான சிறுதுளை இருந்தது. இப்பட்டங்கள் சுருட்டி வைக்கும் வகையில் உள்ளன).

  3.  இரும்பு ஆயுதங்கள் (எறிவேல், ஈட்டி, குத்துவாள், அம்பு முனை ஈட்டி, மூவிலைவேல், கூரிய அம்பு முனை, கைக்கோடாரி, வாள்,  வளைந்த கத்தி, இருபுற வளைவான கொக்கித் தடி,  பிலிவாள், அம்பு முனை, வேல், கோடாரிகள், மும்முனைவேல், கேடயம்,  அரிய ஆயுதம், சிறிய உடைவாள், சிறிய ஈட்டி, செங்கோண ஈட்டி, கூம்புவாய் ஈட்டி, கூரிய வாயுள்ள ஈட்டி,  ஈட்டிப் பிடியுள்ள உள்ளீடற்ற குழாய், குழிவான விளிம்புள்ள குத்து வாள், அகன்ற வாய்ப்பரசு, நீர்வட்டக் குழிவான ஈட்டி, குழிவான இரும்புக் கைப்பிடி ஈட்டி, வளைவுகள் உள்ள வாள், சிறிய நுனியுள்ள வாயுடைய ஈட்டி, கத்தி, வளைந்த பலவகைக் கத்திகள்)

  4. பல வகையான போர்க்கருவிகள்,

  5. வேளாண் கருவிகள்

  6.  எழுத்துப் பொறிக்கப்பட்ட கருப்புச் சிவப்பு நிற மட்பாண்டங்கள்,

  7. நான்கு கால் சாடிகள்

  8.  விலங்கு உருவங்கள் பொறிக்கப்பெற்ற வெண்கலக் கிண்ணங்களும் பூக்கிண்ணங்களும் (வீட்டு விலங்குகளான எருமை, ஆடு, மாடு போன்றனவும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் உருவங்களும் காணப்படுகின்றன).

  9. வளையல்

  10. மோதிரம்,

  11. காப்பு,

  12. கடகம்

  13. கடுக்கண்

  14. மட்பாண்டங்கள் (இரும்புக் கருவியால் அழுத்தி வடிக்கப்பட்ட புள்ளி வடிவங்கள் அழகு செய்கின்றன. அடிப்பாகத்தின் நடுவே வட்டங்களும் அரை வட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன).

  15. மணிப்பாசிகள்,

  16. வெண்கலப் பாசிகள்,

  17. கழுத்து மாலைகள்

போன்றன கிடைத்துள்ளன

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மூலம் அறியப்படும் வரலாறுகள்
  1. இரும்புக்காலம் மற்றும் வரலாற்று தொடக்க காலம் என்ற இரு வகையிலான வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளது.

  2. கற்காலக் கருவிகள் வரலாற்று தொடக்க காலத்தின் சான்றுகளாக உள்ளன.

  3. இரும்பு கால வரலாற்றை அறிவதற்கு அடையாளமாக முதுமக்கள் தாழிகளும் அவற்றுடன் கூடிய ஈமப் பொருள்களும் போதிய அளவு தரவுகளாக உள்ளன.

  4.  ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் தமிழி எழுத்துகளைக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

  5. குறியீடுகளைக் கொண்ட பானை ஓடுகள் 500க்கும் மேற்பட்டு உள்ளன. 

  6. இவை அக்கால மக்களின் மொழியமைப்பை உறுதிபடுத்துகின்றன.

  7. காலத்தால் பழமையைக்குச் சான்றாக வெள்ளை வண்ணப் புள்ளிகள் இட்ட கருப்பு சிவப்பு வண்ண மட்பாண்டங்கள், கிண்ணங்கள் முதலியன சான்றுகளாகக் கிடைத்துள்ளன.


சிவகளை (தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்) அகழாய்வுகள் 


சிவகளை நாகரிகம் அமைவிடம்

  • சிவகளை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் உள்ளது
  • தூத்துக்குடியிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

சிவகளை அகழ்வாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள்

 

  • வட்டச் சில்லுகள்,
  • நுண் கற்கருவிகள்
  • கருப்பு சிவப்பு வண்ணப் பாண்டங்கள்,
  • மண் குடுவைகள்,
  • மண்ணால் செய்யப்பெற்ற பானை மூடிகள்
  • (ஆகியவற்றில் அழகிய வடிவமைப்பில் வரைய பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகள் தமிழ்ச் சமூகத்தின் பழமையை நிலைநாட்டுகின்றன).
போன்றன கிடைத்துள்ளன

சிவகளை அகழ்வாய்வு மூலம் அறியப்படும் வரலாறுகள்

  • தொன்மையான தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் ஏராளமாக இவ்வூரில் உள்ளன.
  • கற்கருவிகளும் மண்பாண்டங்களுமே கிடைக்கப்பெற்றுள்ளன.
  • மண்பாண்டங்களில் அழகிய வடிவமைப்பில் வரைய பெற்றுள்ள வெள்ளை வண்ண வேலைப்பாடுகள் காணப்பெறுகின்றன. இவை தமிழ்ச் சமூகத்தின் பழமையை நிலைநாட்டுகின்றன).
  • ஆதன் என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு கிடைக்கப்பெற்றுள்ளது. இது அக்கால மக்களின் மொழி அமைப்பை உணர்த்துகின்றன.
  • இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நெல்லினைக் கரிமப் பகுப்பாய்வு செய்ததில் இதன் காலம் கி.மு. 1155 என வரையறுக்கப்பட்டுள்ளது.
கொற்கை அகழாய்வுகள் (பொருநை ஆற்றங்கரை நாகரிகம்)

கொற்கையின் சிறப்பு

  • இடைச்சங்க காலத்தில் பாண்டியர்களின் தலைநகரமாகவும் துறைமுகமாகவும் விளங்கியது கொற்கை.
  • இங்கு 1968 - 69 காலத்தில் தமிழ்நாட்டு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இங்கு அகழாய்வு செய்யப்பட்ட பொருட்களின் காலம் கி.மு. 785 என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. 

கொற்கை அகழாய்வில் கண்டறியப் பெற்ற தொல் பொருள்கள்

  • முழுமையான சங்கு,
  • பாதி அறுக்கப்பட்ட சங்கு,
  • உடைந்து போன சங்கு வளையல்கள்
  • மேற்கத்திய நாட்டுப் பானையோடுகள்
  • வெள்ளி முத்திரைக் காசுகள்,
  • வடக்கத்திய மெருகூட்டப்பட்ட கருப்பு நிற பானையோடுகள்,
  • கங்கைச் சமவெளிப் பானையோடுகள்
போன்றன கிடைத்துள்ளன

கொற்கை அகழாய்வில் கண்டறியப் பெற்ற கட்டுமானங்கள்

  • சங்கு வளையல் செய்யப்பட்ட தொழில் கூடம்
  • அண்மையில் சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம் ஒன்று கிடைத்துள்ளது.
  • இச்செங்கற்கள் சங்க காலத்தவை எனக் கணிக்கப்பட்டுள்ளது.
  • இச்செங்கல் கட்டுமானம்  29 அடுக்குகளைக் கொண்டு  2. 35 மீ  உயரம் கொண்டுள்ளது.
  • இக்கட்டுமானத்தின் நடுவே பெரிய கொள்கலன்  ஒன்று உள்ளது. இக்கொள்கலன் தனித்துவமானதாக  உள்ளது.
  • இதன் தரைத்தளத்தில் சுக்கான் பாறைக் கற்களைக் கொண்டு அடுக்கி அதன் மீது மணல் பரப்பி அதன் மேல் செங்கல் கட்டுமானம் எழுப்பப்பட்டுள்ளது.
  • இந்தக் கட்டுமானத்தின் அருகில் துளைகளுடன் கூடிய 9 அடுக்களைக் கொண்ட வடிகட்டும் குழாய் ஒன்றும் உள்ளது.

இவைகள் அக்காலத் தொழில் நிறுவனங்கள் வழி பொருள்களை உற்பத்தி செய்தனர் என்பதை வலியுறுத்துகின்றன 


கொற்கை அகழ்வாய்வு உணர்த்தும் வரலாறுகள்

  • தொழில் நிறுவனங்கள் மூலம் பொருள்களை உற்பத்தி செய்துள்ளனர் என்பதற்குக் கண்டுபிடிக்கப் பெற்ற தொழில் கூடங்கள் சான்றாகின்றன.
  • மேற்கத்திய நாட்டுப் பானையோடுகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பிற நாடுகளுடன் வணிக தொடர்பு வைத்திருந்தனர் என்பது புலப்படுகிறது
  • கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கங்கைச் சமவெளியைச் சேர்ந்த கருப்பு வண்ணம் பூசப்பட்ட பானையோடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • வணிகத்தொடர்பு உள்நாட்டிலும் அயல்நாடுகளுடனும் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலிருந்தே நடைபெற்று வந்தன என்பது உறுதியாகிறது.
  • கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடன் வணிகத் தொடர்பு இருந்தது நிருபிக்கப்படுவதாகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் கருதுகிறார்.
  • பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் மேம்பட்ட பண்பாடு 3200 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது உறுதியாகின்றன.


தமிழ்நாட்டில் அகழாய்வு செய்யப்பெற்ற பிற இடங்கள்


  • வீராம்பட்டினம் (அரிக்கமேடு),
  • பூம்புகார்,
  • அழகன் குளம்,
  • கொற்கை, பட்டணம் (முசிறி)
  • மதுரையின் சிற்றூர்களான பரவை, அனுப்பானடி
  • 1976 ஆம் ஆண்டில் டி. கல்லுப்பட்டி
  •  கோவலன் பொட்டல் ( 1979 - 80) அழகன் குளம் (1986 - 87, 90 - 91, 92 - 93, 94 - 95,  96 - 97, 97 - 98, 2014 - 15, 2016 - 17) 
  • மாங்குளம் (2006 - 07)
  • அகழாய்வுகளில் வைகை நதியை கடலில் கடக்கும் பகுதியில் உள்ள அழகன்குளம் அகழாய்வு முக்கியத்துவம் கொண்டது.
  • அழகன்குளம் அக்கால பாண்டியர் துறைமுகமாக விளங்கியது.
  • இந்திய விடுதலைக்கு முன்பே அலெக்சாண்டர் ரீ என்பவரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டன
  • மத்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக தொல்லியல் துறைகள் இவ்விடங்களில் அகழாய்வினை மேற்கொண்டனர்.

கீழடி அகழாய்வுகள்


கீழடி அமைவிடம்

  • மதுரையிலிருந்து கிழக்கு தென்கிழக்காக 13 கி.மீ. தொலைவில் கீழடி அமைந்துள்ளது.
  • இப்பகுதியின் வடக்கில் 2 கி.மீ. தொலைவில் வைகை ஆறு உள்ளது.
  • அகரம் என்ற ஊர் கீழடியின் தொல்லியல் மேட்டில் தென்கிழக்கே அமைந்துள்ளது.
  • மேற்கே கொந்தகை என்னும் ஊர் எல்லையாக உள்ளது
  • 110 ஏக்கர் நிலப்பரப்பிற்கு மேல் தென்னந்தோப்புகளால் பாதுகாக்கப்பட்டு 9  டிகிரி 51 40 வடக்கு அட்சய ரேகைக்கும் 78 டிகிரி 11 70 கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடையே அமைந்துள்ள ஒரு தொன்மை நகரக் குடியிருப்பும் தொழிற்கூடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கீழடி அகழாய்வு நடைபெற்ற ஆண்டுகள்


  •  மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வுப் பிரிவின் பெங்களூரு பிரிவு அகழாய்வு மேற்கொண்டது
  • கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வினைத் தமிழகத் தொல்லியல் துறை 2017 - 18 ஆம் ஆண்டு மேற்கொண்டது.
  • 2018 - 19 ஆம் ஆண்டில் ஐந்தாம் கட்டமுறையான தொல்லியல் அகழாய்வானது நிறைவு பெற்றுள்ளது. 

கீழடி அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தொல்பொருட்கள்

  • நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
  • செங்கல் கட்டுமானங்கள்,
  • சுடுமண் உறை கிணறுகள்,
  • மழை நீர் வடியும் ஓடுகள் (இவைகள் இரு துளைகளுடன் விரல்களால் அழுத்திப் பள்ளம் இடப்பட்ட அமைப்பில் உள்ளன)
  • தங்க அணிகலன் பகுதிகள்,
  • உடைந்த பகுதிகள்,
  • செம்புப் பொருட்கள்,
  • இரும்புக் கருவி பாகங்கள்,
  • சுடுமண் சொக்கட்டான் காய்கள்,
  • வட்டச் சில்லுகள்,
  • சுடுமண் காதணிகள்,
  • கண்ணாடி,
  • மணிக்கற்கள்
  • பகடைக்காய்,
  • 601 வட்டச்சில்லுகள்,
  • ஆட்டக் காய்கள்
  • மட்பாண்ட ஓடுகள் (கருப்பு சிவப்பு,  கருப்பு, சிவப்பு பூச்சு மட்கலப் பகுதிகள்),
  • ரௌலட்டட்  மட்பாண்டங்கள்
  • சில அரட்டைன் ஓடுகள்
  • திமிலுள்ள காளை, பசு, எருமை, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களின் எலும்புத்துண்டு மாதிரிகள்
  • கலைமான், வெள்ளாடு, காட்டுப்பன்றி ஆகிய விலங்குகளின் எலும்புகள்
  • நூல் நூற்கப் பயன்படும் 180க்கும் மேற்பட்ட தக்களிகள், 
  • சாயமிட்ட எலும்பாலான கூரிய முனைகளைக் கொண்ட அச்சுகள்,
  • தூரிகை (20),
  • தறியில் தொங்கும் கருங்கற்கள்,
  • சுடுமண் குண்டு,
  • செம்பினாலான ஊசி,
  • சுடுமண் பாத்திரம்
  • தங்கத்திலான ஏழு ஆபரணத் துண்டுகள்,
  • செம்பு அணிகலன்கள்,
  • மதிப்பு மிக்க மணிகள்,
  • 4000க்கும் மேற்பட்ட கல்மணிகள்,
  • சீப்பு

கீழடி அகழாய்வு உணர்த்தும் வரலாற்று உண்மைகள்

  1. நான்காம் கட்ட அகழாய்வில் 5820 தொல்பொருட்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
  2. இவை பண்டைய பண்பாட்டை வெளிக்கொணர்கின்றன
  3.  மட்பாண்டங்களைச் சுடுவதற்கு முன்னர் பொறிக்கப்பட்ட நிலையில் உள்ள கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்படுகின்றன. இது அக்கால மக்களின் தொழில் நுட்ப வளர்ச்சியைக் காட்டுகின்றன.
  4. இந்த அகழாய்வில் 50க்கும் மேற்பட்ட தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் மட்கலங்களில் பொறிக்கப்பட்டுள்ளன.
  5. இப்பொருட்களின் வாயிலாகப் பண்டைய காலத்தில் தமிழர் நாகரிக வளர்ச்சி இருந்ததை அறிய முடிகிறது.
  6. இதுவரை தமிழக வரலாற்றில் வரையறுக்கப்பட்ட கருதுகோள்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ளன.
  7.  சங்க காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் கீழடியில் கிடைத்த காலக்கணிப்புகள் தமிழகத்தின் எழுத்தறிவைக் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்வதால் சங்க காலத்தின் கால வரையறையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.
  8.  கொடுமணல் பொருந்தல் ஆகிய இடங்களில் கிடைத்த தமிழ் -  பிராமி எழுத்து பொறிப்பு முறை மட்பாண்டங்களின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை இட்டு செல்கிறது.
  9. கீழடி அகழாய்வுகள் இன்னும் ஒரு நூற்றாண்டு முன்னோக்கி இட்டுச் செல்கிறது. இதுவே இந்த அகழாய்வின் சிறப்பம்சமாகும். 
  10. கி.மு.6 ஆம்  நூற்றாண்டளவில் தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியிருப்பதால் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவிலேயே தொடக்க வரலாற்றுக் காலம் (Historical phase) தொடங்கி விடுவதால் வரலாற்றுக் காலத்துக்கு முந்திய இரும்புக்காலம் கி.மு. 2000த்தில் தொடங்கிவிடுகிறது எனலாம்.
  11. சேலம் பகுதியில் மாங்காடு மற்றும் தெலுங்கனூர் பகுதியில் பெருங்கற்படைச் சின்னத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் அறிவியல் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு இரும்பின் காலம் கி.மு. 2000த்திற்கு எடுத்துச் செல்கின்றன
  12.  கீழடி அகழாய்வு கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவில் தமிழகத்தில் நகரமயமாக்கும் உருவாகிவிட்டது என்பதை உணர்த்துகிறது.
  13. வைகைக் கரையில் அமைந்துள்ள கீழடியில் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண்மையையும் கால்நடை வளர்ப்பு தொழிலையும் முக்கிய தொழிலாக் கொண்டிருந்தனர்.
  14. வேளாண்மைக்கு உதவக்கூடிய துணைத் தொழில்களின் தொழிற்கூடங்களை அமைத்துள்ளனர்.
  15. கீழடியில்  வெளிப்பட்டுள்ள செங்கல் கட்டுமானங்களில் செங்கல் இணைப்பிற்கு 97 % சுண்ணாம்புச் சாந்தினைப் பயன்படுத்தி உள்ளனர்.
  16. இக்கட்டுமானம் சங்க காலத்தில் இருந்த வளர்ச்சி அடைந்த சமூகத்தின் அடையாளமாகும்.
  17. அன்றாட தேவைகளுக்கான பானைகளைத் தயாரிக்கும் தொழிற்கூடம், நாகரிக வாழ்க்கையை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளைத் தயாரிக்கும் நெசவுக்கூடம் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளனர்.
  18. தொழிற்கூடங்களுக்கு அருகில் குடிநீர் பயன்பாட்டிற்கு உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
  19.  எளிய மக்கள் தங்களுக்குரிய பானைகளில் தங்களின் பெயர்களைத் தாங்களே தமிழி எழுத்துகளில் பொறித்துக் கொண்டனர்.
  20.  கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கரிம பகுப்பாய்வின்படி அவர்களது பண்பாட்டின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என்பது புலப்படுகிறது.
  21. இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்கம், செம்பு, தந்தம், பளிங்கு கல், கண்ணாடி, சூது பவளம் போன்றவற்றால் அணிகலன்கள் செய்து அணிந்துள்ளனர். இது அவர்களது பொருளாதாரத் தன்னிறைவைக் காட்டுகிறது.
  22.  இக்கால மக்கள் வெளியூர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உரோம நாட்டுடனும் வாணிபத் தொடர்புகள் கொண்டிருந்தனர் என்பதற்கு அப்பகுதியிலிருந்தே கொண்டுவரப்பட்ட பானைகள், மணிகள் போன்ற தொல்பொருட்கள் சான்று பகர்கின்றன.
  23. இது நகர நாகரிகத்தோடு மக்கள் வாழ்ந்திருந்தனர் எனலாம்.
  24. இச்சான்றுகள் தமிழகத்தில் நிலவிய சங்ககாலப் பண்பாட்டு வரலாற்றாய்வில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
  25. விலங்கினங்களின் எலும்புத்துண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை வேளாண்மைக்காக கால்நடைகள் வளர்க்கப்பட்டன என்பதைப் புலப்படுத்துகின்றன.
  26. விலங்குகளின் எலும்புகளில் வெட்டுக்காயம் இருந்தன. இவை உணவிற்காக விலங்குகள் பயன்படுத்தப்பட்டதை எடுத்துக்காட்டுகின்றன
  27. கீழடியில் கிடைத்த மட்பாண்டங்களில் தொழில்நுட்பம், தனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 2 ஆம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இதன் மூலம் வணிகர், தொழில்சார்ந்தோர், பயணியர் ஆகியோரிடையே நிலவிய வணிகப் பரிமாற்றங்களை அறிய முடிகிறது.
  28. இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட நெசவுப்பொருள்கள் மூலம் நெசவுத் தொழிலின் நூல் நூற்றல், பாவு அமைத்தல், தறியிலமைத்தல், நெசவு, அதன் பின் சாயமிடல் போன்ற பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை எடுத்துரைக்கின்றன.
  29. கீழடி சமூகத்தின் முதன்மை தொழில் வேளாண்மை கால்நடை வளர்ப்பு ஆகியனவாகும்

  30. இரும்புப் பொருட்கள் தயாரிப்பு, தச்சு வேலை ஆகிய தொழில்களும் நடைபெற்று வந்துள்ளன.

  31.  கீழடியில் பெண்கள் பயன்படுத்தும் அலங்காரப் பொருள்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

  32. விளையாட்டுப் பொருட்கள் மூலம் அன்றைய சமூகத்தின் வாழ்க்கை முறையையும் பொழுதுபோக்கினையும் பிரதிபலிக்கின்றன.

  33. பாண்டி விளையாட்டு விளையாடப்பட்டுள்ளன.

  34. ரௌலட்டட் பானை ஓடுகள் ரோம் நாட்டை சேர்ந்தவை எனக் கருதப்பட்டது. ஆனால் அவை இந்திய நாட்டுப் பானை வகையைச் சேர்ந்தவை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற கட்டுமானங்கள் மற்றும் பொருட்கள்

  1. கட்டுமானப் பொருட்கள் எனச் செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து,  கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறை கிணற்றின் பூச்சு ஆகியன காணமுடிகின்றது. 
  2. இதுதான் மிகவும் வலிமையான கட்டிடகலையை எடுத்துரைக்கின்றன
  3.  கீழடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டு கட்ட அகழாய்வுகளில் சிறிய அளவிலான செங்கல் கட்டுமானங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
  4. இரண்டாம் கட்ட அகழாய்வில் 13 மீட்டர் நீளமுள்ள மூன்று வரிசை கொண்ட சுவர் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
  5. இச்சுவரில் 38X 23X6 அளவு மற்றும் 38X26X6 அளவு கொண்ட இரண்டு விதமான செங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  6.  தூண்கள் நட்டு மேற்கூரை அமைக்க ஏற்படுத்தப்பட்ட துளைகள் கண்டறியப்பட்டுள்ளன.
  7. இத்தூண்கள் மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  8. அகழாய்வில் இரும்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் மரச் சட்டங்களை இரும்பு ஆணிகளால் பொருத்தி இருப்பர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
  9. ஏராளமான கூரை ஓடுகள் சரிந்து விழுந்து கிடந்ததற்கான அடையாளம் கிடைத்துள்ளது.
  10. கூரை ஓடுகளின் தலைப்பகுதியில் இரண்டு துளைகள் உள்ளன.
  11. மரச் சட்டங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மேற்கூரையின் மீது கீழிலிருந்து மேலாகச் சுடு மண்ணாலான கூரை ஓடுகள் வேயப்பட்டிருப்பதுடன் அவை கீழே விழாமல் இருக்க அத்துளைகளில் நார் அல்லது கயிறு கொண்டு கட்டியிருக்க வாய்ப்புள்ளது.
  12. மேற்கூரை மீது விழும் மழை நீர் எளிதில் கீழே வரும் வகையில் கூரை ஓடுகளில் விரலால் மிக அழுத்தி உருவாக்கப்பட்ட நீர்வடியும் பள்ளங்கள் காணப்படுகின்றன.
  13. இத்தகைய கூரை கூடுகள் அரிக்கமேடு, பூம்புகார் போன்ற அகழாய்வுகளிலும்  கிடைத்துள்ளன.
  14. இந்தக் கட்டுமான அமைப்புகள் சங்க காலத்தில் நிலவிய, வளர்ந்த சமூகத்தின் அடையாளமாகும்.
கீழடி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற உருவங்கள்

  • சுடுமண் உருவங்கள் சில கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.
  • அவை மனிதனின் கைவிரல்களால் செய்யப்பட்டுள்ளன
  • களிமண் அல்லது வண்டல் மண்ணில் தண்ணீர் சேர்த்து அழகிய சுடுமண் உருவங்களைப் படைத்துள்ளனர்
  • 13 மனித  உருவங்கள்,
  • 3 விலங்கு உருவங்கள்,
  • 600-க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள்,
  • 28 காதணிகள்
  • ஆனால் வழிபாடு தொடர்பான தொல் பொருள்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லை.
கீழடி மொழியும் எழுத்து அமைப்பும்

  •  இந்தியாவில் கிடைத்துள்ள வரி வடிவங்களில் காலத்தால் தொன்மையானது சிந்துவெளி வரிவடிவங்கள் ஆகும்.
  • இது 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
  • சிந்துவெளிப் பண்பாடு மறைந்த பின்பும் தமிழி எழுத்துகள் தோன்றியதற்கு முன்புமான இடைப்பட்ட காலத்தில் ஒரு வரி வடிவம் இருந்தது.
  • அவ்வரிவடிவம் கீறல்கள் எனப்பட்டன
  • இவை சிந்துவெளி வரிவடிவத்தின் நீட்சியாகவும் தமிழ் எழுத்துக்களின் முன்னோடியாகவும் இருக்க வேண்டும்.
  • இவற்றைப் படித்து அறிவது முழுமை பெறவில்லை.
  • தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் பாறை ஓடுகள் கிடைத்துள்ளன.
  • இலங்கையிலும் இத்தகைய குறியீடுகள் கொண்ட ஓடுகள் காணக்கிடைக்கின்றன.
  • இவை பெருங்கற் கால, இரும்புக் கால மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன.
  • கீழடியில் மட்டும் 101 பானையோடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன
  • இவை இரும்புக்காலம் தொட்டு இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எழுத்து முறையை அறிந்துள்ளனர் என்பதை உணர்த்துகின்றன.
கீழடி அகழ்வாய்வு காட்டும் வாணிகத் தொடர்பு

  •  தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை, வளைகுடா நாடுகள், எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுடன் சிறப்பாக வாணிகம் நடைபெற்றது.
  • தமிழகத்திலிருந்து முத்து, மணிக் கற்கள், துணி வகைகள், மிளகு, வாசனைப் பொருட்கள் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
  • மேலை நாடுகளில் இருந்து தங்கம், பானங்கள், நறுமணத் திரவியங்கள், குதிரை போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
  • அழகன் குளத்தில் ரோம் நாட்டைச் சேர்ந்த ரௌலட்டட் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

அகழாய்வு மூலம் கண்டறியப்பெற்ற கால வரலாறு


  • தமிழ்நாட்டில் தொடக்க வரலாற்றுக் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் தான் தொடங்கியது என்றும் தமிழ்நாட்டில் இரண்டாவது நகரமயமாதல் ஏற்படவில்லை என்றும் கருதப்பட்டு வந்தது.
  • இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள செங்கல் கட்டுமானங்கள் மற்றும் உயர் மதிப்புடைய தொல்பொருட்களின் மூலம் வைகை நதிக்கரையில் உள்ள கீழடியின் இரண்டாம் நகரமயமாதல் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது.
  • இதே காலத்தில் தான் கங்கைச் சமவெளி பகுதியிலும் நகரமயமாதல் தொடங்கியது.
  •  தமிழ் பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என அழகன் குளம், கொடுமணல், பொருந்தல் அகழாய்வு காலக்கணிப்புகளின் படி கருதப்பட்டு வந்தது.
  • ஆனால் கீழடி அகழாய்வில் கிடைத்த அறிவியல் ரீதியான காலக்கணிப்புகள் தமிழ் -  பிராமியின் காலம் மேலும் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
  •  திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் அகழாய்வில் கண்டறியப்பட்ட முதற்கட்ட பழைய கற்கால (Lower Palaeolithic) கருவிகள் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது
  • இரண்டாம் கட்ட பழைய கற்கால (Middle Palaeolithic) கருவிகள் 3,85,000 ஆண்டுகள் பழமையானது
  • இக்கற்கருவிகளைச்  காசுமோசெனிக் நியூக்லைட் என்ற இயலுலக புவிபரப்பியல் ஒளி ஆய்வு (Cosmogenic - Nuclide Burial dating Method) செய்ததில் இக்காலக் கணிப்பு முடிவுகள் பெறப்பட்டன எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • நுண்கற்காலத்தை (Microlithic / Mesolithic period) சேர்ந்த கற்காலக் கருவிகள் திருநெல்வேலி, வைகை, குண்டாறு போன்ற பகுதிகளில் கிடைக்கப் பெற்றுள்ளன.
  • புதிய கற்கால (Neolithic Culture) கருவிகள் தமிழகத்தின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் குறிப்பாகத் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் கிடைத்துள்ளன.
  • இரும்புக் காலத்தைச் சேர்ந்த சேலம் வட்டாரத்திலுள்ள மாங்காடு மற்றும் தெலுங்கனூர் ஊர்களில் உள்ள பெருங்கற்படை ஈமச்சின்னங்களிலிருந்து இரும்புக்காலம் கி.மு. 2000 எனக் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிப் பொருள்களின் கரிமகால கணக்கீடு மூலம் இதன் கால கி.மு. 9 ஆம் நூற்றாண்டு என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. 
  • எனவே அண்மைக்கால அகழாய்வுகளும் அறிவியல் முறையிலான காலக்கணிப்புகளும் தமிழ்நாட்டில் ஏறத்தாழ 15 இலட்சம் ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை உறுதிபடுத்துகின்றன
  • தற்போதைய கீழடி ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் தொடக்க வரலாற்றுக் காலமான (Early Historic Period) கி.மு. 6 ஆம் நூற்றாண்டு அளவில் மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதியாகிறது.
--------------------------------------


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி