சோழர்கள்

 


சோழர்கள்

 

  • பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது.
  •  காவிரி (பொன்னி) ஆறும், அதன் கிளை ஆறுகளும் பாய்ந்து வளம் பெருக்கின. 
  • சோழநாட்டின் பண்பாட்டிற்கு ஆறுகள் சிறப்பிடம் அளித்தன 
  • ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளத்தால்  சோழ நாட்டு மக்கள்  ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு விழாவினைக் கொண்டாடி மகிந்தனர்.
  • இவ்விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.

தோற்றமும் வரலாறும்

  • சோழப் பேரரசின் தோற்றத்தை இலங்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் போன்றவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
  • இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சம்
  • கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea),
  • அரை நூற்றாண்டு கழித்துத் தோன்றிய  தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல்
  • இவற்றுடன் கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள் ஆகியன இவர்களின் வரலாற்றினை விளக்கும் சான்றாதாரங்கள் ஆகும்

 
சோழ நாட்டின் முக்கிய நகரங்கள்

உறையூர்

  • கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக உறையூர் விளங்கியது. 
  • அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இருந்தது 
  •  காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும்.
  • தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், இன்னொரு துறைமுக நகரான நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன.
  • பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன.
  • கிறீத்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமரின் நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்

  • சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர்
  • ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது.

கங்கைகொண்ட சோழபுரம்

  • பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது.
  • 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராஜேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.

பழையாறை


  • கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராஜராஜனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது.
  • இந்த அரண்மனையில் இராஜராஜனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள்
  • இராஜராஜனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.

 

பிற நகரங்கள்

  • முதலாம் இராஜேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியுள்ளான் 
  • உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. 
  • சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.

சோழர்களின் கொடி

  • சோழர்களின் இலச்சினையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது.

சோழர்களின் மலர்

  • அவர்கள் சூடும் மலர் ஆத்தி.

இராசேந்திரனின் அயல்நாட்டு வெற்றி

  • இராசராசனால் தோற்கடிக்கப்பட்ட ஐந்தாம் மகிந்தன் தான் இழந்த ஈழத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சி எடுத்தான்.  
  • இதனால் இராசேந்திரன் இலங்கை மீது போர் தொடுக்க காரணமாயிற்று.
  •  கி.பி1017-ல் இப்போர் நடைபெற்றதாக மகாவம்சம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. 
  • இப்படையெடுப்பின் விளைவாக ஈழ நாடு முழுவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டது. 
  • பாண்டியர்களின் மணிமுடி மட்டுமின்றி ஈழ மன்னனின் மணிமுடியும் அவனது பட்டத்தரசியின் மணிமுடியும் பறித்துக் கொணரப்பட்டன. 
  • இலங்கை சோழ மண்டலங்களுள் ஒன்றாக இணைக்கப்பட்டது.

கடாரம் கொண்டமை

  • “ஆழ்கடலின் அரவணைப்பில் பாதுகாப்புப் பெற்று ஆற்றலுடன்” விளங்கிய  கடாரத்தின் மீது இராசேந்திரன் கொண்ட வெற்றி சோழர் வரலாற்றில் மட்டுமின்றித் தமிழக வரலாற்றிலும் தனிச் சிறப்பு உடையது.
  •  அவனது இந்த வெற்றியைக் குறித்து பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • மலாய் தீபகற்பத்தின் பகுதிகளாகக் கருதப்படும் ஸ்ரீவிசயம்,  மலையூர்,  மாயிருடிங்கம், இலங்காசோகம், தலைத்தக்கோலம், மாடமாலிங்கம், இலாமுரித்தேசம்,  மானக்கவாரம் ஆகிய இடங்களையும் கடாரத்துடன் சேர்த்து வெற்றி கொண்டான் இராசேந்திரன்


சோழர்களின் ஆட்சி

இராஜேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1130

கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. கி.பி 120

1030-ல் சோழ மண்டலம்

என்ற மூன்று நிலைகளில் பகுத்துக் காணலாம்

  • இடைக்காலச் சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது.
  •  சோழர்களின் அரசு முடியாட்சியாகவே இருந்தது.
  • சங்ககாலத்துச் சோழர்களுக்கும், பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர் முடியாட்சிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன.
  • இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள், அதிகாரத்திலும், ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். 
  • நிர்வாக மற்றும் செயலாக்க நடவடைக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக அதிகார அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
  • நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்ற விடயங்களில் ஆலோசனைகள் கூறுவதற்காக அமைச்சர்கள் இருந்தனர்.


 ஆட்சிமுறை

  • மன்னர் ஆட்சிமுறை தான் சோழர்கள் காலத்திலும் நிலவியது. 
  • மன்னரே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 
  • அவருக்கு உதவியாய் மன்னருடைய மக்களும், சிற்றரசர்களும் இருந்தனர்.


அரசுரிமை

  • அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. 
  • சில சந்தர்ப்பங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது.
  •  இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.


உள்ளாட்சிப் பிரிவுகள்


  • சோழப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன.
  • மண்டலங்கள் - கோட்டம், கூற்றம் அல்லது வளநாடு எனப் ரிக்கப்பட்டது
  • கூற்றம் - நாடுகள் என்ற சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன.
  • மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன.
  • அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர்.
  • மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது.
  • மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும்.
  • கோட்டங்களின் நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.

 

குடியிருப்புக்கள்

  • குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன.
  •  பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும்,
  • சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும்,
  • வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன.
  •  இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன.
  • இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன.

 

சோழர் ஆட்சி கால சமூகநிலை

பெண்டிர் நிலை


  • சமூக வாழ்வில் அனைத்து உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது.
  • பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது.
  •  அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். 
  • ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே  நடைமுறையில் இருந்து வந்தது.


உடன்கட்டை ஏறுதல்


  • கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிய குறிப்புகள்  சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது.
  • ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் பரவலாகக் காணப்பெறாமல் மிகக் குறைவாகவே நடந்தன.
  • முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
  • இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது.
  • வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது.


ஆடல் மகளிர்


  • ஆடல் மகளிர் அக்காலத்தில் தேவரடியார்கள் எனப்பட்டனர்
  • திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர்.
  • அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.

  • சோழர் காலத்தில் தேவரடியார்கள் சமூகத்தில் செல்வாக்குடன் திகழ்ந்தனர்.
  • சோழ அரசர்கள் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான தானங்களை வழங்கியுள்ளனர்.
  • சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது.
  • தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

சோழர் இலக்கியங்கள்

  • சோழர் இலக்கியங்கள் எனப்படுபவை 9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலபகுதியிலே எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.
  • சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப்பகுதியில் அந்நிய படையெடுப்பு, கலகம், குழப்பம் எதுமற்ற நிலைமை காணப்பட்டன.
  •  சைவம், வைணவம் பக்தி இயக்கங்களின் எழுச்சியும்,
  • சோழமன்னர்களின்  கலை, இலக்கியங்கள் மீதான விருப்பும்,
  • புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்ற காரணமாயிற்று.
  • பிற்காலச் சோழர்களினது ஆட்சிக்காலம் தென்னிந்திய கலை, இலக்கியங்களின் பொற்காலம் என ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
  • சோழர் காலத்தில் தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகள் தொகுக்கப்பட்டன. சமண பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன .
  •  திருத்தக்க தேவர் இயற்றிய சீவகசிந்தாமணி,
  • தோலமொழித் தேவர் இயற்றிய  சூளாமணி
  • கம்பரின் கம்பராமாயணம்
  • செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி
  • ஒட்டக்கூத்தரின் குலோத்துங்க சோழன் உலா

ஆகியனவற்றை சோழர் கால இலக்கியங்கள் எனக் குறிப்பிடலாம்.


வெளிநாட்டு வணிகம்

  • சோழர்கள் சீனா, தென்கிழக்காசியா நாடுகள் வரை கடல்கடந்த வணிகத்தை மேற்கொண்டிருந்தனர்.

கலைகள்


  • சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும்.
  • விஜயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள்
  • முதலாம் இராஜராஜனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரிய அளவுள்ளவையாக அமையவில்லை.
  •  இராஜராஜன் காலத்திலும் அவன் மகனான இராஜேந்திரன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது.
  • கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் இராஜராஜன் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.
  • சோழர் காலம் வெண்கலச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது.
  • இக் காலத்தில் சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது.
  • இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன

கல்வி

  • சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
  • கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. 
  • இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும்  இடம்பெற்றிருந்தனர் 
  • இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை.
  •  ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிற்றுநர் (apprenticeship) இருந்துள்ளனர்.

மொழி

  • சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. 
  • நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று எல்லா இடங்களிலும் தமிழ் சிறப்பிடம் பெற்றிருந்தது. 
  • சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் தமிழிலேயே அமைந்துள்ளன.
  • ஆனால் "மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".


-----------------------------------------------------------
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி