நாயக்கர் ஆட்சி

 

நாயக்கர் ஆட்சி


தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியின் தோற்றம்

              கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பாண்டியருக்கும் சோழருக்கும் பகைமை  ஏற்பட்டது. சோழன் வீரசேகரன் சந்திரசேசுர பாண்டியனை முறியடித்தான்.

              தோல்வியுற்ற பாண்டிய மன்னன் விசயநகர மன்னனான கிருஷ்ண தேவராயரின் உதவியை வேண்டினான்.  

              அம்மன்னனும் பாண்டிய மன்னனை அரசனாக்கும் நோக்கில் தனது படைத்தலைவர் நாகம் நாயக்கரை அனுப்பி வைத்தான்.  அந்த நாயக்கர் சோழனை வென்றார். ஆனால் அவன் பாண்டியனை அரசன் ஆக்காமல்   மதுரையை அவனே ஆட்சி செய்தான்.

              இதனை அறிந்த விசய நகர மன்னன் மிகவும் கோபம் அடைந்தார். நாகம்  நாயக்கரின் மகனான விசுவநாத நாயக்கரை அனுப்பி நாகம் நாயக்கரை  சிறைபிடித்து வருமாறு கட்டளையிட்டான்.

              தன் தந்தையை போரில் வென்று விசய நகரத்திற்கு அழைத்துச் சென்றார் விசுவநாத நாயக்கர்.

               இதனால் மகிழ்ச்சி அடைந்த விசயநகர மன்னன் மதுரையில் விசுவநாத நாயக்கரையே தம் பிரதிநிதியாக இருந்து பாண்டிய நாட்டை ஆளும்படி செய்தார்.

              இவ்வாறு நாயக்கர் அரசு கி.பி.1529இல் மதுரையில் தோன்றியது.

              இக்காலத்தில் தஞ்சையை ஆண்ட சோழர்களும் வலிமையற்றவர்களாக இருந்த காரணத்தால் அங்கும் கி.பி. 1532ஆம் ஆண்டில் நாயக்கர் அரசு ஏற்பட்டது.

              மதுரையில் நாயக்கர் அரசு கி.பி. 1532 முதல் 1675 வரை இருந்தது.

              செஞ்சியில் நாயக்கர் அரசு கி.பி. 1464 முதல் 1640 வரை இருந்தது.

              இவ்வாறு தமிழரசு ஒழிந்து நாயக்கர் ஆட்சி தோன்றியது

 நாயக்க மன்னர்கள் 

தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்கர் மன்னர்களின் பெயர்ப் பட்டியல்  

  1. விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 1564)
  2. முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1564 1572)  
  3. வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572-1595)
  4. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1595-1601)
  5. முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 1609)
  6. முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி. 1609 - 1623)
  7. திருமலை நாயக்கர் (கி.பி. 1623 1659)
  8. இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி. 1659)
  9. சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1659 1682)
  10. மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் (1682 - 1689)
  11. இராணி மங்கம்மாள் (கி.பி. 1689 1706)
  12. விசயரங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1706 -1732)
  13. இராணி மீனாட்சி (கி.பி. 1732 1736)

போன்றோர்கள் ஆவார்.

விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 - 1564)

              விசயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயரின் பிரதிநிதியாகத் தமிழகத்தின் தென்பகுதியை ஆளத் தொடங்கியவர்  

              சிற்றரசர்களை அடக்கி, நாட்டில் அமைதி உண்டாக்கியவர்

              தென்காசிப் பாண்டியர்களோடு நட்பு கொண்டவர்  

              வைகையின் மற்றும் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் இருந்த காடுகளை  அழித்தார்.  

              மதுரையைப் புதுப்பித்தார்

              மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விரிவாக்கினார்

              திருச்சியிலும் கோட்டை அமைத்தார்  

மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி. 1682 - 1689)

  •           1682ஆம் ஆண்டு அரியணை ஏறியவன்  
  •  உள்நாட்டு சீர்திருத்தங்களிலும், மக்கள் நலன் பாதுகாப்பதிலும் கவனம் கொண்டிருந்தார். 

  • மக்கள் மகிழ ஆட்சி செய்தான்  

 

ராணி மங்கம்மாள் (கி.பி. 1689 - 1706)

              1689ஆம் ஆண்டு அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் இறந்தபோது, அவனுடைய மனைவி முத்தம்மாள் கருவுற்றிருந்தாள்.

              ஆண் குழந்தையைப் பெற்றுப் பாட்டி மங்கம்மாளிடம் கொடுத்துவிட்டுத் தீக்குளித்து உயிர் நீத்தாள்.

              பிறந்த மூன்றாம் மாதத்தில் அக்குழந்தை விசயரங்க சொக்கநாதன் என்ற பெயரில் அரசன் ஆனான். மங்கம்மாள் தன் பேரனுக்காகப் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தார்.

 நாயக்கர்களின் ஆட்சி முறை 

அரசு முறை

              தமிழக நாயக்கர்கள் பரம்பரை அடிப்படையில் முடிசூட்டிக் கொண்டனர்  

              மூத்த மகனுக்கு அரசப் பொறுப்பு வழங்கப்பட்டது.

              நாயக்கர்கள் அமைமச்சர்கள் உதவியோடு ஆட்சி செய்தனர்.

 

நீதித்துறை  

              நீதித்துறையின் தலைவராக அரசனே பொறுப்பேற்றிருந்தார்  

               நீதி வழங்குவதில் முக்கிய அனமச்சர்களும் பொறுப்பேற்றிருந்தனர்  

 

வருவாய்

              நாயக்கர்கள் ஆட்சியில் நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. நிலங்கள் நன்செய், புன்செய் என்று பிரிக்கப்பட்டு வரிகள் விதிக்கப்பட்டன

              பஞ்ச காலத்தில் வரிகள் தள்ளுபடி செய்யப்பெற்றன.

              சொத்துவரி, வாணிக வரி, தொழில்வரி, படைக்கொடை, சமுதாயக்குழு வரி, ஏரி வரி முதலிய வரிகள் வசூலிக்கப்பட்டன  

 

படைகள்

              நாயக்கர்கள் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை முதலியவற்றை வைத்திருந்தனர்.  

              பீரங்கிப் படையும் அவர்களிடம் இருந்தது. அரேபியா, பாரசீகம் ஆகிய நாடுகளில் இருந்து குதிரைகளைக் கொண்டு வந்து குதிரைப் படையைப் பெருக்கினர்.  

 

ஆட்சிப் பிரிவுகள்

              நாடு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரை 72 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.  

              இம்முறை அக்காலத்தில் சிறப்புடன் செயல்பட்டிருந்தது.

              இம்முறையால் சோழ பாண்டியர்களின்  ஆட்சிக் காலத்தில் புகழுடன்  விளங்கிய கிராமச் சபைகள் அழிந்து போயின  

 

நாயக்கர்கள் கால சமுதாய நிலை 

சாதிப் பிரிவுகள்

              சாதிகளைப் போற்றிப் பாதுகாத்தனர்

              இதனால் சாதிகள் வேரூன்றி வளர்ந்தது  

              ஒவ்வொரு சாதி மக்களும் ஊரின் தனித்தனி பகுதிகளில் குடியிருந்தனர்  

              அக்ரகாரங்கள், கம்மாளர் தெரு, வேளாளர் தெரு, செட்டித் தெரு, பறைச்சேரி முதலியவை இருந்தன  

சமயம்

  • நாயக்கர்கள் இந்து மதக் கோவில்களுக்கு அறப்பணிகளும், திருப்பணிகளும் செய்துள்ளனர்.
  • நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் கிறித்துவம் உள்நுழையத் தொடங்கியது. இராபர்ட் டி நொபிலி, சான் -டி- பிரிட்டோ ஆகியோர் கிறித்துவ சமயத்தைத் பரப்பத் தொடங்கினர்  
  • திருமலை நாயக்கர் கிறித்துவர்களுக்குப் பல சலுகைகளை வழங்கியுள்ளனர்

 

பெண்களின் நிலை

              பெண்கள் கல்வி கற்றதாகத் தெரியவில்லை

              உயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினர்.

              ராணி மங்கம்மாளும், மீனாட்சியும் மதுரையை ஆட்சி செய்துள்ளனர்  

              கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்னட ஏறும் வழக்கம் இருந்துள்ளது.

              தேவரடியார்கள் கோவில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வி

              நாயக்கர்கள் காலத்தில் கோவில்களும், மடங்களும் கல்வியைப் பரப்பும் பணியைச் செய்தனர்

              திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அக்காலத்தில் வழக்கில் இருந்துள்ளன.

               அக்காலத்தில் பெரும்பாலும் கல்வி பார்ப்பனர்களுக்கு உரியதாகக் கருதப்பட்டது.

              தமிழ்க்கல்வி தமிழகத்து மடங்களால் போற்றி வளர்க்கப்பட்டது.

              கிறித்துவப் பாதிரியார்கள் பள்ளிகளை நிறுவிக் கல்வி பரப்பும் பணியில் ஈடுபட்டனர்  

 

கட்டிடக்கலை

 நாயக்கர்கள் காலத்தில் கட்டிடக்கலை போற்றி வளர்க்கப்பட்டது.

 சிதம்பரம், காஞ்சிபுரம் கோவில்களில் புதிதாகக் கோபுரங்கள் அமைத்தனர்

   மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பெரிதாக்கினர்  

• திருமலை நாயக்கர் கட்டிய அரண்மனை, தெப்பக்குளம் முதலியன  நாயக்கர்களின் கட்டிடக்கலையின் சிறப்பை விளக்குகின்றன  

இலக்கிய வளர்ச்சி  

நாயக்கர்கள் காலத்தில் தமிழ் இலக்கியம், சமயச் சார்புள்ளதாக வளர்ந்துள்ளது.

              வில்லி பாரதம் -  வில்லிபுத்தூர் ஆழ்வார்

              திருப்புகழ் -  அருணகிரிநாதர்

              திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதி முனிவர்

              அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர்

              பிரபுலிங்க லீலை -  சிவப்பிரகாசர்

              போன்றோரும் எழுதியுள்ளனர்  

              தாயுமானவர், குமரகுருபரர் ஆகியோரும் இக்காலத்தில் தோன்றி இலக்கியம் படைத்துள்ளனர்  

              உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு, வீரமாமுனிவர்  போன்ற பிற சமயப் புலவர்களும் தோன்றி இலக்கியம் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி