அந்நியர்கள் சிறுகதை விளக்கம்
ஆர். சூடாமணி - அந்நியர்கள்
கதாப்பாத்திரங்கள்
சவிதா,
சௌமியா,
சபிதாவின் கணவர்,
சவிதாவின் மகன் ராஜு,
சௌமியாவின் வருகை
சவிதா சௌமியா இரண்டு பேரும் உடன் பிறந்த சகோதரிகள். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் சந்திக்கிறார்கள். சிறிது காலமாக ஒருவித ரத்த சோகையால் பலவீனமுற்றிருந்த சௌமியாவை அவள் கணவர் சவிதாவின் அழைப்பின் பேரில் பம்பாயிலிருந்து அனுப்பி வைத்திருந்தார். சவிதா சௌமியாவை அழைத்து வர ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தாள். பல வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்த உணர்வுபூர்வமான சந்திப்பு அது. பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு உரையாடல் தேவையற்றதாக இருந்தது. அன்பில் இருவரும் நெகிழ்ந்திருந்தார்கள். டாக்ஸியில் இடமிருந்தும் ஒட்டி உட்கார்ந்த செயல் ஒன்றை அன்பைப் பரஸ்பரம் அறிவித்தது.
இடைவிடாத உரையாடல்
சபிதாவின் கணவர் மைத்துனியை வரவேற்று, நீ வரேன்னு சொன்னதிலிருந்து உங்க அக்காவுக்கு கையும் ஓடல காலும் ஓடல என்று கிண்டல் செய்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். இத்தனை வருஷம் ஆன மாதிரி தெரியல நரை கொஞ்சம் இருக்கு அவ்வளவுதான், என்றாள். சௌமியா கவிதாவைப் பார்த்து பரஸ்பரம் பாசம் உள்ளவர்கள் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஒன்று சேர்ந்தாலும் எவ்வளவு எளிதாகத் தொடர்ச்சியை மேற்கொண்டு விட முடிகிறது. சௌமியா சொன்னது போல் இத்தனை வருஷங்கள் ஆனதாகவே தெரியவில்லை. 11 ஆண்டுகள் இடைவெளி கணப்பொழுதில் காணாமல் போய்விட்ட மாதிரி தோன்றியது. விதவை தாய் இறந்த போது தான் அவர்கள் கடைசியாகச் சந்தித்தார்கள். அக்காவும் தங்கையும் இடைவிடாமல் உரையாடிக் கொண்டே இருந்தார்கள்.
ஒரே விதமான ரசனை
அவர்கள் இருவருக்குமே ஒத்த ருசி இருந்தது. அகலக்கரை போட்ட புடவை தான் இரண்டு பேருக்குமே பிடிக்கும். மாலை உலவுவதைவிட விடியற்காலை நடந்து விட்டு வருவது தான் இருவருக்கும் பிடிக்கும். பாதி உறக்கத்தில் கண்விழித்து நீர் அருந்தி விட்டு மறுபடி தூங்க போகும் வழக்கம் இருவருக்கும் பொதுவானது. இப்படி எத்தனையோ விஷயங்களில் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள்.
முதல் கருத்து வேறுபாடு
சவிதாவின் மூத்த மகன் 19 வயதான ராஜு எம். எஸ்சி முதலாம் ஆண்டு மாணவன் . அவன் சவிதாவிடம் கல்லூரியில் ஒரு பார்ட்டி இருப்பதால் நாளை இரவு வீட்டிற்கு வர முடியாது என்று கூறினான். சரி என்றாள் சவிதா. சௌமியா அவளை ஏறிட்டுப் பார்த்து நீ முதல் வருட மாணவன் தானே ஓவர் நைட் இருக்க வேண்டுமா என்று கேட்டாள். இருக்கணும் கட்டாயம் இல்ல சித்தி. ஆனா எனக்கு ஆசையா இருக்கு என்று சொல்லிவிட்டுப் போனான்.
அப்பொழுது சௌமியா சவிதாவிடம் இதையெல்லாம் அத்திம்பேர் அனுமதிக்கிறாரா? என்று கேட்டாள். சௌமியாக்கு அவன் இரவில் தங்குவதில் விருப்பமில்லை. இப்படி எல்லாம் வீட்டை விட்டு வெளியே தங்க ஆரம்பிக்கிறதால்தான் இந்தக் காலத்து பசங்க எல்லா பழக்கத்தையும் (கஞ்சா, குடி,கோஎட்) கற்றுக் கொள்கிறார்கள்.
அப்போது சவீதா, காலம் மாறுவதை நாம் தடுத்து நிறுத்த முடியுமா? என்று கேட்டாள். குழந்தைகளை நாம் காப்பாற்றலாமே என்று சௌமியா கூறினாள். உலகம்னா இப்படி எல்லாம் இருக்கும். தெரிஞ்சுட்டுத் தான் பசங்க வாழ்ந்து ஆகணும். அதுக்கு மேல ஒழுங்காகவோ ஒழுக்கம் கெட்டு நடந்துக்கிறது அவர்கள் கையில் இருக்கு என்று சவிதா கூறினாள். பெரியவங்களுடைய கட்டுப்பாடு அவசியம் என்றும் கூறினாள் சௌமியா. கட்டுப்பாடு அதிகபடுத்தினால் அதை மீறிக் கொண்டு போகத் தோணும் என்று கூறினாள். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை ஒரே சீராய் போய்க்கொண்டிருந்த ஒன்றில் சிறு இடறல் ஏற்பட்டது போல் உணர்ந்தார்கள். நாளை வேறு படத்திற்குப் போகலாம் என்று கூறினாள். படம் குறித்த இரு வேறுவிதமான கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் வந்தது. ஒரு படத்தில் இருக்கும் நல்லதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சபிதாவும் கெட்டதை விஷத்தை கொட்டி விட்டு பிறகு அதில் நல்லது எங்கே என்று தேடுவது முட்டாள்தனம் என்பது சௌமியாவின் விவாதம். இவ்வாறு கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தது. மறுநாள் அதிகாலை இரண்டு பேரும் வழக்கம்போல் நடை பயிற்சி செய்து வந்தார்கள்.
தொடர்ந்து கருத்து வேறுபாடு
நூலகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பத்திரிகைகள் தொடர்பாக இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்தது. மாலை இருவரும் லேடிஸ் கிளப்புக்குக் கிளம்பிச் சென்றார்கள் அங்கு சவிதா தன் சகோதரி சிறப்பாக கதை எழுதுவாள் என்று எல்லோரிடமும் பெருமையாக கூறினாள். மன்றத் தலைவி சவிதாவிடம் ஒரு ஏழை பையனைப் பற்றிக் கூறி அவனுக்கு உதவ வேண்டுமென்று கூறினார். அப்பொழுது சவிதா தன் கையில் இருந்து பத்து ரூபாயைக் கொடுத்து உதவினாள். சௌமியா ஐந்து ரூபாயைக் கொடுத்தாள்.
வீடு திரும்பும் வழியில் சவிதா பாவம் அந்தப் பையன் என்று கூறினாள். ஆனால் சௌமியா எனக்கு மட்டும் வருத்தம் இல்லாமல் இல்லை. ஆனால் இதெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் உதவியினால் சரி செய்ய முடியாது என்று கூறினாள். நமது நாட்டில் வறுமை நிரம்பாத பள்ளம், அதில் எத்தனை போட்டாலும் நிரம்பாது என்று கூறினாள். அடி இல்லாத பள்ளம் தான் போட்டு நிரம்பாதுதான் தான் ஆனால் போட்ட வரைக்கும் பிரயோஜனம் என்றாள் சவிதா. சற்று நேரம் இருவரும் மௌனமானார்கள்
பெற்றோரின் ஞாபகச் சின்னம்
அப்போதுதான் வந்திருந்த ஒரு வார இதழைப் படிப்பதற்காக அக்காவுக்கும் தம்பிக்கும் இடையில் ஓடிப் பிடித்துச் சண்டை நடந்தது. ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டிருந்தார்கள் அப்போது அது அலமாரியில் வைத்திருந்த ஜாடி கீழே விழ இருந்தது. ஓடி வந்து சவிதா அதை பிடித்துக் கொண்டாள் பாரேன் சௌமியா நம் அப்பா அம்மா கொடுத்தது நான் இதை ஒரு பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். அது இந்தக் குழந்தைகளுக்குத் தெரிய
மாட்டேங்குது என்றாள். இது உடைந்திருந்தால் எனக்கு உயிர் போனது போல இருந்திருக்கும் என்றாள். நீயும் இந்த ஜாடியைப் பத்திரமா வைத்திருப்பாய் தானே என்று கேட்டாள். வைத்திருந்தேன் மேல் ஃபிளாட் பொண்ணு அதைப் பார்த்து மிகவும் அழகா இருக்குன்னு பாராட்டினாள். அதை அவளுக்குக் கல்யாண பரிசாகக் கொடுத்துவிட்டேன் என்று சொன்னாள். சபிதா அதிர்ந்து நின்றாள். என்ன கொடுத்து விட்டாயா? அதை விட்டு பிரிய உனக்கு எப்படி மனசு வந்தது? அப்பா அம்மாவை நினைவு வைத்திருக்க நினைவு சின்னங்கள் வேணுமா என்று கேட்டாள் சௌமியா. மீண்டும் கத்தி முனையில் வினாடி இடறியது.
ஊருக்கு திரும்பும் எண்ணம்
அதற்குள் இரண்டு மாதங்கள் முடியப் போகின்றன. அடுத்து எப்போது பார்க்கலாம் என்ற ஏக்கம் இருவருக்குமே இருந்தது. நான் இல்லாமல் தன் கணவரும் குழந்தைகளும் கஷ்டப்படுவார்கள் என்பதால் விரைவில் கிளம்ப நினைத்தாள். சௌமியா இனிமேல் நாம் வருடம் ஒருமுறை கண்டிப்பாகச் சந்திக்க வேண்டும் என்று இரண்டு பேரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். ஒரு புடவையைப் பரிசாக அளித்தாள் சபிதா.
கடவுள் நம்பிக்கையில் முரண்
நான் ஊருக்குக் கிளம்பும்போது சுவாமி நமஸ்காரம் பண்ணுவது என்னோட வழக்கம் என்றாள் சௌமியா. ஆனால் இங்கே பூஜை அறை இல்லையே என்றாள் சவிதா. மனதிலேயே வேண்டிக்கோ நம்பிக்கை இருந்தால் அது போதாதா என்றாள் சவிதா. அப்போ உனக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்டாள் சௌமியா. கிளம்பும்போது எதற்கு விவாதம் சௌமியா? எனக்கு அப்படி பெரிய அபிப்பிராயம் எதுவும் இல்லை என்றாள். சௌமியாவின் கண்கள் அதிர்ச்சியில் பிதுங்கின. அவர்களுடைய குழந்தை பருவம் வந்து எத்தனை பக்தி மயமானது. அம்மா தினமும் பூஜை செய்வாள் தெய்வ நம்பிக்கை இழக்குற மாதிரி உனக்கு அப்படி என்ன அனுபவம் சவிதா என்று கேட்டாள் சௌமியா. உலகத்தின் பிரச்சினைகளை எல்லாம் பார்க்கிறப்ப இந்த விஷயம் ஒரு தலை போகிற பிரச்சினையா என்ன என்றாள். சபிதா. நீ ரொம்ப அலட்சியமா சொல்லி்விட்டாய். ஆனால் எனக்குத் தெய்வ நம்பிக்கை
இல்லை என்றால் உயிரோடவே இருக்க முடியாது என்றாள். சௌமியாவின் அதிர்ச்சி இன்னும் மாறவில்லை, அக்காவைப் பார்த்த பார்வையில் இவள் யார் என்று தோன்றியது
ஒன்றாகப் பிறந்து வளர்ந்தாலும் வளர வளர எவ்வளவு மாறுபாடு ஒவ்வொரு மனித உயிரும் தனிதான். ஒருவரை ஒருவர் தெரியும் புரியும் என்று சொல்வதெல்லாம் எத்தனை முட்டாள்தனம். எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தரையும் ஒரு புதிய புதிதாகத் தான் அறிமுகம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் அந்நியர்களைதான் அன்பு செய்து கொண்டிருக்கிறோம், உண்மைதான்.
அவர் கணவர் டாக்ஸி ரெடி என்று இருவரையும் அழைத்தார் உங்க பேச்சுக்கு ஒரு தொடரும் போட்டுட்டு வாங்க, அடுத்த சந்திப்பில் மறுபடியும் பேசலாம் என்றார் சிரித்துக் கொண்டே. இதோ வரோம் வா சௌமியா….தங்கையின் கையைப் பற்றிக் கொண்டாள். சகோதரிகள் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். கைப்பிணைப்பு விலகவில்லை ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
ஒன்றாகவே பிறந்து வளர்ந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும் வளர வளர அறிவு திறத்தாலும், சிந்தனை மாற்றத்தாலும் மனதுக்கு மனது வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கும் எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் இரண்டு பேரும் இரண்டு உலகம் தான் என்பதை இக்கதை அழகாக வெளிப்படுத்துகிறது.
..........................................................................................
கருத்துகள்
கருத்துரையிடுக