அறிவியலும் மனித வாழ்வும்
அறிவியலும் மனித வாழ்வும்
1. 1. அறிவியலும் மனித வாழ்வும் குறித்து விளக்குக.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தான் பார்த்த, கேட்ட காட்சிகளை ஆராய தொடங்கியதன் விளைவால் உருவானது அறிவியல் ஆகும். இவ்வறிவியல் துறை தற்போது பல்கிப் பெருகிச் சமுதாயத்தின் வளர்ச்சிப் படிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. மனித வாழ்வில் அறிவியல் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக விளங்கியது நெருப்பைக் கண்டுபிடித்தல் ஆகும். நெருப்பின் கண்டுபிடிப்பு படிப்படியாக அறிவியலின் வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றது எனலாம்.
நவீன
அறிவியல் மனிதரின் வாழ்வில் தொடர்ச்சியாகப் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
பண்டைக்கால சமூகங்களில் தீ, சில்லு, கல், கொம்பு ஆயுதம் என்பன மக்கள் வாழ்விற்கு உதவின.
தொடர்ந்து இடம் பெற்ற புதிய புதிய கண்டுபிடிப்புகள், பல சமுதாய மாற்றங்கட்குக் காலாக
அமைந்து மனிதனின் அன்றாட நடவடிக்கைகளுடன், தவிர்க்க முடியாதபடி பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
அறிவியலின்
பல பிரிவுகள் பல நூற்றாண்டு காலமாகக் கல்விக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு
பயிற்றுவிக்கப்படுகின்றன. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியல், உயிரியல், சமூகவியல்
ஆகிய பெரும் பிரிவுகளாக அறிவியலில் கற்பிக்கப்படுகின்றன. அறிவியலின் வளர்ச்சி கற்பித்தல் துறைகளிலும் புதிய
மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. அறிவியல் வளர்ச்சியால் இன்று மேலும் பல பல உள் பிரிவுகள்
உருவாக்கப்பட்டுக் கற்பிக்கப்படுகின்றன. ஆய்வுக்கூடங்களில்
தொடர்ந்து இடம் பெறும் ஆய்வுகள் மனிதரின் வாழ்வின் சகல அம்சங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்திய
வண்ணமே உள்ளன.
வாழ்நாள் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதன் நாள்தோறும் எண்ணற்ற செயல்களைச் செய்துகொண்டிருக்கிறான். நமது அன்றாட வாழ்வில் பல அறிவியல் உண்மைகள் காணப்படுகின்றன. மனிதன் சுவாசிப்பதன் மூலமே உடல் இயக்கம் பெறுகிறது. ரத்த சுற்றோட்டம் நடைபெறுகிறது. உடலின் எல்லா பாகங்களிற்கும் ரத்தம் கொண்டு செல்லப்படுகிறது. மனித உடலே ஒரு அறிவியல் அதிசயம். மனிதனுக்கு பசிக்கிறது உணவை எடுத்துக் கொண்டால்தான் சக்தி கிடைக்கிறது. இதனால் தான் உடல் உறுப்புக்கள் இயங்குகிறது. உடலின் நீர் மூலமே உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் தான் தாகம் எடுக்கிறது. மனிதனுடைய உடல் தொடர்ச்சியாக இயங்க முடியாமல் களைப்பானது ஏற்படுகிறது.
இதனால் அவசியமாகத் தூங்கவேண்டி ஏற்படுகிறது.
மனிதனுடைய
உடல் இயக்கம் சூழலுக்கேற்ப தன்னை இசைவாக்கம் அடைய செய்வதுடன் தன்னைப் பாதுகாக்கவும்
நோய்களின் போது எதிர்ப்பு சக்தியைத் தானே உருவாக்கிக் கொள்ளவும் செய்கிறது. மனிதன்
உணவைச் சமைத்து உண்கிறான். அதற்கு நெருப்பைக் கண்டுபிடித்தான். ஏனென்றால் பச்சையாக
உணவை உண்பதனால் கிருமிகள் உடலினுள் சென்று நோயை உண்டாக்கி விடும் என்பதால் உணவைச் சமைத்து
உண்ண ஆரம்பித்தான். இயற்கை சக்திகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பான
வாழ்விடங்களை அமைத்துக் கொண்டான். மேலும் அன்றாட
வாழ்வில் பணிச்சுமையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணச் சிந்தித்தான். அச்சிந்தனையின்
விளைவால் அறிவியல் வளர்ச்சி அடைய தொடங்கியது. மனிதன் வேலையை எளிமையாக்கப் பல வகையிலும்
முயன்று பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கினான். அன்றிலிருந்து
மனித வாழ்வின் மிக முக்கிய பயன்பாட்டுக் கருவிகள் மூலம் அறிவியல் மனித வாழ்வோடு இணைந்து
செயலாற்றத் தொடங்கியது. மனித வாழ்விலிருந்து அறிவியலைப் பிரிக்க முடியாத ஒன்றாக உருவாகி
விட்டது எனலாம்.
2. 2. அன்றாட
வாழ்வில் அறிவியலின் பயன்பாடு குறித்து எழுதுக.
முன்னுரை
நமது
அன்றாட வாழ்வில் அறிவியல் மிகவும் முக்கியமானது. நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும்
பல்வேறு கருவிகள் மூலம் அறிவியல் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
சமையல்
அறையிலிருந்து தொடங்கும் அறிவியல் அலுவலகம் வரை பயன்படுத்தும் பல பொருட்கள் இன்றைய
மனிதரின் அன்றாட வாழ்விற்கு இன்றியமையாது அமைந்துள்ளன. மக்களின் நேரத்தை மட்டும் அன்றி
பணத்தையும் மிச்சம் பிடிப்பதனால் இப் பொருட்களின் தேவை அதிகரித்துக் கொண்டே போகின்றது.
இதனால் படிப்படியாக மக்களின் நடவடிக்கைகளில் நவீன அறிவியலின் பயன்பாடு அதிகரித்துக்
கொண்டே போகின்றமை தவிர்க்க முடியாத அம்சமாக உள்ளது.
மனிதன் படிப்படியாக எந்திரங்களுக்கு அடிமையாகிச்
சோம்பேறி ஆகின்றான் என்ற கருத்தும் நிலவுகிறது.
ஒரு மனிதன் உயிர் வாழ மிக முக்கியமானவைகளாக
உணவு, உடை, உறையுள் என்ற மூன்றும் காணப்படுகின்றன. இன்றும் மூன்றிலும் அறிவியல் இன்றியமையாத
ஒன்றாக உள்ளது. அவை குறித்து இங்கு விளக்கப்படுகின்றன.
உணவு தேவையை நிவர்த்திச் செய்ய வேளாண்
அறிவியலும், உற்பத்தியைக் கணக்கிட எண்கணித அறிவிலும், உற்பத்தி பொருள்களை ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்ல போக்குவரத்து கருவிகளின் அறிவியலும், அதன் நீட்சியாக
வணிக அறிவிலும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாது மனித வாழ்வியலின் பயன்பாட்டு அறிவியலாக
உருவாகி விட்டன.
நெசவுத்தொழிலும் கட்டடத்துறையிலும் என அன்றாட வாழ்வியலில் அறிவியலின் பயன்பாடு பெருகிக் கொண்டே செல்கின்றன.
வீட்டில் அறிவியலின் பயன்பாடு
பிரஷர்
குக்கர், ஃப்ரைபன் போன்ற பல சமையல் சாதனங்கள் அறிவியல் தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டு
நம் அன்றாட வாழ்வில் சமையல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
சலவை
இயந்திரங்கள், பாத்திரங்களைக் கழுவுபவர்கள், வாக்யூம் கிளீனர்கள், ஏசி, லைட், மின்விசிறிகள்,
கிரைண்டர்கள், மிக்ஸி என அனைத்து மின்சாதனங்களும் நமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும்
அறிவியல் நுட்பங்களால் உருவாக்கப்பட்டவை.
துணி,
ஷாம்பு, கிரீம்கள் போன்ற அடிப்படை விஷயங்கள் கூட அறிவியல் தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டு
நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படுகின்றன.
மக்களின்
வாழ்க்கை முறையில் மின்சக்தியை வசப்படுத்தியதினால் கணக்கில் அடங்கா வசதிகள் ஏற்பட்டுள்ளன.
கிணற்றில்
நீர் இறைத்த மனிதன் இன்று நீர் பம்புகள், குழாய்கள் மூலம் எளிதாக நீரைப் பெறுகிறான்.
உணவு உற்பத்தியில் அறிவியலின் பயன்பாடு
மாடுகளாலும் உடல் உழைப்பாலும் பாடுபட்டு விவசாயம் செய்த மனிதன் இன்று எந்திரங்களைப் பயன்படுத்தி இலகுவாகப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுகிறான். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கண்டறிதல், விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாத்தல், நாற்றுநடுதல், அறுவடை செய்தல் என்று அனைத்து வேளாண் முறையிலும் அறிவியலின் பயன்பாடு உள்ளது.
கல்வியில் அறிவியலின் பயன்பாடு
அச்சிடும்
முறை 1454 ஆம் ஆண்டில் கூடன்பெர்க் (G.J.Gutenberg) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால்
நூல்கள் பெருமளவில் அச்சிடப்பட்டு, மக்களிடையே அறியாமை இருள் நீங்கி, அறிவு பரவ ஆரம்பித்தது.
முதலில் சீனாவில் மர அச்சு முறையில் பதிப்பித்த முறை அறிவியல் வளர்ச்சியால் இன்று பல
படிகளைத் தாண்டி முப்பரிமாண அச்சடித்தல் முறையில் நூல்கள் வெளியாகின்றன. இவற்றால் மனிதனின்
சிந்தனை விரிவு பெற்று பரந்த மனப்பான்மை கொண்டவனாக வாழ முடிகின்றது.
தற்காலத்தில் கல்வி கற்பித்தலில் தொலைக்காட்சிகள்,
இணையங்கள் என அறிவியல் கருவிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. படிப்படியாக வளர்ந்து வரும் அறிவியல் கல்விக்கான
தேவை சமுதாயத்தின் தேவையாக உள்ளது. கல்வி தளத்தில் வளரும் புதிய அணுகுமுறைகள் கொண்ட
அறிவியல் வளர்ச்சி இன்றைய வாழ்க்கை முறையில் அதிக செல்வாக்கினைச் செலுத்தும் பாங்கு
தவிர்க்க முடியாததாக உள்ளது.
இணையத்தளம் மூலம் நாளிதழ்களும் புத்தகங்களும்
மின்னூலங்களும் உருவாகி இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு கல்வி கற்கும் வாய்ப்பும்
உருவாகியிள்ளது.
போக்குவரத்துத்துறையில் அறிவியல் பயன்பாடு
நீராவிச்
சக்தியைக் கொண்டு பல பெரிய எந்திரங்களை இயக்கியதனைத் தொடர்ந்து, நிலக்கீழ் எண்ணைமூலம்
இயங்கும் இயந்திரங்கள், தரைவாகனங்கள், பறக்கும் விமானங்கள் என்பன மனிதனின் அறிவியல்
சாதனைகளாக அமைகின்றன. இந்த நவீன உலகில், போக்குவரத்து அமைப்பில் மிகக் கடுமையான மாற்றம்
காணப்படுகிறது. முன்பு சைக்கிள்கள் மற்றும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டன, கார்கள்,
பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் போன்ற வாகனங்கள், அறிவியல் தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டு,
நமது அன்றாட வாழ்வில் பயண நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளதால் ஆழமான கடல்களிலும் பயணிக்க முடிகிறது. விண்வெளி ஆராய்ச்சிகளால் 1969ம் ஆண்டு, மனிதன் சந்திரனுக்கு விண்கலனில் பயணம் செய்து வர முடிந்தது. அண்மையில் நாசா (NASA) செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தினை ஏவி அதன் மூலம் பல ஆய்வுகள் செய்ய முடிந்தது.
தகவல் தொடர்பில் அறிவியல்
1870 ஆம் ஆண்டு அலக்சாண்டர் கிரகாம்பெல் மின்கம்பி
இணைப்புக்கள் மூலம் செயல்படும் தொலைபேசியைக் கண்டறிந்தார். பின்னர் மின்குறிப்பு அலைகளை
உபயோகிக்கும் கம்பி இல்லா தொலைபேசி உருவானது. இன்றோ தொலைத் தொடர்பாடல் செயற்கை மதிகள் மூலம் செயல்படுகின்றது.
தற்போது இணையத்தில் ஒலியூடான தொலைபேசிகள் அகன்ற அலை இணைய இணைப்புக்களை வழங்குகின்றன.
மின்
அஞ்சல்கள், கணினிகள், மடிக்கணினிகள் அல்லது ஸ்மார்ட்போன்களின் மூலம் முகம் பார்த்து
பேசும் வசதி கொண்ட தொலைபேசி மூலமும் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் ஒருவரோடு ஒருவர்
தொடர்பு கொள்ளும் வசதி உருவாகி விட்டது.
உதவியுடன், நாம் நேருக்கு நேர் பேசலாம், CCTV உதவியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் வெவ்வேறு இடங்களிலிருந்து புவியியல் பகுதிகளைத் தாக்கலாம்.
வணிகத்தில் அறிவியலின் பயன்பாடு
வாழ்வில் பயன்படுத்தும் பல கருவிகள் மின்னணு (Electronics) பொறியியல் முறையில் உற்பத்தியாக்கப்படுகின்றன. அவற்றில் கைத்தொலைபேசிகள், தொலைக்காட்சித் திரைகள், வங்கி அட்டைகள் போன்ற பல பொருட்களில் மின்நுண்மங்கள் (micro chips) உபயோகிக்கப்படுகின்றன. இவை கண்டறியப் பட்டதனால் வணிகத் துறையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பொழுதுபோக்கு, போக்குவரத்து, பாதுகாப்பு, குற்றத்தடுப்பு போன்ற பல வேறு துறைகளிலும் பல பொறிகள் பயன்படுகின்றன. இவற்றினை உற்பத்தி செய்யும் வர்த்தக நிலையங்கள் பல கோடி பெறுமதியான பன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுகின்றன பலருக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத்தரங்கள் வளர வழி வகுக்கின்றன.
மருத்துவத்தில் அறிவியலின் பயன்பாடு
தீர்க்க
முடியாத நோய்களுக்கெல்லாம் நவீன முறையில் சிகிச்சைகளும் மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு
மருத்துவத்துறை பெரும் வளர்ச்சி கண்டிருக்கின்றது. குணப்படுத்த முடியாத நோய்களுக்கு
கூட மருந்துகள், ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. நோய்
வருமுன் காப்பது தலைசிறந்தது என்பதற்கு ஏற்ப பல்வேறு நோய்களுக்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற சில பொதுவான
நோய்களுக்கு ஆண்டிபயாடிக் போன்ற மருந்துகள் தினமும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன.
பொழுதுபோக்கில் அறிவியல்
தொலைக்காட்சி, வானொலி, சினிமா, விளையாட்டு போன்ற அனைத்துப் பொழுதுபோக்கு ஆதாரங்களும் அறிவியல் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையில் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
முடிவுரை
விவசாயம்,
பொருளாதாரம், கல்வி, போக்குவரத்து, விளையாட்டு, பொழுதுபோக்கு என எல்லா துறைகளிலும்
அறிவியல் மனிதனுடைய பணிகளை இலகுவாக்கிக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது தொழில்கள்
இயந்திரங்களையே அதிகம் சார்ந்துள்ளது. மனிதனின் வேலையை இயந்திரங்கள் எடுத்துக் கொள்கின்றன.
உற்பத்தி செலவு குறைகிறது, அதேசமயம் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது. சமையல், உடை,
தோட்டம், மறுசுழற்சி என நம் வாழ்வின் ஒவ்வொன்றிலும் அறிவியல் இயங்குகிறது. இது தினசரி
வானிலை கண்டறியவும், அறிக்கை செய்யவும், வரைபடங்களை உருவாக்கவும், அன்றாட பிரச்சனைகளை
தீர்க்கவும் பயன்படுகிறது. விஞ்ஞானம் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது. இவ்வுலகம்
இயந்திரங்களால் நிறைந்துள்ளது. அறிவியலின் உதவியால் இது சாத்தியமானது எனலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக