இணைய இதழ்கள்



இணையத் தமிழ் பயன்பாடு

இணைய இதழ்கள் குறித்து விளக்குக.

முன்னுரை

இணையத்தின் வளர்ச்சியால் தமிழஞர்களின் சிந்தனைகளும் இணையத்தில் இடம்பெற ஆரம்பித்தன. அவற்றில் ஒன்றுதான் இணைய இதழாகும். இணையத்தில் மட்டுமே இடம் பெறும் இதழ்களை இணைய இதழ்கள் என்று குறிப்பிட வேண்டும். தற்காலத்தில் தமிழ் நாளிதழ்கள், தமிழ் கிழமை இதழ்கள் அனைத்தும் இணையத்தில் காணப்பெறுகின்றன.  இவற்றை இணைய இதழ்கள் எனக் கூற இயலாது.  இணையத்தில் மட்டுமே செய்திகளைத் தருகின்ற இதழ்களை இணைய இதழ்கள் எனலாம். அவை குறித்து இங்குக் குறிப்பிடப்பெறுகின்றன.

இணைய இதழ்கள் இணையதளம், வலைப்பதிவு, வலைவாசல், செய்திக் கோர்வைத் தளம், சங்கம் அல்லது அமைப்பு சார் தளம், தனிப்பட்டோர் தளம், தகவல் தளம், இணைய நூல், இணையக் குழு ஆகியவற்றில் இருந்து சில முக்கிய வழிகளில் வேறுபட்டு நிற்கின்றன.

தமிழ் இணைய இதழ்கள்

தமிழ் இணைய இதழ்களாகக் குறிப்பிடத்தக்கன தமிழ்ஆதர்ஸ்.காம், திண்ணை, பதிவுகள், முத்துக்கமலம், வரலாறு.காம், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம், மெளவல் செய்திகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

பதிவுகள், அப்பால் தமிழ், ஊடறு, லும்பினி, நிலாச்சாரல், தமிழோவியம், தமிழமுதம், நெய்தல், வார்ப்பு, புகலி, ஈழம்.நெட், தூ, இனி ஆகியவை புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் இணைய இதழ்கள் ஆகும்.

தமிழ் சினிமா

இவ்விதழ் ஆசிரியர் மா. ஆண்டோ பீட்டர்.

1992-93 ஆண்டுகளில் எஸ்.சி. தமிழ் இலக்கிய மன்றம்   என்று ஒரு மின்னிதழை நடத்தியது.

திண்ணை இதழ்

இவ்விதழ் மிகச் சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. இது வாரம் ஒருமுறை தன் பக்கத்தை மாற்றி அமைக்கிறது. பல இலக்கியச் செய்திகள் இதில் இடம் பெறுகின்றன.

வார்ப்பு இதழ் 

இவ்விதழில் கவிதைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.  மேலும் இவ்விதழில் கவிதை நூல்களின் விமர்சனங்கள், நிகழ்வுகளின் அறிவிப்புகள் போன்றனவும்  இடம் பெறுகின்றன.

மெளவல் செய்திகள்

இந்த இணைய இதழ் அன்றாடம் புதிய செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது. செய்திகள், தமிழகம், இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு என்ற தலைப்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன. ஆசிரியர் பக்கத்தில் இதுவரை 300க்கு மேலான அரிய கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

முத்துக்கமலம்

இது வாரத்திற்கு இருமுறை வெளிவரும் இணைய இதழாகும். இவ்விதழில் அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளன.

நிலாச்சாரல்

இலண்டனிலிருந்து மே 18, 2001 ஆம் தேதியில் தொடங்கப்பட்ட இந்த இணைய இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவருகிறது.  இந்த இதழில் கதை, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், சுவடுகள், நகைச்சுவை, சுயமுன்னேற்றம், அரசியல், அறிவியல், பூஞ்சிட்டு, இலக்கியம், திரைச்சாரல், ஜோதிடம், தொடர்கள், கைமணம், கைமருந்து, நேர்காணல், தமிழாய்வு, மாணவர் சோலை எனும் தலைப்புகளில் படைப்புகள் தொகுக்கப்படுகின்றன. இந்த இதழ் தமிழ் ஆங்கிலம் என்னும் இரு  மொழியிலும் வெளியிடப்படுகின்றன.

முடிவுரை

    இந்த இணைய இதழ்களும் அச்சு இதழ்களைப் போலவே நாள், கிழமை, மாதமிருமுறை, மாதம் என்கிற அது வெளியாகும் கால அளவு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி புதுப்பிக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இணைய இதழ்களில் படைப்புகளின் வரவிற்குத் தகுந்தவாறு புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு இணையங்கள் வாயிலாக இதழ்களைத் தொடங்கித் தமிழை வளர்த்து வருகின்றனர்.

-------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி