செயற்கை நுண்ணறிவியல் (Artificial Intelligence - Al)

                 


செயற்கை நுண்ணறிவியல்
(Artificial Intelligence - Al)

1. செயற்கை நுண்ணறிவு விளக்குக.

 

செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் (Artificial intelligence) மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு படைப்பாக்க திறன் ஆகும். இந்தப் படைப்பாக்க திறனை இயந்திரங்கள் மூலம் உருவாக்க முடியுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு ஆகும். கணினி அறிவியலின் பரந்த கிளையாகச் செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது.

மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கச் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது. இச் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல், சிந்தித்தல், எண்ணங்களைக் கற்றுக் கொள்ளுதல் எனப் பல்வேறு நுண்ணறிவு திறங்களை உள்ளடக்கியுள்ளது. நுண்ணறிவுப் பயன்பாடுகளில் மேம்பட்ட வலைத் தேடுபொறிகள் (. கா. கூகுள் தேடல்), பரிந்துரை அமைப்புகள், (யூடியூப், அமேசான், நெட்பிளிக்சு) மனித பேச்சைப் புரிந்துகொள்வது (சிரி, அலெக்சா போன்றவை), தானோட்டிச் சீருந்துகள், (.கா, வேமோ குழும ஊர்திகள்), பொது அறிதிறன் உருவாக்கும் ஆக்கக் கருவிகள் (அரட்டைGPT, செயற்கை அறிதிறன் கலை), உயர்நிலை ஆட்ட நுட்ப விளையாட்டுகளில் போட்டியிடல் (சதுரங்கம், Go) போன்றவை உள்ளடங்கும்.

தொழில், வணிகம் மற்றும் அன்றாடவாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பெரிதும் பயன்படுகின்றன.

 

2. செயற்கை நுண்ணறிவின் வரலாறு குறித்து எழுதுக.

செயற்கை நுண்ணறிவு 1956 ஆம் ஆண்டில் ஒரு கல்வித் துறையாக அமெரிக்காவின் டார்த்மவுத் கல்லூரியின் வளாகத்தில் நிறுவப்பட்டது. இந்தத் துறை பலவிதமான ஏமாற்றமும் நிதி இழப்பும் அடைந்தது. இதில் கலந்துகொண்டவர்கள் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியின் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு மனிதனைப் போன்ற புத்திசாலித்தனமான எந்திரம் உருவாக ஒரு தலைமுறைக்கு மேல் ஆகாது எனக் கருதினர்.

அமெரிக்கக் கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்த்தி டார்ட்மவுத் கணினி தொடர்பான மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு என்னும் வார்த்தையை உருவாக்கினார். இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.

1943-ஆம் ஆண்டில் வாரன் மெர்கல்லோக் மற்றும் வால்டர் பீட்ஸ் செயற்கை நியூரான்களின் மாதிரியை முன்மொழிந்தனர். ஆள்டூரிங்கால் 1950 ஆம் ஆண்டில் கணினி இயந்திரம் மற்றும் நுண்ணறிவு என்னும் நூலை வெளியிட்டார். இயந்திரங்களில் உள்ள நுண்ணறிவைத் தீர்மானிக்கும் சோதனை டூரிங் டெஸ்டை இந்நூல் அறிமுகப்படுத்தியது.

1972-ஆம் ஆண்டில் முழு அளவிலான முதல் அறிவார்ந்த உருவ ரோபோ WABO ஜப்பானில் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டில் ஐ.பி.எம். பீப் ப்ளு என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி, உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவைத் தோற்கடித்து உலக செஸ் சாம்பியனைத் தோற்கடித்த முதல் கணினி ஆனது.

2006 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு வணிக உலகின் செயல்பாட்டிற்கு வந்தது. உலகின் முன்னணி நிறுவனங்களான Facebook, Twitter மற்றும் Netflix ஆகியனவும் தங்கள் பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கின.

 

3. செயற்கை நுண்ணறிவின் வகைகள் குறித்து எழுதுக?

செயற்கை நுண்ணறிவைப் பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவையாவன, 1. General artificial intelligence, 2. Narrow artificial intelligence

General artificial intelligence

 இயந்திரங்களும் மனிதர்களைப் போலவே எல்லா வகையிலும் யோசித்து செயல்படக்கூடிய வகையாகும். இது அதிக அளவில் வளர்ச்சிப் பெறவில்லை எனினும் வரக்கூடிய காலங்களில் துரிதமாக வளர்ச்சி அடையலாம்.

Narrow artificial intelligence

ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் இயந்திரங்கள் யோசித்து செயல்படுவதாக உருவாக்கப்படுவது இவ்வகையில் அடங்கும். இவ்வகை இயந்திரங்கள் உலகில் அதிகமாகப் பயன்பாட்டில் இருப்பதனை காணலாம்.

செயற்கை நுண்ணறிவு என்பது தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நிகழ்த்தும் ஒரு யூகமாகவே காணப்படுகின்றது. இது தன்னிச்சையாக இயங்குகின்றது என்றாலும் மனிதர்களின் மேற்பார்வையில் தான் இயங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஹிண்ட் (Arend Hintes) என்பவர் செயற்கை நுண்ணறிவினைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார். அவையாவன, 1. எதிர்வினை இயந்திரங்கள் வகை, 2. வரையறுக்கப்பட்ட நினைவக வகை, 3. மனதின் கோட்பாட்டு வகை, 4. தன் விழிப்புணர்வு வகை என்பனவாகும்.

 

எதிர்வினை இயந்திரங்கள்

எதிர்வினை இயந்திரம் என்பது சிக்கலான கணிதச் சிக்கல்கள் மற்றும் இயக்கக்கூறுகளுக்கான தீர்வுகளை வழங்கும் ஒரு கருவியாகும். இது பொதுவாக கணிதம், இயற்பியல் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது மென்பொருள் செயலிகள் அல்லது வன்பொருள் கருவிகள் வடிவில் இருக்கும், பொதுவாக எண்கள் மற்றும் அளவீடுகளைப் பயன்படுத்திச் சரியான மதிப்பீடுகளை வழங்குகிறது.

வரையறுக்கப்பட்ட நினைவக வகை

வரையறுக்கப்பட்ட நினைவகம் (Limited Memory) என்பது ஏற்கனவே உள்ள தரவுகளின் தற்காலிக சேமிப்பாகும். செயற்கை நுண்ணறிவியல் அமைப்புகள் நிகழ்வுகளுக்காக கடந்த கால அனுபவங்களைத் தெரிவிக்கும் திறன் கொண்டவை. ஓட்டுநர் இல்லாத தானியங்கிக் கார்கள் முடிவெடுக்கும் அமைப்புகளைக் கொண்டுள்ளன.

மனதின் கோட்பாட்டு வகை

மனதின் கோட்பாடுகள் என்பது மனித மனசு, அறிவு, உணர்வுகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் சில அறிவியல் மற்றும் தத்துவ கோட்பாடுகள் ஆகும்.

தன் விழிப்புணர்வு வகை

இது செயற்கை நுண்ணறிவின் மிக உயர்ந்த புதுமையான நிலை. இத்தகைய அமைப்புகள் தன் விழிப்புணர்வைக் கொண்டுள்ளது. தன் விழிப்புணர்வு என்பது அந்தரங்கமான மனத்தைக் குறிப்பது. இது சொந்த சிந்தனை, உணர்வுகளை அறிந்து கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்க உதவுகிறது. செயற்கை நுண்ணறிவில் இது மிகவும் சவாலான பகுதி. AI என்னும் கருவிகள் நினைவிற்காக, தன் விழிப்புணர்வு பெற முடியாது. பொதுவாக, வேறு பொதுவான செயலாக்க முயற்சிகளையும் அது ஏற்கிறது.

 

4. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள் குறித்துக் கட்டுரை எழுதுக.

 

நாம் ஓர் இயக்கத்திற்குச் சில பணிகளையோ, செயல்களையோ செய்து முடிக்க வேண்டுமென்று தொழில்நுட்பரீதியில் கட்டளையிட்டால், அந்த இயந்திரம் குறித்த நேரத்தில் கொடுத்த வேலையை செய்து முடிக்கும். இந்தச் செயற்கை நுண்ணறிவு பல துறைகளிலும் பயன்பட்டு மனிதனின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. விவசாயத் துறை, சமூக ஊடகத் துறை, விளையாட்டுத் துறை, தொழில் துறை, கணினித் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை குறித்து விளக்கப்படுகின்றன.

விவசாயத் துறை

விவசாயத்தில் மனித உழைப்பை மிச்சப்படுத்தும் வகையில் விவசாய ரோபோக்கள் மூலம் விதைகள் நடுதல், அறுவடை செய்தல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, மண் பகுப்பாய்வு போன்ற விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியும்.  

இயற்கை நேரியல் (Crop Monitoring):

மேல நகர்வு (Drones) மற்றும் செயற்கை சாதனங்கள் பயிர்களின் வளர்ச்சியை கண்காணிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் புலனாய்வு (Sensors) மூலம் நிலநடுக்கத்தை அறிந்து கொள்ள உதவுகிறது.

தானியங்கி கருவிகள்

விளைநிலங்களில் வேலை செய்தல், விதை விதைத்தல், நெல் நடுதல்,  புதைத்தல் போன்ற பணிகளில் உதவுகின்றன. ரோபோடிக் கைநிறுவனங்கள் (Robotic Grippers) பயிர்களுக்குப் பல்வேறு வகைகளில் பயன்படுகின்றன.

நுண்ணறிவு நில அளவீடுகள் (Precision Agriculture)

நிலத்தின் அமைப்பு, நிலத்தில் உள்ளீர் மற்றும் மண்ணின் சத்துக்கள் பற்றி அறிய பயன்படுத்தப்படுகின்றன.

துணைநிலை தடுப்புகள் (Predictive Analytics)

பயிர்களின் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் பற்றி முன்னெச்சரிக்கை செய்யக்கூடிய அவசர எச்சரிக்கை கருவிகளாக இவை பயன்படுகின்றன. நிலத்தின் வளங்களைப் புதுப்பிக்கவும் வழிகாட்டுகின்றன.

மண் வளம் (Soil Health Monitoring)

மண்ணின் தன்மைகளை அறிந்து நிலத்தின் சுகாதார நிலையைக் காப்பதில் செயற்கை நுண்ணறிவு பெரிதும் பங்காற்றுகிறது.

தொழில்நுட்பவியல் (Automated Machinery)

தானியங்கி டிராக்டர்கள், தானியங்கி அறுவடை கருவிகள் போன்ற விவசாய உபகரணங்கள் மூலம் தொழிலை எளிமையாக்குகிறது.

விளையாட்டுத் துறை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விளையாட்டு உலகிலும் பெரிதும் பயன்படுகிறது. ஆட்டக்காரர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஏ.. தொழில்நுட்பம் அதிக அளவில் உதவுகிறது.  தர்க்கரீதியாகச் சிந்திக்க வேண்டிய சதுரங்கம் போன்றவற்றிலும் செயற்கை நுண்ணறிவு பரவலாகப் பயன்படுத்த வருகிறது. விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் பயன்படுகிறது.

மருத்துவத்துறை

நோய் கண்டறிதல், சிகிச்சை நெறிமுறை மேம்பாடு, மருந்து மேம்பாடு,  தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம், நோயாளி கண்காணிப்பு மற்றும் கவனிப்பு போன்ற நடைமுறைகளுக்கு AI திட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன . [ 9 ] ரேடியோகிராஃப்கள் கதிரியக்கத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

அறுவைச் சிகிச்சையிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு சிறந்து வளர்ந்து வருகிறது.

சமூக ஊடகத்துறை

 

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் முதலான பல்வேறு சமூக ஊடக வலைத்தளங்கள், பல்வேறு கூறுகளைப் பயனர்களுக்கு வழங்குகின்றன. பயனர் ஆர்வம் மற்றும் தேடல் வரலாற்றின்படி ட்வீட்களைப் பரிந்துரைக்க ட்விட்டர் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.

கல்வித் துறை

கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஆழமானது. கற்றல் கற்பித்தலில் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. .. பள்ளிகளில் மாணவர்களின் பலம், பலவீனத்தைக் கண்டறிந்து எந்தப் பாடத்தில் அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். அப்பயிற்சி எந்த முறையில் அளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கற்றல் வழிமுறைகளைச் செயற்கை நுண்ணறிவு எடுத்துரைக்கிறது.   செயற்கை நுண்ணறிவு ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் படிக்க உதவுகிறது.

சட்ஜி.பி.டி. செயற்கை நுண்ணறிவு தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளில் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தித் தேவையான பதில்களைத் தருகிறது. BARD செயற்கை நுண்ணறிவு கூகுளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று மெட்டா நிறுவனம் "லாமா-2" செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது. ராசாப்ட் (Microsoft) உடன் கூட்டுச் சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் வணிகம் இயக்கப் பயன்பாட்டிற்காக இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளது. உள்ளீடுகளில் இருந்து பொருள் பதிந்த பல தகவல்களைப் புரிந்துகொள்ளவும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் டிஜிட்டல் படங்கள், வீடியோ மற்றும் பிற கணினி அமைப்பு மூலம் கற்றலை எளிமையாக்குகிறது. ஆடியோ வடிவில் வார்த்தைகளை உச்சரிக்கவும், உரையாடவும் கற்றுத் தருகிறது.  

தொழில் துறை

 

செயற்கை நுண்ணறிவின் மூலம் உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதிக எண்ணிக்கையிலான தயாரிப்புகளின் உற்பத்தி செயல்முறை மனிதத் தலையீடு இல்லாமல் நடைபெறும். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைச் சாதனங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம் வணிகச் செயல்முறைகளைத் தானியங்கு செயல்முறை மூலம் செய்ய முடியும். உற்பத்தித் தளங்களும் முழு தானியங்கி முறையில் இயங்கி வருகின்றன. ARISE, AWAKE நுண்ணறிவு இன்னும் பல்வேறு துறைகளிலும் பயன்பட்டு வருகிறது. இராணுவத் துறை, வாகனத் துறை, கலைத் துறை, சட்டத்துறை, அரசுத் துறை, நிதித் துறை, தணிக்கைத் துறை, வீட்டு வேலைகள் போன்றவற்றிலும் செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத் தொடர்புகளையும் வடிவமைக்கிறது. எலெக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள் போன்றன தனி நபர்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்குவதற்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவியலாக உள்ளன.

 தீமைகள்

செயற்கை நுண்ணறிவைச் சார்ந்து மனிதர்கள் இருக்க நேர்ந்தால் உபயோகப்படாத உடல் உறுப்புகள் சிறுத்துப் போவதுபோல் மூளை சுருக்கம் ஏற்பட்டு பலவிதமான நாம்பியல், மனநலப் பாதிப்புகள் ஏற்படும்.  மூளையின் செயல்பாடுகளான உணர்ச்சி வயப்படுதல், நினைவுத்திறன் போன்ற மூளையின் செயல்பாடுகளைத் திறன்பேசிக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததன் விளைவைப் பள்ளிகளிலும், மனநல மருத்துவமனைகளிலும் காணமுடிகிறது.

செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு மிகவும் விலை உயர்ந்தது. இத்தொழில்நுட்பம் நம்மைச் சோம்பேறி ஆக்குகிறது.

சமூகத்திலும் அரசியல் களத்திலும் பெரும் குழப்பங்களை உருவாக்கும் வகையில் பொய்ச் செய்திகளை உருவாக்க முடியும். Al face swapping app மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நுண்ணறிவு நுட்பமாகும். இது வீடியோக்கள், படங்கள் போன்றவற்றை அச்சு அசலாக உண்மையாக இருப்பது போன்று தோற்றத்தில் உருவாக்குகின்றன. இதன்மூலம் ஆள்மாறாட்டம் செய்வதன் மூலம் அதிக அளவில் மோசடிகளை உருவாக்க முடியும். மோசடி நபர்கள் Al face swap தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆபாசப் படங்களை உருவாக்கி உளவியல் சிக்கல்களை உருவாக்கவும் பணம் மோசடி செய்யவும் முடியும்.

இளைஞர்களிடையே தனிமை தொற்றுநோயை ஏற்படுத்தும் தீங்கும் பெருகி வருகிறது. Deep fake தொழில்நுட்பம் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல் நாடுகளின் தலைவர்கள், அரசியல்வாதிகள் வரை அவர்களின் உருவத்தை, குரலைப் பயன்படுத்திச் சமூகத்தில் சண்டையை, கலவரத்தை உருவாக்கிப் பெரிய போரினையே ஏற்படுத்தும் ஆபத்தினையும் உருவாக்கலாம்

                            ---------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி