இணைய தளங்கள்


 1. இணைய தளங்கள் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டினை விவரிக்க.

முன்னுரை

தமிழ்மொழியில் உள்ள இலக்கியம், இலக்கணம், அகராதிகள் போன்றவற்றின் செய்திகளைப் பெறவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் இணையத்தில் வசதிகள் காணப்படுகின்றன. அவற்றில் தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் மரபு அறக்கட்டளை, எண்ணிம நூலகம், மின்னகராதி, வலைப்பூக்கள், செய்தியோடைத் திரட்டி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

 தமிழ் விக்கிப்பீடியா

     அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட விக்கிப்பீடியா பவுண்டேசன்  இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். விக்கிப்பீடியா என்பது இணையத்தில் இயங்குவதும், கூட்டு முயற்சியில் உருவாக்கப்படுவதுமான கட்டற்ற பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டம் ஆகும்.

உலகெங்கும் உருவாகும் அறிவுத்தகவல்களைத் திரட்டி எவரும் இலவசமாகப் பெறும்வகையில் காப்புரிமைகள் போன்ற கட்டுப்பாடுகள் இன்றி தகவல்களை வழங்குவது விக்கிப்பீடியாத் திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும்.

இதற்காக இலட்சக்கணக்கானோர் ஒன்றுகூடி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  விக்கிப்பீடியாக்களில் யார் வேண்டுமானாலும் புதிய கட்டுரைகளை எழுதவும், ஏற்கெனவே இருக்கும் கட்டுரைகளில் புதிய பகுதிகளைச் சேர்க்கவும் செய்யலாம்.

தமிழ் விக்கிப்பீடியா, உலகளாவிய விக்கிப்பீடியாத் திட்டத்தின் ஒரு 2003-ஆம் ஆண்டில் தொடங்கியது.  இதுவரை 13,800-க்கு மேற்பட்டவர்களைப் பயனாளர்களாகக் கொண்டிருக்கின்றது.

 தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation www.tamilheritage.org)

     இவ்வமைப்பு ஓர் இலாப நோக்கமற்ற இணைய அமைப்பாகும்.  தமிழ் பேசும் மக்களின் 100 ஆண்டுகளுக்கும் மேலான எண்ணிம ஆவணங்களை இணையதளத்தில்  கிடைக்கச் செய்வது தமிழ்மரபு அறக்கட்டளையின் உலகளாவிய நோக்கமாகும். உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதே அறக்கட்டளையின் நோக்கமாகும்.

தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, மரபுகளைச் சேகரித்தல், பாதுகாத்தல், எண்ணிம மயமாக்குதல் போன்ற நோக்கங்களில் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.  வானியல், மருத்துவம், பொறியியல், கணிதம், வேதியியல், பழங்கால அரிய புத்தகங்கள், பனை ஓலைக் கையெழுத்துப் பிரதிகள்,  தமிழ் மரபுச் சின்னங்களின் சில சேகரிப்புகள் போன்றவற்றை எண்ணிம முறையில் இணைய குறுவட்டுகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றன.

 மின்நூலகம் (Digital Library)

மின்நூலகம் என்பது எண்ணிம அல்லது மின்னியல் முறையில் ஆவணங்கள்  மற்றும் தகவல் தொகுப்புகளைச் சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கம் இணையதளமாகும்.

எண்ணிம நூலகம் என்பது ஒரு தகவல் மீட்டெடுப்பு ஒருங்கியம் ஆகும். மிக விரிவான எண்ணிம உள்ளடக்கங்களைச் சேகரித்துப் பாதுகாத்து அதன் பயனாளர்களுக்கு அத்தொகுப்புகளைத் தேவைப்படுவோர்க்கு கொள்கை விதிகளின்படி அளிப்பது எண்ணிம நூலகம் ஆகும்.

கார்னெல் பல்கலைக்கழகம் (Karmel University), உலக மின் நூலகம் (World Digital Library), தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மின் நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (Roja Muthiah Research Library), சென்னை மின் நூலகம் (Chennai Library), நூலகம் நெட் (Noolagam net), இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (Central Institute of Indian Language), மதுரைத் திட்டம் (Project Madurai),  தமிழ் இணையக் கல்விக் கழகம் (www.tamilvu.org), தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org) போன்றவற்றை மின் நூலகத்திற்குச் சான்றாகக் கூறலாம்.

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ஆங்கிலம் தமிழ் சிங்களம் மின்னகராதி, தனித்தமிழகராதிக் களஞ்சியம் ஆகியவை மின்னகராதிப் பட்டியல்களுள் சிலவாகும்.

வலைப்பூக்கள்

வலைப்பதிவு அல்லது வலைப்பூ (blog) என்பது கடைசிப் பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்துவதற்கும் எனச் சிறப்பாக அமைக்கப்பட்ட தனிப்பட்ட வலைத்தளமாகும்.

வலைப்பூ வசதிக்கான சேவையை முதன்முதலாக 1996-ஆம் ஆண்டில் எக்ஸன்யா எனும் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. தமிழில் முதல் வலைப்பூ உருவாக்கியவர் கார்த்திகேயன் இராமசாமி அவர்களாவார். தமிழ் எழுத்துருக்கள் பிரச்சனை இருந்ததால் வலைப்பூக்களின் சற்றுக் குறைவாகவே இருந்தது. 2000-ஆண்டிலிருந்து 2005 ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் தோன்றியிருந்தன.

வலைப்பூக்களின் வருகையால் தமிழ்மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களிடையே அதிக அளவில் பரவி வருகின்றன. தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் பெருகியுள்ளனர். இதனால் தமிழின் வளம் உயர்ந்துள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்பும் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்துகளைப் பகிர முடிகிறது. தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளி வருகின்றன. இது தமிழ் ஆய்விற்குப் பல வழிகளில் பயன்படுகின்றன. எதைத் தேடினாலும் தேடிக்கொடுப்பதில் விக்கிப்பீடியாவிற்கு அடுத்து வலைப்பூக்கள் இடம் பெற்று தமிழிற்கு அரிய தொண்டினை ஆற்றி வருகிறது.  

செய்தியோடைத் திரட்டி

இன்றைய நாள்களில் வலைக்குறிப்புகள் அதிகமாகி வருகின்ற காரணத்தினால்  புதிதாய் யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பதை நேரத்தை விரயப்படுத்தாமல்  தெரிந்து கொள்ள செய்தியோடைத் திரட்டி பயன்படுகிறது. Blogger-இல் இப்போது இச்சேவை செய்து தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு நாம் பிறரது தளங்களைக் கண்காணிக்கலாம். தனி நபர்களின் செய்தியோடைத் திரட்டிகளை வைத்துக்கொண்டு தாம் விரும்பும் பிறரின் ஓடைகளை இணைத்துக் கொள்ளலாம். அந்தத் திரட்டிகள் News Monster போன்றும் Blog lines போன்றும் இருக்கலாம்.

அயலக இணைய தளங்கள் (Tamil Digital Library Websites)

www.tamil.net/projectmadurai/ http://www.edac.in/htmlihportal/index.asp, tamilheritage.org/; மத்திய மொழிகள் பயிற்சி மையம், மைசூர் புதுவை பிரெஞ்சு மொழிப் பயிற்சி மையம் http://www.ifpindia.org e-catalogue-of-the-IFP-Library-is-now-online+htm, http://www.library.cmu.edu/Libraries/MBP_FAQ.html Gemaur http:bharani.dli.ernet.in.tadilnet/rmrl.html, www.ciil-classictama

தமிழ் இணையதளங்கள்

www.tamilnux.com; www.tamil.com; www.tamilopenoffice.com, www change.com, www.tamilworld.com; www.tamillite.com, www.tamil.com,  gradutes.com/en.wikipedia.org/wiki/Tamil language, www.tamilgroup hindicomarch.com, www.taminatham.com www.tam/book

தமிழ்ப் படைப்புத் தளங்கள்

www.clicksujatha.com, www.tour.com/citizens, wwwwwwplus.com/cholai/; www.kanian.com, www.forumhub.com, www by wet/user senthil/pati.htm, www.naa-kanian.com; www.trailerpark.com/pa gnanil

தமிழ்த் தகவல்களைத் தேடுவதற்கான தேடல் இணையதளம்

www.tamilthedal.com; www.gurunji.com.

தமிழ் இணைய இதழ்களின் முகவரிகள்

www.intamm.com; www.kalkiweekly.com; www.pathivukal.comwww kumudam.com; www.tamilthinnai.com; www.worldtamil.com; www.tamile com, www.vaarpu.com, www.tamilmurasu.com; www.vanavil.com, www.arun com; www.tamiloviam.com; www.tamilcinema.com; www.muzhakkam.com www thatstamil.com, www.webulagam.com; www.thinnal.com; www.aaramthinam www.thisaigal.com.

தமிழ்ச் செய்தி நிறுவனங்கள்

www.dinamalar.com; www.kumudam.com; www.uthayan.com; www.perty org/viduthallai: www.tamilinfo.com; www.dinamani.com, www.maalaimalar.com www.dailythanthi.com; www.dinakaran.com; www.verakesri.lk; www.tamilmuras com, www.vikatan.com; www.kalkiweekly.com.

கலை தொடர்பான இணையதளங்கள்

www.handicraft-gifts.com, www.kalakshetra.org: www.bharathanatyam.com www.tamils.com; www.computer-today.com.

முடிவுரை

இவை தவிர இணையச் செய்தி ஊடகங்களும் தமிழ் வளர்க்கும் பணியைச் செய்கின்றன. ஒலிபரப்பு ஊடகம், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி இவை இணையவழியிலேயே இருந்த இடத்திற்கே வந்து சேருகின்றன. இணைய இதழ்கள்,  மின் செய்தித்தாள்கள் போன்றனவும் தமிழ்மொழிக்கு மிக பெரிய பணியைச் செய்து வருகின்றன.

 

இணையவழிப் பரிமாற்றுப் பாதைகள் குறித்து எழுதுக.

 

இணையச் செய்தி ஊடகங்கள் அனைத்தும் செய்திகளை ஊடகத்தின் ஒரு பக்கம் மட்டுமே கொடுக்கின்றன. மின்செய்தித்தாள்கள், இணைய இதழ்கள் போன்றவை இவ்வாறே செயல்படுகின்றன. இணையவழிப் பரிமாற்றப் பாதைகள் என்பது இருபுறத்தில் இருப்பவர் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகிறது. அவையாவன, மின்னஞ்சல், காணொளி, ஆதிர்ஷ் (வைபர்), குழுச் செயலி (டீம் வியூவர்) போன்றனவாகும். அவை குறித்து இங்கு விளக்கப்படுகின்றன.

மின்னஞ்சல் (email)

எழுத அனுப்புவதற்கு அனுப்புபவர் மற்றும் பெற்றுக்கொள்பவரின் மின்னஞ்சல்  முகவரிகள் தேவைப்படுகின்றன. மின்னஞ்சல் 1. மின்னஞ்சல் தலைப்பு, 2. மின்னஞ்சல் உள்ளடக்கம் என்னும் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் உள்ளடங்கியுள்ளன. உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்குப் பல கோடி மின்னஞ்சல்கள் பரிமாறப்படுகின்றன

காணொளி

ஒரு நொடியில் நிகழும் ஒரு காட்சியை நொடிக்கு 24 முறை அல்லது அதற்கும் அதிகமான தடவையில் ஒளிப்படமாக எடுத்து, பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அப்படங்களை ஒரே திரையில் ஒருங்கே விழுமாறு செய்தல். நிகழ்வுகள் திரையில் நடப்பது போன்று தோற்றம் அளிக்கும். இத்தகைய அசையும் படிமங்களின் வரிசை நிகழ்படம் என்றழைக்கப்படுகிறது.

அதிர்வி (வைபர்)

உடனுக்குடன் செய்தியனுப்ப உதவும் மென்பொருளாகும். இதைச் செயலியில் இணையவழி ஒலிப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.  நுண்ணறிப் பேசிகளுக்கான இந்தச் செயலியை வைபர் மீடியா என்ற நிறுவனம்  உருவாக்கியுள்ளது. இந்தச் செயலியில் குரல், காணொளி, படங்கள் முதலியவற்றைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

மைன் ஆண்ட்ராய்டு இயங்குதளம், பிளாக்பெர்ரி, சீரிஸ் 40, சிம்பியன் இயங்குதளம், முடிரோசாப்ட் விண்டோஸ், சிரிஸ் இ, ஓம்பியன்வெல் போன்றன இத்தகைய இயங்குதளத்திற்கு சான்று ஆகும். இந்தச் செயலியை மாதந்தோறும் 10 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

குழுச் செயலி (Team Viewer)

Viver-இது ஒரு கணிப்பொறி மென்பொருளாகும். இது ஒரு கணினியையோ, கைப்பேசியையோ, இணையத்தின் மூலம் தொலைவிலுள்ள மற்றொன்றுடன் இணைத்து அதைக் கட்டுப்படுத்தவும், இயக்கவும், தரவுகளைப் பரிமாறிக்கொள்ளவும் உதவுகிறது. இதன்மூலம் இணையவழிக் கூட்டங்களை நடத்தவும், கலந்துரையாடல்களை நடத்தவும் முடியும். Microsoft Windows இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட கணிப்பொறியிலும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசியிலும் தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கிறது. வணிக நிறுவனங்களுக்கெனத் தனிக்கட்டணம் செலுத்திப் பெறும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள்மீட், சூம் போன்றவற்றைச் சான்றுரைக்கலாம்.

இணையத் தேடல் கையுதவிகள்

பயனாளர்களாகிய நாம் நமக்குத் தேவையான தரவுகளைக் கணினியின் இணையப்பக்கங்கள் மூலம் விரைவில் பெற்றுக்கொள்வதற்குத் தேடுபொறிகள் உதவுகின்றன. உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான எழுத்துருக்கள் (Fonts) தமிழுக்கு மட்டுமே உள்ளன. எழுத்துருவில் ஏற்படும் சிக்கல்களை பூனிகோட் என்னும் எழுத்துரு மாற்றித் தருகின்றது. இதில் தேடு பொறி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

தேடற்பொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில் மிகுந்து கிடக்கும் தகவல்களில் இருந்தோ, கணினியில் இயங்கும் தகவல்களில் இருந்தோ தமக்குத் தேவையான தகவல்களைப் பெற உதவுகிறது. வேறு சில தேடு பொறிகள் உள்ளூர் வலையமைப்பை மாத்திரமே தேடும். இவை தேடு பொறிகள் பல பில்லியன் பக்கங்களிலிருந்து தமக்குத் தேவையான பொருத்தமான பக்கங்களைத் தேடித் தரும்.

தமிழ் எழுத்துரு மாற்றிகள்

உலக நாடுகளில் இருக்கும் பலரும் அவர்களுக்குத் தெரிந்த எழுத்துருக்களை உருவாக்கினர். இது சுமார் 250 எழுத்துருக்களாக இன்று உள்ளன. இதனால் சிக்கலும் உருவாகியது. இதற்குத் தீர்வாக உலகெங்கும் பொதுவான எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. * உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் பயன்படுத்துவதற்கு ஒருங்குறி (Umicode Front) என்ற எழுத்துவை உருவாக்கினர். இதனால் தமிழுக்கான எழுத்துரு பிரச்சினைகளைத் தீர்ந்தது எனலாம்.

எழுத்துரு மாற்றிகள்

ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு முன்பு கணினியில் உருவாக்கப்பட்ட பிற எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதற்கு எழுத்துரு மாற்றிகள்தேவைப்பட பல எழுத்துரு மாற்றிகளும் உருவாக்கப்பட்டன.

www.suratha.com/reader.htm, www.higopi.com/adhiyaman, www.islamkalvi.com,  http://kandupidi.com/converter, http://www.tamillexicon.com/vo/bamini/unicode, முதலானவைவற்றை சான்று காட்டலாம். NHMConverter. App களும் எழுத்துரு மாற்றிகளாகப் பயன்பட்டன.

இணைய உலாவிகள் அல்லது மேலோடிகள் (Browsers)

ஓர் இணைய உலாவியின் நோக்கம் தகவல் வளங்களைப் பெறுவதோடு, பயனரின் சதனத்தில் அவற்றைக் காட்சிப் படுத்துவதாகும். வலைப்பக்கம் மீண்டும் பெறப்பட்டவுடன் உலாவியின் மொழிபெயர்ப்பு இயந்திரம் பயனரின் சாதனத்தில் காண்பிக்கிறது. இதில் உலாவியால் ஆதரிக்கப்படும் படம் மற்றும் வீடியோ வடிவங்கள் அடங்கும். அனைத்து இணைய உலாவிகளின் செயல்பாடுகளும் ஒரே மாதிரியானவையே. பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு இணைய உலாவிகள் உள்ளன. வைய விரிவு வலை, மொசைக், நெட்ஸ்கேப் நேவிகேட்டர்,  இண்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்ஃபாக்ஸ்,  கூகுள் குரோம் போன்றன இணைய உலாவிகளுக்குச் சில சான்றாகும்.

வையவிரிவு வலை

வைய விரிவு வலையை டிம் பெர்னர்ஸ் லீ கண்டுபிடித்தார். வலைப் பக்க குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக இது நெக்ஸஸ் எனப் பெயரிடப்பட்டது.

மொசைக்

1983இல் தொடங்கப்பட்ட இணைய உலாவி ஆகும்.  

நெட்ஸ்கேப் நேவிகேட்டர்

 1980 இல் புகழ்பெற்ற இணைய உலாவி 1984-இல் வெளியிடப்பட்டது.

 இண்டர்நெட் எக்ஸ்புளோரர்

இது மைக்ரோசாப்ட்டினால் விருத்தி செய்யப்பட்ட உலாவியாகும். இது 1948-இல் இருந்து இயங்குதளத்தின் ஓர் அங்கமாக வெளிவந்தது.

இணைய அரட்டைகள்

இணைய அரட்டையின் மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவருடன் தொடர்பு கொள்ளலாம். இணைய உரையாடல் எழுத்து, பேச்சு  மூலமாக உடனுக்குடன் உரையாட உதவுகின்றன. மின்னஞ்சல் போன்று இல்லாமல், உடனடியாக மற்றவருடன் உரையாட எதுவாக இருப்பதால் அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது. பல இலக்கியச் செயல்பாடுகளுக்கும் உதவுகின்றன. ஆய்வுகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் பதிவு செய்கின்றனர். போழுதுபோக்கிற்காக இதனைப் பயன்படுத்துகின்றனர்.

முகநூல், கிச்சகம் அல்லது குறும்பதிவு (Twitter), ஸ்கைப், புலனம் (வாட்ஸ்அப்)

பல இணைய அரட்டைகளாக உள்ளன.

முகநூல்

முகநூல் 2004-இல் தொடங்கிய இணையவழிச் சமூக வலையமைப்பு நிறுவனமாகும். இன்றைய முகநூலில் பதிமூன்று வயதான நபர்கள் சேரலாம். அலெக்ஸா நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி முகநூல் இரண்டாவது மிகப் பிரபலமான இணையதளமாகும்.

கீச்சகம் அல்லது குறும் பதிவு (Twitter) 

டுவிட்டர்-இது அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட ஒரு சமூக ஊடக வலைத்தளமாகும். இதன் தற்போதைய பெயர் எக்ஸ் ஆகும். இது 500 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இதில் பயனர்கள் குறுஞ்செய்திகள், ஒளிப்படங்கள், நிகழ்படங்களை குறுகிய இடுகைகள் மூலம் தகவல்களைப் பகிரலாம். நேரடிச்செய்தி அனுப்புதல், நிகழ்படம் மற்றும் ஒலி அழைப்பு நூற்குறி, பட்டியல்கள் ஆகிய வசதிகள் இதில் உள்ளன.

மார்ச் 2006-இல் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பீஸ் ஸ்டோன் வில்லியம்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டு, அதே ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

ஸ்கைப் (Skype) 

இது இணையம் ஊடாக ஒலி ஒளி அழைப்புகளையும், அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஒரு கணினி மென்பொருள் ஆகும். இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குவதோடு, தொலைபேசி மற்றும் கைப்பேசிகளுக்கு ஏற்கெனவே பணம் கட்டியிருந்தால், அதிலிருந்து அழைப்புகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி அழைப்பினை ஏற்படுத்த இயலும்.

நிகழ்கலை உரையாடல், கோப்புப் பரிமாற்றம், ஒளித் தோற்ற உரையாடல்களையும் நிகழ்த்த இயலும். ஈபே என்கிற இணைய வணிக நிறுவனத்தினால் செப்டம்பர் மாதம் 2005-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

கூகுள் (Google)

கூகுள் என்பது பன்னாட்டு இணைய மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. தேடு பொறி இதன் முதன்மையான சேவை ஆகும். இந்நிறுவனத்தின் சேவைகளாக, கூகுள் மெயில், கூகுள் டாக்குமெண்டுகள், கூகுள் ப்ளஸ், கூகுள் டாக், கூகுள் வரைபடம், கூகுள் நியூஸ், பிளாக்கர், யூடியூப் போன்றன.

மேலும் கூகுள் குரோம், கூகுள் கோப்புகள், கூகுள் சந்திப்பு, கூகுள் தாள்கள், கூகுள் புகைப்படங்கள், கூகுள் விசைப்பலகை, கூகுள் டிரைவ், கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளும் உள்ளன.

புலனம் (Whatsapp - வாட்ஸ்அப்)

(Whatsapp) என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை  (Proprietary) ஒரு செய்திப் பரிமாற்றச் செயலி ஆகும். பகிரிஅல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் என்றும் அறியப்படுகிறது. இச்செயலி மூலம் இணையத்தின் உதவியுடன் செய்திகளை வாட்ஸ்அப் மற்றொரு தனி நபருடனோ அல்லது குழுவுடனோ பகிர்ந்துகொள்ளலாம்.

இணையத்தின் வளர்ச்சியினால் செய்தி பரிமாற்ற கருவிகள் பல்கிப் பெருகி வளர்ந்துள்ளன.

இணையவழி வணிகம் குறித்து விளக்குக.

இணையவழி வணிகம் மின்னணு வர்த்தகம் என்றும் அழைக்கப்படுகிறது. தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குவது மற்றும் விற்பது, பணம் பரிமாற்றம் செய்வது மற்றும் மின்னணு ஊடகம் வழியாக தரவை மாற்றுவது என அனைத்து நிலைகளிலும் இணைய வழி வாணிகம் நடைபெற்று வருகிறது. இது தூரத்தையும், நேரத்தையும் கட்டுப்படுத்துவதால் வணிகம் செய்ய மக்களை அனுமதிக்கிறது. சிறிய அளவிலான நிறுவனங்கள் முதல் சந்தை ஏஜெண்டுகள் வரை அனைவரும் இணையவழித் தொழிலில் முதலீடு செய்கிறார்கள்.

இணையதளம் வணிகத்திற்கு ஏற்றத் தளமாக உள்ளது. வூடியூப்பில் அனைத்தும் செய்திகளும் உள்ளன.

மின்னூல் வணிகம்

மின்னூலானது பொதுவாகப் பதிப்பாளர்களால் மின்னூலினுடைய எண் ஊடங்கள் மூலம் தமது புத்தகங்களை விநியோகிப்பதற்காக உருவாக்கப்படுகிறது.  கணினியில் படிப்பதற்காக ஒளிப்படுத்தப்பட்டுக் கோப்புகளாகத் தயார் செய்யப்பட்டன. மின் புத்தகங்களைப் படிப்பதற்கு பல கருவிகள் உருவாக்கப்பட்டன. இப்போது மின்னூல்கள் பல கோப்பு அமைப்புகளில் விற்கப்படுகின்றன. Considered as one of the fine arts என்ற புத்தகமே முதல் மின் புத்தகமாகும். மின்புத்தகங்களின் விற்பனை 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  

வலையொளி (You Tube)

வலையொளி என்பது ஓர் அமெரிக்க நாட்டு நிகழ்நிலைக் காணொளிப் மற்றும் சமூக ஊடகத் தளமாகும். இசைக் காணொளிகள், குறும்படம், ஆவணத் திரைப்படம்,  திரைப்பட முன்னோட்டங்கள், நிகழ்படத் துண்டுகள், முழுநீளத் திரைப்படம், குரல் பதிவுகள், நேரடி ஒளிபரப்புகள் யாவும் பல யூடியூபர்களிடமிருந்து பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இப்போது வலைதளத்தில் உள்ள காணொளிகளைத் தரவிறக்குவது சட்டக் குற்றமாகும். தரவிறக்கம் செய்யும் சேவை நிறுவனங்களையும் யூடியூப் நிறுவனம் கண்டித்துள்ளது. முன்பு தரவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

--------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி