பழந்தமிழரின் களவு வாழ்க்கை

                                 


திணை வாழ்வியல் - களவு 


பழந்தமிழரின் களவு வாழ்க்கை முறை குறித்து எழுதுக.

முன்னுரை

பழந்தமிழரின் வாழ்வியலை உணர்த்தும் இலக்கியங்களுள்  பெரும்பாலானவை அகப்பொருளையே பேசுகின்றன. எட்டுத்தொகையுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை அகப்பொருள் சார்ந்தவை ஆகும். அகம் களவு, கற்பு என்னும் இரு நிலைகளில் காணப்படுகிறது. களவு வாழ்க்கை முறை குறித்து இங்கு விளக்கப்படுகிறது.

அகத்திணை

  • பலவகையான ஒத்தத் தன்மைகளைக் கொண்ட ஒருவனும் ஒருத்தியும் கூடும் காலத்தில் பிறப்பது இன்பம். 
  • அது இன்னது என்று சொற்களால் விளக்க முடியாது, அவர்கள் உள்ளத்தால் மட்டும்தான் உணர முடியும். 
  • அத்தகைய இன்பம் அகம் எனப்பட்டது. 
  • அகத்தில் காதல் மலர்கிறது. 
  • ஆண் பெண் விருப்பத்தினால் இத்திணை உண்டாகிறது.

களவு வாழ்க்கை

  • மணப்பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் தாமாகக் கூடும் கூட்டம் களவு எனப்படும். 
  • காதலர் இருவர் ஒருவரை ஒருவர் கண்டு உள்ளம் பறிகொடுத்து விட்டால் மீண்டும் அவர்கள் வேறு யாரையும் காதலிப்பதில்லை. 
  • அவர்களுடைய திருமணம் எந்த இடையூறும் இன்றி நடைபெற, காதலின் தோழனும் காதலியின் தோழியும் துணை நிற்பர்.
  • அகப்பொருள் இலக்கணத்தில் காதலனைத் தலைவன் என்றும் காதலியைத் தலைவி என்றும் அழைப்பது மரபு. 
  • காதலுக்கு இடையூறு நேர்ந்தால் தலைவனும் தலைவியும் சேர்ந்து ஊரைவிட்டு வெளியேறி விடுவர். 
  • இதனை உடன்போக்கு என்பர். 
  • அவர்களது உறுதியைக் கண்டு பெற்றோர்கள் திருமணம் முடித்து வைப்பர்.
  •  களவு ஒழுக்கம் இரண்டு மாத காலத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது என்பது வரையறையாக இருந்தது.

மடல் ஊர்தல்

  • தன் காதலித்த பெண்ணை மணக்க வாய்க்காத ஆண்மகன் சில சமயம் மடல் ஏறுவதுண்டு. 
  • பனங்கருக்கினால்  குதிரை ஒன்று செய்து அதன் மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவந்தீட்டிய கொடி ஒன்றைத் தன் கையில் ஏந்திக் கொள்வான்.  
  • இந்த ஊர்தியைத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்போது உடலில் குருதி வெளிப்பட பெண்ணின் உற்றார் அவனுக்கே அப்பெண்ணை மணம் முடித்து கொடுப்பார்கள்.
  • பெண்கள் மடலேறும் வழக்கம் அக்காலத்தில் இல்லை. 
  • பிற்காலத்தில் தலைவி ஒருத்தி பிரிவாற்றாமை மிகுதியால் மடலூரத் துணிந்தாள் என்று புதுமையைப் புகுத்தித் திருமங்கையாழ்வார் பாடல் பாடியுள்ளார்.

முடிவுரை

          அகத்திணை சார்ந்த வாழ்வியல் முறைவில் களவும் அக்காலத்தில் வரையறைக்குட்பட்டு அறநெறியில் இருந்தன என்பதை அறிந்துகொள்ளலாம்.


--------------------------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி