பழந்தமிழரின் கற்பு வாழ்க்கை


 
                                        திணைவாழ்வியல் - கற்பு

பழந்தமிழரின் கற்பு வாழ்க்கை குறித்து எழுதுக?

  •  களவு வாழ்க்கையிருந்து கற்புவாழ்க்கை தோன்றுகிறது. 
  • பழந்தமிழர் பெண்ணின் கற்பைப் போற்றினார். 
  • ஆணுக்கு அப்படியான எந்தக் கட்டுக்கோப்பும் இருந்ததாகத் தெரியவில்லை.
  • மருத நிலத்தில் பரத்தையர் ஒழுக்கம் குறிப்பிடப்படுகின்றது. 
  • தலைவன் பரத்தையர் பொருட்டு தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். ய
  • பிரிவு காலத்தில் தலைவி ஊடி இருப்பாள். 
  • தலைவியின் ஊடலைத் தீர்க்க தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன்,  பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய அனைவருக்கும் உரிமை உண்டு. 
  • திருமணமான பிறகு கணவன் மேலும் கல்வி கற்கவோ பொருள் தேடவோ தன் மனைவியை விட்டு பிரிய நேர்வதுண்டு.  
  • கல்விக்காக மூன்றாண்டுகள் பிரிந்து செல்லலாம். 
  • போர்ப் பணி அல்லது பொருள் தேடுதல் என்ற காரணங்களுக்காகக் கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றால் ஒரு ஆண்டுக்கு மேல் நீடிக்க கூடாது என்ற வரன்முறை அக்காலத்தில் இருந்துள்ளது. 
  • இப் பிரிவு காலத்தில் தலைவி அவனுடன் சொல்லும் வழக்கம் இல்லை. 
  • இவை அக்கால கற்பு மரபாக இருந்துள்ளது.
பண்டைய தமிழரின் கொள்கை
  • இல்லற வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக அமைவது நன் மக்கட் பேறு என்பது பண்டைய தமிழரின் கொள்கையாகும். 
  • மக்கள் பேறு கொண்ட பெண்ணே அக்குடும்பத்தின் தலைவி ஆகிறாள். 
  • ஆண் மக்கள் பெறுவதே தன் கடமை எனக் கருதினர். 
  • அவர்களுக்குப் போர் பயிற்சி தருவது அதாவது  சான்றோனாக்குதல் தந்தையின் கடமை. 
  • வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லருக்குக் கடமை. 
  • நன்னடை எனப்படும் விளைநிலங்களைக் கொடையாக வழங்குதல் மன்னருக்குக் கடமை. 
  • பிறந்த பிள்ளைக்குரிய கடமை போரில் யானைகளைக் கொல்வதுதான் என்பது புறநானூறு கூறும் அறம் ஆகும்.

  1. சங்க கால மகளிரின் கைம்மை நோன்பு குறித்து விளக்குக.

  • கணவனை இழந்த மகளிர் அக்காலத்தில் உடன்கட்டை ஏறும்  வழக்கத்தைக் கொண்டிருந்தனர். 
  • கைம்மை நோன்பு நோற்கும் வழக்கமும் பெண்கள் மேற்கொண்டிருந்தனர்.
  • கைம்பெண்கள் நெய் உண்பது இல்லை. 
  • அவர்கள் தண்ணீர்ச் சோற்றைப் பிழிந்து அதில் அரைத்த எள்ளையும் புளியையும் கூட்டி வேக வைத்த வேளைக் கீரையை உண்டனர்.
  • வெறுந்தரையில் படுத்துத் தூங்க வேண்டும் என்பதும் தலையை மழித்துக் கொள்ள வேண்டும் என்பதும் வழக்கமாக இருந்துள்ளது. 
  • தமிழ்நாட்டில் குடியேறிய ஆரியரும் இக்கைம்மை நோன்பை மேற்கொண்டனர்.
...............................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி