அறிவியலுக்கும் தமிழருக்குமான தொடர்பு
அறிவியலுக்கும் தமிழருக்குமான தொடர்பு குறித்து விளக்குக. முன்னுரை அறிவியல் மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்துள்ள ஒன்றாகும். மனிதன் சிந்திக்கக் தொடங்கிய தொடக்கக் காலம்தொட்டு இன்றுவரை மனித வாழ்வியல் அறிவியலோடு கட்டமைக்கப்பட்ட ஒன்றாக உள்ளமு. மனித வாழ்வியலை அறிவியல் எளிமையாக்கியுள்ளது. அறிவியலுக்கும் தமிழருக்குமான தொடர்பு குறித்து இங்கு விளக்குகிறது. அறிவியல் விளக்கம் அறிவியல் (Science) என்பது, "அறிந்து கொள்ளுதல்" எனப் பொருள்படும். இது Scientia எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இயற்கை, உயிர்கள், உலகம் மற்றும் சமூகத்தைத் தரவுகளின் அடிப்படையில் ஒரு முறையான வழிமுறையைப் பின்பற்றிப் புரிந்துகொள்ளுதல் அறிவியல் ஆகும். ஒன்று நிகழ்வது ஏன்? எதனால்? எப்படி? என்ற வினாக்களின் அடிப்படையில் ஆராய்ந்து அறிதலே அறிவியல் எனலாம் அறிவியல் வகைகள் அறிவியலை மூன்றாகப் பகுத்து ஆராயலாம். அவையாவன, இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசா...